உங்கள் மனசு

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை – 14. விலை  ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர், வாலிப வயதுள்ள ஆண், பெண், கணவன் – மனைவி, அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். அவரவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடும்போது அழகிய உரைநடையில் கதைபோலவே சுவைபட விளக்கியுள்ளார். விறுவிறுப்புடன் […]

Read more

நூலகவியல்

நூலகவியல், முனைவர் மு. ராமச்சந்திரன், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, பக்கம் 171, விலை ரூ. 100 நூலகம் என்றால் என்ன? அதன் வரலாறு யாது? நூலகத்தின் அக ஒழுங்குமுறை எப்படியிருக்க வேண்டும்? இவை பற்றிதான் சுருக்கமாக இந்நூலில் ஆசிரியர் பேசியுள்ளார். நூல்களை வகைப்படுத்துதல், அவற்றைப் பாதுகாத்தல், நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்கும் பணி எவ்வாறு இருக்கும் என்பன போன்ற பயனுள்ள தகவல் படிப்போர்க்கு உதவும். – இரா. மணிகண்டன் நன்றி: குமுதம் 28.11.12      

Read more

கரிகால் சோழன்

கரிகால் சோழன், டாக்டர்  ரா. நிரஞ்சனா தேவி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 250 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-5.html பாரம்பரிய சின்னமாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லணை, 2 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்றளவும் அதே கம்பீரத்துடன் நிற்கிறது என்றால் அதைக் கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னரின் அறிவியல் திறமையை எண்ணி வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவிரியின் முழு வரலாறு, ஆண்டு முழுவதும் இரு கரையைத் […]

Read more

அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள்

பாரதியாரின் பாதையிலே, ம.பொ. சிவஞானம், பக்.136, ம.பொ.சி. பதிப்பகம், சென்னை – 41; விலை ரூ. 75 விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், மகாகவி பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பல்வேறு கோணங்களில் பாரதியின் பாடல்களை ஆராய்ந்து தான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருப்பதாக, முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவரது கதை, கட்டுரைகளிலிருந்தும் பல மேற்கோள்களை தனது ஆய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் […]

Read more

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

சேற்றில் மலர்ந்த செந்தாமரை, தொ.மு.சி. ரகுநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 08,  பக்கம் 110, விலை ரூ. 75 தொ.மு.சி. ரகுநாதன் தமிழகம் நன்கு அறிந்த முற்போக்கு இலக்கியவாதி. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்த முத்திரை பதித்தவை. இவரது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல்தான் தமிழ் மொழியிலிருந்து முதன் முதலாக ஐரோப்பிய மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். 1940களில் அவர் எழுதிய […]

Read more

நஞ்சாகும் நீதி

நஞ்சாகும் நீதி, அ. முத்துக்கிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, விலை ரூ. 120 ‘படித்தவன்தான் இன்று உலகின் மிகப்பெரும் ஊழல் பேர்வழியாக விளங்குகிறான். படித்தவன்தான் இந்த நாட்டில் உள்ள வனங்கள் தனக்காகவே வளர்ந்திருப்பதாக நினைக்கிறான். படித்தவன்தான் இன்று மலைச் சிகரங்களில் வழிந்தோடும் ஆறுகளின் நீர் முழுவதும் தான் வாழும் நகரங்கள் நோக்கிப் பாயவேண்டும் என்கிறான். படித்தவன்தான் தனக்கு வேண்டிய அலுமினியத் தாதுக்களின் (பாக்சைட் மலைகள்) மீது, ஏன் பழங்குடிகள் குடியிருக்கிறார்கள் என்று கேட்கிறான். படித்தவன்தான் தன்வீட்டு […]

Read more

விளையாட்டு விஞ்ஞானம்

விளையாட்டு விஞ்ஞானம், அ.சுப்பையா பாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-843-6.html இயற்பியலில் உயர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியரான இந்நூலாசிரியர், தமிழக அரசின் அறிவியல் பாட நூல்களுக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் பொதிகை, மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தி, விஞ்ஞானத்தை விளையாட்டாக எளிதில் புரியவைத்தவர். அவர் டி.வி.யில் செய்து காட்டிய பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளில் 70க்கு மேற்பட்ட சிறப்பானவற்றை, உரிய […]

Read more

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பிரமணியன் சுவாமி; தமிழில்: சேக்கிழான், பக்.260, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ.195 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-703-9.html 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து இன்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஓரளவு தெரியும். ஆனாலும், இந்த ஊழல் எப்படி நடந்தது, எந்தெந்த தருணங்களில் அம்பலப்பட்டது, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனது குறித்து விவரமாகத் தெரிந்தவர்கள் மிகச் சிலர்தான். தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு – இந்த ஊழலை மிக நுட்பமாகவும் ஊழலின் […]

Read more

பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம்

பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம், அ. மார்க்ஸ், புலம் வெளியீடு, 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. விலை ரூ. 380 90களில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியபோதுதான் கம்யூனிஸ்ட்கள் பலருக்குக் கனவு கலைய ஆரம்பித்தது. ‘ராட்சச’ ஜார் ஆட்சியை வீழ்த்தி எழுந்த ‘ரட்சக’ ரஷ்யா அனைத்து மக்களுக்குமான பூலோகமாகத்தான் இருக்க முடியும் என்று அனைவரும் கருதினர். ஆனால் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்குள் கிளம்பிய முரண்பாடுகள் ஒரு பெரிய தேசத்தையே சின்னச் சின்னதாய் உடைக்கத் தொடங்கியது. அந்த தத்துவத்தைப் […]

Read more

ஒலிக்காத இளவேனில்

ஒலிக்காத இளவேனில், தொகுப்பு : தான்யா, பிரதீபா கனகா – தில்லைநாதன், வெளியீடு: வடலி, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம் ரோடு, கோடம்பாக்கம், சென்னை – 600024. விலை ரூ. 135/- ஈழத்து இலக்கியம் பல்வேறு குரல்களோடும் முகங்களோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் இன்னொரு முக்கியமான தொகுப்பு ‘ஒலிக்காத இளவேனில்’. புலம்பெயர்ந்த இலங்கைப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்ற பொது அடையாளத்தின்கீழ் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கவிதைகள், தமிழில் பெண் கவிதை மொழிக்குப் புதிய சாரத்தை வழங்குகின்றன. ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்க […]

Read more
1 6 7 8 9 10 16