பிரபாகரன் வாழ்வும் இயக்கமும்
பிரபாகரன் வாழ்வும் இயக்கமும், இந்திய சமூகநீதி ஊடக மையம், புதுயுகம், சென்னை, விலை 70ரூ. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவர் போர் புரிந்த கால் நூற்றாண்டு காலத்தில், பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து இருக்கிறார். அவற்றை தொகுப்பாசிரியர் பவா சமத்துவன் அற்புதமாக வரிசைப்படுத்தி இருப்பதால், இது பிரபாகரனின் சுயசரிதைபோல அமைந்துள்ளது. தன்னுடைய இளமைப்பருவம் பற்றி பிரபாகரன் கூறியுள்ள தகவல்கள் மனதைத் தொடுகின்றன. மகாபாரதத்தில் கர்ணனின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் செயல்பாடுகள் தன்னை வெகுவாக ஈரத்ததாகவும் கூறியுள்ளார். […]
Read more