உயிரே உனக்காக

உயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ.   புதினங்கள், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். […]

Read more

இதயம் காப்பது எளிது

ஸ்ரீராமாநுச நூற்றந்தாதி, தி. பாஷ்ய ராமாநுசதாசன், விக்னேஷ் வெளியீடு, 26 – நியூ காலனி, ஜோசியர் தெரு, சென்னை – 34, பக்கம் 160, விலை 100 ரூ.   வைணவர்கள் தலைவணங்கிப் போற்றும் தூய தலைவர் ராமாநுசர். அவரைப் போற்றி, திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த அந்தாதி நூல் இது. இந்நூலில் 108 பாடல்கள் அந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன. உரையாசிரியர் வைணவக் கொள்கைகளைப் பரப்பும் பணியினை மேற்கொண்டவர். ராமாநுசர் பெயரால் அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் நுழைவுவாயில்கள் அமைத்தவர். வைணவக் கொள்கைகளில் தெளிந்த அறிவு கொண்டு ஆழங்கால்பட்டவர், […]

Read more

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும்

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும், பேராசிரியர் ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், 1, தாமஸ்நகர், சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை – 15, விலை 500 ரூ. சிக்கலானதும் கண்டுபிடிக்க முடியாததுமான குற்ற வழக்குகள் வந்தால் அனைவரும் தேடும் நபர் பேராசிரியர் ப. சந்திரசேகரன். ‘தடய அறிவியல்’ சந்திரசேகரன் என்றால், அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் ஆட்டோ சங்கரின் கொலை வழக்கு வரை அவரால் மர்மம் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகள் ஏராளம். தமிழகத்தின் மிகமுக்கியமான தீ விபத்துக்கள் அனைத்துக்கும் முதல் புகையைக் […]

Read more

இந்தியக் கலை வரலாறு

கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் (2ம் பாகம்),ஆர். உமாசங்கர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83, விலை 160 ரூ. குங்குமம் இதழில், ‘இனிக்குது கணக்கு’ என்ற பெயரில் வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தொடரின் நூல் வடிவம். ‘கணக்கென்றால் பிணக்கு’ என்ற மாயையைத் தகர்த்து, மிகப்பெரும் கணக்குகளுக்கும் நொடிப்பொழுதில் விடை சொல்லும் சூட்சுமங்களைக் கற்றுத்தரும் இந்நூல் எல்.கே.ஜி. முதல் இன்ஜினியரிங் வரை எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும் எவ்வித உபகரணங்களும் […]

Read more

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை – 14, பக்கம் 296, விலை 150 ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப்பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

தம்ம பதம்

தம்ம பதம், ஸ்ரீ பால சர்மா, நர்மதா பதிப்பகம், பக்கம் 160, விலை 70 ரூ. “தம்ம பதம்” போதி மரத்து புத்தன் போதித்த வாழ்வியல் வேதம். ஞானத்தின் நுழைவாயில் எனத் துவங்கி, புத்தர் காட்டிய தியான நெறியோடு புத்தகம் நிறைவடைகிறது. 29 வயதில் இல்வாழ்க்கையைத் துறந்து, 35 வயதில் ஞானோதயம் பெற்று 80 ஆண்டுகள் நிறையப் பெற்று அருள் நெறி சார்ந்த தூய்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்த புத்தரின் வாழ்வியல் வேதம் தம்ம பதம். கவுதம புத்தரின் சுவையான அரிய செய்திகளோடு, புத்தபிரான் […]

Read more

தந்தை பெரியார்

வாஸ் (து)தவ சாஸ்திரம், பண்டிட் ஆர். வி. மாரிமுத்து, வெளியீடு – பண்டிட் ஆர். வி. மாரிமுத்து, பக்கம் 104, விலை 60 ரூ. ஒரு வீடு ஆரம்பிக்கும் விதத்திலிருந்து, புதுமனை புகுவிழா முடிந்து பராமரிப்பது வரை, இன்றைய காலகட்டத்திற்குத் தகுந்தவாறு சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். வாஸ்து என்பது இன்று பலராலும் பின்பற்றப்படுகிறது. இதில் சில அம்சங்களை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. – சிவா —   தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக்கம் 613, விலை 350 ரூ. […]

Read more

சங்க இலக்கியங்களில் மனித நேயம்

சங்க இலக்கியங்களில் மனித நேயம், முனைவர் முருகையன் பக்கிரிசாமி, வனிதா பதிப்பகம், சென்னை – 17,  பக்கம் 240, விலை 140 ரூ. மனிதநேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் இன்றைய சமுதாயத்தில், சங்க இலக்கிய மக்கள் எவ்வளவு மனித நேயத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அகத்தின் தூய்மை, புறத்தின் மேன்மை, அறத்தின் மாண்பு, உலகப் பொதுமைச் சிந்தனை, உயிரிரக்கப் பண்பு, மனிதமும் மானமும் என்கிற ஆறு தலைப்புகளில் மனிதநேயத்தின் மகத்துவத்தைப் புரியவைத்துவிடுகிறார். ‘உயிரிரக்கப் பண்பு’ என்கிற இயல்தான் […]

Read more

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு)

  விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு), கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம் 605, பக்கம் 225, விலை 150 ரூ. நூலாசிரியர், விழுப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதிலும் கைதேர்ந்தவர். தான் வாழும் மண்ணின் பெருமை பேசும் விதத்தில் விழுப்புரம் பற்றிய முழு விவரங்களையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். கி.பி. 940 முதல் 2010 வரையிலான விழுப்புரத்தின் வரலாற்று நிகழ்வுகள் கோவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ஓர் அறிமுகம். விடுதலை வேள்வியில் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரானது, விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், பண்பாட்டு நோக்கில், நினைவிற்குரியவர்கள், […]

Read more

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை)

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை), முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை – 29, பக்கம் 704, விலை 300ரூ. இத்தனை நாள்களாக இப்படியொரு, ‘பெண்புலவர் களஞ்சியம்’ வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ‘கயமனார்’ என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை – சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, […]

Read more
1 12 13 14 15 16