பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 248, விலை 200ரூ. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் ஏழை பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டு வசதியையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இன்று கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், நாம் நம் சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிந்த பாடில்லை. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் […]

Read more

தமிழகத்தின் ஈழ அகதிகள்

தமிழகத்தின் ஈழ அகதிகள்,  காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 80ரூ. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் பற்றியும், அங்குள்ள தமிழ் ஈழ அகதிகளின் அவலங்களைப் பற்றியும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த நூலை 8 ஆண்டுகள் அகதிகள் முகாமில் வாழ்ந்த தொ. பத்தினாதன் எழுதியுள்ளார். முகாம்களில் அகதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், எப்போதும் கண்காணிப்பு என்னும் கொடுமை போன்ற பல்வேறு செய்திகளைத் தருகிறார். ‘எங்களுக்கு இலவசமோ, உதவித்தொகையோ தேவையில்லை. எங்களுக்குத் தேவை சுதந்திரமான வாழ்க்கை – இங்கு வாழும்வரை’ என்பதை […]

Read more

இடிந்தகரை சிந்தனைகள்

இடிந்தகரை சிந்தனைகள், சுப. உதயகுமார், இலக்கியச் சோலை, சென்னை, விலை 60ரூ. கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்திய போராட்டம் பற்றி சுப. உதயகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கடல் விவசாயம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாதி, மதம் கடந்து, சச்சரவுகள் துறந்து, உண்மை, ஒழுக்கம், உறுதியோடு ஆயிரம் நாட்கள் நாங்கள் நடத்தியது வெறும் போராட்டமல்ல. அது ஒரு தவம், வேள்வி, யாகம் என்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- […]

Read more

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு, சமந்த் சுப்பிரமணியன், தமிழில் கே. ஜி. ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 160ரூ. ஒரு இனப்போரின் நிஜக்கதை ஒரு பத்திரிகையாளரான சமந்த் சுப்பிரமணியனின் பயணக் கட்டுரையாக விரிவடையும் இந்த நூல், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த முடிந்த ஒரு இனப்போரின் நிஜக் கதைகளை சொல்கிறது. போருக்கு பிந்தைய தமிழர்களின் வாழ்க்கை, ராணுவ நெருக்கடிகளில் கதைகள் துவங்கி, போரின் துவக்க காலங்களையும் கூறுகிறது. போரால் பாதிக்கப்பட்டோர், ராணுவத்தினர், ராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றிய தமிழர், விடுதலை புலிகள், புலி […]

Read more

பன்முகப் பார்வை

பன்முகப் பார்வை, எஸ். பொன்னுசாமி என்ற எஸ்.பொ., மித்ரா பதிப்பகம். முற்போக்கிற்கு மாற்று நற்போக்கு இலங்கை எழுத்துலகில் முக்கிய இடத்தில் இக்கும் எஸ்.பொன்னுசாமி என்ற எஸ். பொ., வின் பன்முகப் பார்வை என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில், ஆறுமுக நாவலருக்கு அடுத்து, வசன நடையில், தரமான படைப்புகளை அளித்தவர் எஸ்.பொ. தலித் குடும்பத்தில் பிறந்ததால், கல்விக் கூடங்களில் மாணவர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார். இதுபோன்றதொரு நிலை, தன் வாரிசுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, வளோள இனப் பெண்ணை திருமணம் செய்து […]

Read more

தருமபுரி இளவரசன் படுகொலை

தருமபுரி இளவரசன் படுகொலை, எம். துரைராஜ், அம்பேத்கர் புரட்சி முன்னணி வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல். அதன்பின் ஏற்பட்ட கலவரம். மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன் குர்லா விரைவு ரயிலின் […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், […]

Read more

குற்றப் பரம்பரை அரசியல்

குற்றப் பரம்பரை அரசியல், பெருங்காமநல்லுரை முன்வைத்து, தொகுப்பாசிரியர் முகில்நிலவன், தமிழாக்கம் சா. தேவதாஸ், பாலை வெளியீடு, மதுரை, விலை 300ரூ. ஆளும் வர்க்கத்தினர் சார்ந்தே எழுதப்பட்ட வரலாறுகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. மக்களின் நினைவுகளிலிருந்தும், வாய்மொழிக் கதைகளிலிருந்தும் எழுதப்பட்டவையும் வரலாறுதான் என்ற நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் என்று மத்திரை குத்தி, அவர்கள் வாழ்ந்த ஊரையே பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையாக்கிய கொடூரங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவேயில்லை. 1930களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கைரேகைகள் பதியப்பட்டு, […]

Read more

பாடங்கள் படிப்பினைகள்

பாடங்கள் படிப்பினைகள், டாக்டர் எஸ். ஜீவராஜன், ஆனந்த நிலையம், சென்னை, பக். 19, விலை 90ரூ. இந்த நூலின் நூலாசிரியர் டாக்டர் எஸ். ஜீவராஜன் பாலியல் நிபுணர். மருத்துவம் தொடர்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால் அவரின் இந்தப் புத்தகம் அவரது வழக்கமான படைப்புகளில் இருந்து சிறிது வித்தியாசப்பட்டுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த, படித்த சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்துள்ளார். சளித் தொல்லையில் மூச்சுத் திணறி அழுதபடியே இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடுக்கை அடிப்பவரை அழைத்து வந்து பூஜை செய்தனர் அதன் […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more
1 6 7 8 9 10 17