மந்திரக் கைக்குட்டை

மந்திரக் கைக்குட்டை, கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் கற்பனையை வித்தியாசமாகத் தூண்டக்கூடிய இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்தவைதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கதை வடிவிலேயே அழகாகச் சில கதைகள் சொல்லிச் செல்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.   —- மின்மினி, மொழிபெயர்ப்பு என். மாதவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளருமான என். மாவனின் […]

Read more

மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி, உதயசங்கர், நூல்வனம், குழந்தைகளுக்கான நேரடிக் கதைகள், மலையாள மொழிபெயர்ப்பைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உதயசங்கர் எழுதிய நேரடிக் கதைகளின் தொகுப்பு இது. வித்தியாசமான முன் அட்டையுடன் வந்துள்ளது. இந்தக் கதைகளில் சில ‘மாயாபஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்து மகிழ்ந்தவைதான். பொதுவாக ராஜாக்களைப் பாராட்டும், ராஜாக்களைப் புகழும் கதைகளையே அதிகம் கேட்டிருப்போம். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் ராஜாக்களின் கோமாளித்தனங்களைக் கேலி செய்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

மதனகாமராஜன் கதைகள்

மதனகாமராஜன் கதைகள், என்.டி.நந்தகோபால், பயனீர் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 230ரூ. நம் நாட்டுப் பாரம்பரியக் கதைகளுக்கே உரிய கற்பனை வளமும் சூட்சுமங்களும், சுவையும் மிக்க கதைகள் இவை. மென்மையான காதல் சுவையுடன் கலகலப்பாகக் கொண்டு செல்கிறது. அதே வேளை, கண்ணியம் மீறாத நேர்த்திமிக்க கதைகள் இவை. நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

பையன் கதைகள்

பையன் கதைகள், மலையாளம் வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்திய அகாதெமி, விலை 365ரூ. சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூல். இதில் 73 கதைகள் இடம் பெற்றள்ளன. ஒளி வீசும் கண்கள் படைத்த பையன், எண்ணெய் மின்னும் முகத்தில் எப்போதும் ஒரு தியாகியின் பாவம், ஒவ்வொரு நிமிடமும் அவசியமின்றி மரணிப்பது போலவும், எத்தனை முறை மரணித்தாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது போலவும் ஒரு பாவனை, கற்பனையில் ஓர் இரும்புச் சிலுவையை தூக்கி சுமப்பது போன்ற உணர்ச்சி வெளிப்பாடு, இவர்தான் பையன். […]

Read more

கலைவாணி டீச்சர்

கலைவாணி டீச்சர், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கலைவாணி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை எழுதியுள்ள திருவாரூர் பாபு, மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபோதும் உணர முடிகிறது. கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. நெடுநேரம் அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டகலாமல் உயிர் பெற்று உலா வருகின்றன. புத்தக வடிவமைப்பு பிரமாதம். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- சென்னை வானொலிப் பொழிவுகள், ஏகம் பதிப்பகம், விலை 30ரூ. […]

Read more

நபித்தோழர்களின் சிறப்புகள்

நபித்தோழர்களின் சிறப்புகள் (முதல் பாகம்), ஜுபைர் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. நபித்தோழர்களின் சிறப்புகள் குறித்து அரபி மொழியில் அஷ்ஷைகு முஸ்தபா அல்அதவி எழுதிய நூல் சிறப்புக்குரியது. அதைத் தமிழில் எம். அப்துல் ரஹ்மான் பாஜில் பாகவி அழகுற மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலில் கலீபாக்கள் அபூபக்கர் சித்தீக், உமர், உஸ்மான், அலி மற்றும் தல்ஹபா, ஜுபைர், அபூ உபைதா, அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் போன்ற நபித் தோழர்களின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- என்னோடு வந்துவிடு, ஸ்ம்ரித்திராம், சிவாலயம், விலை […]

Read more

குருவியும் குரங்கும்(குழந்தைகளுக்கான புத்தகங்கள்)

குழந்தைகளுக்கான புத்தகங்கள், எஸ்.எஸ். பப்ளிகேஷன், விலை 25ரூ. ‘குருவியும் குரங்கும்’, ‘புத்திசாதுர்ய வாத்து’, ‘பேராசைக்கார நரி’, ‘புத்திசாலி முயல்’, ‘ஒட்டகமும் நண்பர்களும்’, ‘முட்டாள் ஆமை’, ‘சிங்கமும் சுண்டெலியும்’ ஆகிய தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வண்ணப்படங்களுடன் எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 25ரூ. நன்றி: தினத்தந்தி, 14/9/2016. —-   பூனை மீசை சிம்கார்டு கதைகள், இயக்குனர் ‘டூ’ ஸ்ரீராம், தமிழ் அறிவு பதிப்பகம், விலை 50ரூ. சிறிய வடிவம் கொண்ட சிம்கார்டு மூலம் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும். அதே […]

Read more

நாராய் நாராய்

நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 148, விலை 115ரூ. கடந்த 2015-லிருந்து தற்போது வரை விஜயபாரதம், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, ஓம்சக்தி முதலிய இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு இது. வனத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஆட்டனத்தி, தனது பணி அனுபவங்களை அருமையான நடையில் சிறுகதைகளாக வடித்துத் தந்திருக்கிறார். நூலின் தலைப்பான “நாராய்… நாராய்…‘’ என்பது 13 கதைகளுள் ஒன்று. நூலைப் படித்தால், காடு, மலைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். காடுகளில் […]

Read more

பூமியின் பாடல்கள்

பூமியின் பாடல்கள் (வட கிழக்கு இந்தியக் கதைகள்), கைலாஷ் சி. பரல், தமிழில் சுப்பிரபாரதி மணி, சாகித்ய அகாடமி, பக். 204, விலை 140ரூ. வடகிழக்கு மாநிலங்களின், 16 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட நூல் இது. பதிப்பாசிரியர்: கைலாஷ். சி.பரல் திரட்டிய, 15 எழுத்தாளர்களின் கதைகளை, தமிழாக்கம் செய்திருப்பவர் சுப்பிரபாரதி மணி. அசாம், மணிப்பூரி, மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து பிரதேச, 16 கதைகளில், சில நெடுங்கதைகள், பல் வகையான மையப் பொருள்களில், அவரவருக்கே உரித்தான நடையில் படைத்தவற்றில், சில கருத்துமிக்க அழுத்தமான […]

Read more

நிம்மதி

நிம்மதி, இடைமருதூர் கி. மஞ்சுளா, கலைஞன் பதிப்பகம், பக். 168, விலை 180ரூ. இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மலேசியாவில் வெளியிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 22 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஓடும் ரயிலில், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது, பேருந்தில், ஆட்டோவில், மருத்துவமனையில், நெடுந்தூர ரயில் பயணத்தில்… ஏன், கனவில் கூட தன்னைச் சுற்றி நிகழ்ந்த – நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாக்கியுள்ளார் நூலாசிரியர். தற்கால இளைஞர்களின் சுயநலப் போக்கை “சூளை’ சிறுகதை படம் பிடித்துக் காட்டுகிறது. “நிம்மதி’ […]

Read more
1 32 33 34 35 36 80