சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம்

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம், நாலுமாவடி கே.பி. கணேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இந்தியாவின் ராணுவ பலம் தேசபக்தியைத் தூண்டும் விதத்தில், “நம் நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உதவிடுவோம்” என்ற தலைப்பில் நாலுமாவடி கே.பி.கணேசன் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது புதுமையான புத்தகம். ஓரங்க நாடக பாணியில் நூல் தொடங்குகிறது. மாணவி ஜெயா (ராணுவ அதிகாரியின் மகள்) பாரதி டீச்சர் ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல் நாட்டுப்பற்றை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. நூலின் இடையே இந்தியாவின் ராணுவ பலம், அண்டை நாடுகளின் […]

Read more

கௌதம நீலம்பரன் நாடகங்கள்

கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]

Read more

போராட்டம்

போராட்டம், முனைவர் பெ. சரஸ்வதி, காவ்யா, விலை 250ரூ. இந்தி இலக்கிய உலகில் ‘பிரேம்சந்த்’ என்ற பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. முப்பதாண்டு கால அவரது இலக்கியப் பணியில் 12 நாவல்களையும், கிட்டத்தட்ட 300 சிறுகதைகளையும், 3 நாடகங்களையும் எழுதியுள்ளார். அவது படைப்புக்காகவே அவரது காலம் ‘பிரேம்சந்த் யுகம்’ என்று அழைக்கப்பட்டது. அவரது போராட்டம் என்ற நாடகத்தை தமிழில் முனைவர் பெ. சரஸ்வதி மொழிபெயர்த்துள்ளார். இந்த நாடகம் 93 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாய, பொருளாதார நிலையையும், மனித வாழ்வின் போராட்டத்தையும் நமக்குப் படம் பிடித்து காட்டுகிறது. […]

Read more

மோடி கேள்விகள் பதில்கள்

மோடி கேள்விகள் பதில்கள், குமுதம் வெளியீடு, பக். 64, விலை 65ரூ. பிரதமர் மோடி குமுதம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குஜராத் முதல்வராக இருந்தபோது குமுதத்தில் அளித்த பதில்களின் தொகுப்பு இது. மோடியுடன் பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்ற இளைஞர்களின் கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. குமுதத்தில் வெளிவந்ததை குமுதம் பு(து)த்தகம் நூலாக கொண்டுவந்துள்ளது. மதச்சார்பின்மை, அரசியல் வாழ்வு, உணவுப் பழக்க வழக்கங்கள், நேதாஜி பற்றிய விளக்கம், மகாபாரதம், பெண்கள் பற்றிய மதிப்பீடு, இலவசங்கள் பற்றிய கருத்து, நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ். பற்றிய விளக்கம், ஜெ.யின் […]

Read more

பாஸன் நாடகங்கள்

பாஸன் நாடகங்கள், தமிழில் அ, ரேவதி, காவ்யா, பக். 194, விலை 180ரூ. காதலா? கடமையா? பழமையும், பெருமையும் மிக்க செம்மொழி சமஸ்கிருதம். ஜெர்மன் மொழியில் இதன் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கிருந்து ஆங்கிலம் மூலம் உலகெங்கும் உலா வருகிறது. தமிழிலும் சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமாற்றம் பெறுகின்றன. ஆனால், தமிழை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, சமஸ்கிருதத்தை வளரவிடாமல், வரவிடாமல் தடுத்தோர், இன்றும் உள்ளனர். அதையும் மீறி சமஸ்கிருதம் – தமிழ் உறவு வளர்கிறது. இத்தகு மொழிப்பாலத்தில் மகாகவி பாஸன் நாடகங்கள் நான்கும், வெகு அழகாக தமிழில் தற்போது […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி.கா. மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்டவீரர், சீறாப்புராண உரையாசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட கவி.கா. மு. ஷெரீப், தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிதயர் ஆற்றியிருக்கும் அரும்பணிக்கு அடையாளமாகவும் திகழ்பவர். உயிர் நேயம் மனித உணர்வின் உச்சம். இதை இஸ்லாம் இயல்பான வாழக்கை முறைக்குள் எந்தளவு நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கும் நூல் இது. சமூக நல்லிணக்கம் நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. ஏழைகள் நிலவில் இருந்தால், அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத்தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைத்த தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூல். தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது, சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான், பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் […]

Read more

ஈரம்

ஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ. எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை […]

Read more
1 2 3 4 5 6 7