கனவு சினிமா

கனவு சினிமா, க. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. ஒரு உதவி இயக்குநரின் அனுபவங்களின் பதிவாக மட்டும் நில்லாமல், சினிமா இயக்குநராக வேண்டும என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தரும் அனுபவப்பாடமாகவும் இந்நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர். வாய்ப்புக்காக பல இயக்குநர்களைத் தேடிப் போனதை, கேட்டறிந்த உண்மைகளை, கண்டுணர்ந்த அனுபவங்களை கனவு சினிமாவாக பதிவு செய்துள்ளார். வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தர கற்பனை கலந்திருக்கிறார். அதுதானே சினிமா. சினிமாவை சுவாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   […]

Read more

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு புகோகா, தமிழில் பூவுலக நண்பர்கள், எதிர் வெளியீடு பதிப்பகம். தொழில் செய்வது தொழிலை கெடுக்க அல்ல! ஜப்பான் மொழியில், மசானபு புகோகா எழுதி, தமிழில், பூவுலக நண்பர்கள் மொழிபெயர்த்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உணவு தேவையை, வேளாண்மைதான் பூர்த்தி செய்கிறது. மண்ணின் தன்மை, அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்பவே, சாகுபடி இருக்கும். ஒரு கோழி, ஒரு நாளைக்கு எத்தனை முட்டையிடும் என்பது, அந்த கோழியின் தன்மையை பொறுத்தது. ஆனால் […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. ஒரு நகரத்தையே உருவாக்கிய இலங்கைத் தமிழரின் சாதனை! பிரமிப்பூட்டும் தன்னம்பிக்கை நாயகன், மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு. பசி, பட்டினியுடன் வளரும் இலங்கை அகதி தமிழரான அவரது மனதுக்குள் பெருங்கனவு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் வெறும் திட்டத்தைக் காட்டி, 3 ஆயிரம் ஏக்கர் இடத்தை ஒப்பந்தத்துடன் விலை பேசுகிறார். முதலீடு செய்பவர்களை ஈர்த்து, ஆஸ்திரேலியாவுக்கே பெருமை […]

Read more

ஜோன் ஆஃப் ஆர்க்

ஜோன் ஆஃப் ஆர்க், தமிழில் சி. ஜெயாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. உயிருடன் எரிந்த உத்தமப் பெண்மணி என்றைக்குமே பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் போராடும் குணமுள்ளவர்களை விட்டு வைப்பார்களா என்ன? பதினைந்தாம் நூற்றாண்டில், தன்னுடைய பத்தொன்பது வயதில், பிரிட்டனுடன் மோதிப் பிரான்சு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டான் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைச் சூனியக்காரி என்று முத்திரை குத்தி உயிரோடு எரித்துக் கொன்றது ஆண்களின் அதிகார வர்க்கம். பிற்காலத்தில், 1920ம் ஆண்டில் இந்தப் பெண்மணிக்குக் கிறிஸ்துவத் திருச்சபையினரால் புனிதப் பெண்மணி என்ற […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து […]

Read more

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ. தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் […]

Read more

பையர் பிவேர்

பையர் பிவேர், ஆர். குமார், சி. சீதாராமன் அண்டு கோ வெளியீடு, பக். 142, விலை 160ரூ. சொத்து வாங்கவோருக்கான போதுமான அடிப்படை சட்ட நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் விளக்கும், வழிகாட்டுதல் நூல் இது. இதில், அசையா சொத்துகளை வாங்கும்போதும், விற்கும்போதும் கடைபிடிக்கப்படும் அனைத்து சட்ட நுணுக்கங்கள், நடைமுறை கோட்பாடுகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா, அடங்கல், கிஸ்தி ரசீது, நிலம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது போன்றவற்றின் அடிப்படை அறிவும், இந்த நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூதாதையர் சொத்தில், பெண்களுக்குரிய சட்டப்பூர்வமான விதிமுறைகளையும், […]

Read more

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, தமிழில் எஸ். ராஜலட்சமி, அவ்வை இல்லம், ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை, சென்னை, விலை 150ரூ. சாதனையாளரின் சுயசரிதை இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி, சட்டமன்ற உறுப்னிர் என்ற பெருமைகளை அடைந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த சுயசரிதை பல்லாண்டுகள் கழித்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆங்கில ஆட்சியில் தமிழகம் இருந்த நிலை, இங்கே கொண்டுவரப்பட்ட முக்கியமான பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் உரிமை சட்டங்கள் ஆகியவற்றுக்கான பின்புலம், மகளிர் உரிமை இயக்கங்கள் ஆகியவற்றைப் […]

Read more

கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் ரா.கிருஷ்னையா, விகடன் பிரசுரம், சென்னை, பக். 237, விலை 115ரூ. ரஷ்ய எழுத்தாளர் விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய புகழ்பெற்ற கதைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது கண் தெரியாத இசைஞன். இந்தக் கதை 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பார்வையற்ற நபர்களிடம் ஒளியைத் தேடும் வேட்டை இருப்பதையே இந்தக் கதை வலியுறுத்துகிறத. இது ஒரு கற்பனைக் கதை போலத் தோன்றினாலும், தாம் சந்தித்த பார்வையற்ற நபர்களில் திறமைசாலிகளை முன் வைத்தே இக்கதையை மெருகேற்றியதாக கொரலேன்கோ […]

Read more

ஒரு தலித்திடமிருந்து

ஒரு தலித்திடமிருந்து, வசந்த் மூன், தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 285, விலை 220ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-287-0.html தலித் சமூக உட்பிரிவு பகைமையை அம்பேத்கர் இயக்கம் எதிர்கொண்டது எப்படி? டாக்டர் அம்பேத்கரின் வரலாற்றை ஆதாரத்தோடும் சுவையாகவும் எழுதியவர் வசந்த் மூன். மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் நூல்களுக்கு தொகுப்பாசிரியராக இருந்து அம்பேத்கரின் எழுத்துக்களை, பேச்சுக்களை மக்கள் முன் வைத்தவர். அம்பேத்கரின் தொண்டர் படை அமைப்பில் சேர்ந்து கடைசி வரை […]

Read more
1 2 3 4 5 12