I am a born liar

I am a born liar, ஹாரி என் ஆப்ரகாம். கலைஞனுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை இத்தாலிய இயக்குனர் பெட்ரிக் பிலனியின், வாழ்க்கை வரலாற்றைக் கூறும், I am a born liar  என்ற நூலை அண்மையில் படித்தேன். ஹாரி என் ஆப்ரகாம் நிறுவனம், இந்நூலை வெளியிட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் போற்றிய இயக்குனர்களில், பெட்ரிக் பிலனி முக்கிய மாணவர், ஓவியர், கவிஞர், சினிமா இயக்குனர் என, பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில், அவர் எப்படி சினிமா எடுத்தார். அதற்கான […]

Read more

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இரண்டு கனவுகளுக்கு நடுவே விரிகிறது நாவல். நீது கனவு காண்கிறாள். அதில் அவளுடைய அம்மா பிரியம்வதா நீண்ட மணற்பரப்பில் ஒரு குன்றின் அருகே தனியாக அமர்ந்து தியானத்தில் இருக்கிறாள். தன்னைத் தேடி கண்டடையும் மகளிடம், தன் தியானத்தை கலைக்க வேண்டாம் போய்விடு என்கிறாள். நாவலின் இறுதியில் ஒரு பனிப்பரப்பில் அவள் தியானம் தொடர்கிறது. பிரியம்வதா ஒரு தனியார் சிமென்ட் […]

Read more

மகான் ஷைகு சாஅதி

மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம். கனி, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 184, விலை 100ரூ. இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் இந்த உலகிற்கு ஒளியூட்டியுள்ளனர். உதாரணமாக இஸ்லாத்தில் பற்று கொண்ட பக்தாத்தை சார்ந்த முகைதீன் அப்துல்காதல் ஜிலானி, உமர் கய்யாம், இந்தியாவில் புகழ்பெற்ற சூபி ஞானி நிஜாமுதீன் அவுலியா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் ஷைகு சாஅதி 12ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பிறந்த ஒப்பற்ற நீதி அறிஞர், கவிஞரான அவர் கஜல் கவிதைகளில் உள்ள உணர்ச்சி பிரவாகத்தை விட நீதி […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

தந்தை கோரியோ

தந்தை கோரியோ, பிரெஞ்சு மூலம் ஒனோரெ தெ. பல்சாக், தமிழில் ச. மதனகல்யாணி, சாகித்ய அகாடமி, பக். 433, விலை 220ரூ. வெறுப்பெனும் பெருஞ்சரிவில் மனித இதயம் நிற்பது அருமை நெப்போலியன் கத்தியால் சாதித்ததை நான் இறகு முனையால் சாதிப்பேன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஒனோரே தெ. பல்சாக், 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, லெ பேர் கோரியோ எனும் புதினத்தை, தந்தை கோரியோ எனும் பெயரில், எளிய நடையில் மிக நுணுக்கமாக மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர் மதன கல்யாணி. மனைவியை இழந்தும், தன் […]

Read more

கர்ணா நீ மஹத்தானவன்

கர்ணா நீ மஹத்தானவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 80ரூ. தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது. கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது […]

Read more

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி, ரத்னாகரன், மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 140ரூ. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணும் ஒரு வேகத்தையும், தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நாவலாகும். இதனை படிப்பதன் மூலம் பெண்ணின் பெருமையை உணரமுடிவதுடன், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —-   மனத்தில் பதிந்தவர்கள், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இதழில் மாதம் தோறும் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more
1 3 4 5 6 7 12