ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

  இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]

Read more

கம்பனும் ஆழ்வார்களும்

கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ.   வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் […]

Read more

தமிழர் உணவு

தமிழர் உணவு, தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கம் 415, விலை 250ரூ. பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தில் […]

Read more

பிரதமர் புரந்தரதாசர்

நெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, சுப. ஸ்ரீ. சுப்ரமணியன், சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600059, பக்கம் 92, விலை 45ரூ.   வாழ்வியல் கவிஞரின் கவிதைப் படைப்புகள், பாவம், ‘அரசியலை வெறுக்கும் இவர் வட்டமோ, நகரமோ, சதுரமோ, மாவட்டமோ, எந்தப் பரிவட்டமும் வேண்டாம்’ என்ற இவரது கவிதை வரிகள் அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.   — பிரதமர் புரந்தரதாசர், தஞ்சை வி. நாராயணசாமி, திருவரசு புத்தகம் நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், […]

Read more

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ. பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும்  சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் […]

Read more

நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத், சட்டக்கதிர், 3/2 சுவாதி ராம் டவர்ஸ், 3, துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் , சென்னை – 28. புத்தக விலை ரூ. 400   கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றி சட்ட அறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன் ஒரு கருத்தை தனது புத்தகத்தில் எழுதினார். அந்த வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது என்பதைத் தன் வழக்கறிஞர் மூலமாக அறிந்த அந்தக் குற்றவாளி, ‘ஐட்ஜ் துரைங்களே! […]

Read more

ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்)

ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்), சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் – 641020, விலை 70 ரூ. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற ஆன்மிக மாத இதழில் 2000 முதல் 2004 வரை வெளியான ஆன்மிக வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் வெளியான இந்நூலாசிரியரின் நான்கு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதை முன்னிட்டு, ஐந்தாம் பாகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. இதுவும் ஹிந்து மதம் பற்றிய பொது அறிவு நூலாகும். இந்த நூலில் இறைவன், ஹிந்து மத தெய்வங்கள், மகான்கள், ஆன்மிகச் […]

Read more

மனுநீதி என்னும் மனு தர்மசாஸ்திரம் (மூலமும் உரையும்)

மு. வ. கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்), முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம் வெளியீடு, 184/88, பிராட்வே, சென்னை -108, பக்கம் 1656, விலை 1000 ரூ. அறிஞர் மு.வ. அவர்களின் நூலாக்கம் பெறாத கட்டுரைகளின் தொகுப்பாக, இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நிறைகுடமாக விளங்கிய மு.வ. அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டியவர். அன்னாரின் கட்டுரைகள் தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் உறுதியாகக் கூறலாம். இந்நூலில், மொழி, தமிழ், சங்க இலக்கியம், திருக்குறள், சமயம், கலை, கவிதை, சிறுகதை, வாழ்வியல் […]

Read more

வ.உ.சி. பற்றி ம.பொ.சி.

வ.உ.சி. பற்றி ம.பொ.சி., சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், தொகுத்தவர்- ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், பதிவு எண் 482/2010, 4/344 ஏ, சீஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை – 41, பக்கம் 97, விலை 65 ரூ. வ.உ.சி. யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பதுதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்காக […]

Read more
1 11 12 13 14 15 16