ஓடாத குதிரைகள்

ஓடாத குதிரைகள், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நாடகங்கள் நம் கண்முன் நடப்பவை, ஆனால் வானொலி நாடகங்கள் நம் செவிகளின் வழியே பாய்ந்து, காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. ஆகவேதான் வானொலி நாடகம் என்பது, காற்றில் வரையப்படுகிற ஓவியம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், வானொலி நாடகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆற்றலும், அனுபவமும் உள்ளவர். அதற்கு ஓடாத குதிரைகள் என்ற இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. எந்தக் கருத்தையும், வெறும் பேச்சு அறிவுரையாக இல்லாமல், கலையோடு இணைந்து வழங்கினால், அது மக்களை எளிதில் சென்றடையும் என்ற உண்மையறிந்து, சிறு நாடகங்கள் மூலம், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார், வானொலி அண்ணா என்றழைக்கப்படும் என்.சி. ஞானப்பிரகாசம். எலும்பு முறிவு முதல், பல் பாதுகாப்பு வரை 22 அத்தியாவசிய சுகாதார நலன் குறித்து, சிறு நாடகங்கள் இயற்றியுள்ளார். அத்தனை நாடகங்களும், நகைச்சுவை பின்னணியில் அமைந்திருப்பது, ஆசிரியரின் அனுபவத்தை வெளிக்காட்டி […]

Read more

ஜோன் ஆஃப் ஆர்க்

ஜோன் ஆஃப் ஆர்க், தமிழில் சி. ஜெயாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. உயிருடன் எரிந்த உத்தமப் பெண்மணி என்றைக்குமே பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் போராடும் குணமுள்ளவர்களை விட்டு வைப்பார்களா என்ன? பதினைந்தாம் நூற்றாண்டில், தன்னுடைய பத்தொன்பது வயதில், பிரிட்டனுடன் மோதிப் பிரான்சு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டான் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைச் சூனியக்காரி என்று முத்திரை குத்தி உயிரோடு எரித்துக் கொன்றது ஆண்களின் அதிகார வர்க்கம். பிற்காலத்தில், 1920ம் ஆண்டில் இந்தப் பெண்மணிக்குக் கிறிஸ்துவத் திருச்சபையினரால் புனிதப் பெண்மணி என்ற […]

Read more

இடிந்தகரை சிந்தனைகள்

இடிந்தகரை சிந்தனைகள், சுப. உதயகுமார், இலக்கியச் சோலை, சென்னை, விலை 60ரூ. கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்திய போராட்டம் பற்றி சுப. உதயகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கடல் விவசாயம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாதி, மதம் கடந்து, சச்சரவுகள் துறந்து, உண்மை, ஒழுக்கம், உறுதியோடு ஆயிரம் நாட்கள் நாங்கள் நடத்தியது வெறும் போராட்டமல்ல. அது ஒரு தவம், வேள்வி, யாகம் என்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more

உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள்

உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள், திருமலை அம்மாள், உஷா பிரசுரம், பக். 160, விலை 120ரூ. இன்றைய நிலையில் பெண்கள், படித்து வேலைக்கு சென்று, தங்கள் சொந்த காலிலேயே நிற்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டாலும், அவர்கள் சார்ந்த பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. அவை, காலத்துக்கேற்றபடி வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கின்றன. அவற்றில் மாமியார் – மருமகள் பிரச்னையும் ஒன்று. இந்த பிரச்னையை உலகளாவிய பிரச்னையாகவே இந்நூலாசிரியர் பார்க்கிறார். மாமியார்களை ஐந்து வகையினராக பிரிக்கிறார். அவர்களை சமாளிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்கிறார். புதுதாக திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி, மாமியாரை […]

Read more

என் உயிரே என் உறவே

என் உயிரே என் உறவே, (நாவல் பாகம் 1, 2) பிரவீணா, அருண் பதிப்பகம், பக். 492, 412, விலை தலா 200ரூ. சினிமா ரசிகர்களுக்கு உகந்த நாவல், ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா. கதாநாயகி கீர்த்தனா, பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய்விடுகிறாள். எனவே கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு பாலா பண உதவி செய்கிறான் […]

Read more

கடவுளின் கைபேசி எண்

கடவுளின் கைபேசி எண், இ.சு. முரளிதரன், ஜீவநதி பப்ளிகேஷன்ஸ், பக். 76, விலை 200ரூ. ஈழத்துக் கவிஞர் இ.சு. முரளிதரனின் இச்சிறுகதைத் தொகுப்பு, ஈழத்து சிறுகதையின் போக்கு உலகச் சிறுகதைப் போக்குடன் இயைந்துபோகிறது என்பதற்கு உதாரணம். தொண்ணூறுகளுக்குப் பிறகான பின் நவீனத்துவப் பாணியிலான சிறுகதை வளர்ச்சிக்கு ஈழத்து அரசியல் சூழலும் பேரினவாத ஒடுக்குமுறையின் கொடூரமான நிலைமையுமே காரணம் என்பதற்கான சான்றாக கடவுளிக் கைபேசி எண் தொகுப்பு அமைந்துள்ளது. பாடக்குறிப்பு, பாராட்டுச் சான்றிதழ், கைபேசி உரையாடல், AB+ குருதியும் நீலநரியும் ஆழ்ந்த அர்த்தம் தருபவை. ஈழத்தின் […]

Read more

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், மீண்டும் பாடம் கேட்கிறேன், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந. முத்துமோகனின் நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 196, விலை 160ரூ. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனை ஓர் ஆய்வாளர் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர் – தமிழ் இலக்கியங்களில் ஆர்வமும், புலமையும் உடையவர் – மனித உரிமை சார்ந்த பல்வேறு இயக்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் ஆகியவற்றில் தொடர்புடையவர் என்று மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. மனித வாழ்வு சார்ந்த […]

Read more

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 304, விலை 375ரூ. தமிழில் கலை தொடர்பான ஆய்வுகள் குறைவு. அதிலும் கோவில் தொடர்பான பண்பாட்டுக் கலை பற்றிய ஆய்வு மிக குறைவு. நூலாசிரியர் இந்த துறையில் கவனம் செலுத்தி, நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள் குறித்து, ஓர் அருமையான ஆய்வு நூலை படைத்துள்ளார். நூலுக்கு ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி அளித்த அணிந்துரையில் இதுவரை நுண்ணாய்வு செய்யப்படாத ஒரு துறை இது என கூறியிருப்பது முக்காலும் உண்மை. நாயக்கர் கால […]

Read more
1 3 4 5 6 7