ஒரு கடல் ஒரு கைவிளக்கு

ஒரு கடல் ஒரு கைவிளக்கு, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், பக். 144, விலை 125ரூ. மனித மாண்புகளை மேம்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கைவிளக்கின் துணையுடன் சமுதாயத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பிரபாகர பாபு தன் கவியாளுமையை இந்த தொகுப்பில் ஆழமாக வழங்கியுள்ளார். தீயின் நாக்குகளைப் போல் தீண்டாமை குளிருக்கு இதமாக வருடும் தீயின் வெப்பக் கவிதைகள் இவை. வெளிச்சத்திற்கும், இருட்டிற்கும் இடைப்பட்ட கணத்தை வெளிச்சமாக்கும் வித்தை, இந்தக் கவிதை தொகுப்பு முழுவதும் காணப்படுகிறது. சுகத்தை விடவும் […]

Read more

எம்.ஜி.ஆர். கதை

எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், பக். 352, விலை 200ரூ. லட்சக்கணக்கானவர்களின் மனதில் இன்றும் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாடகம், திரைத்துறை என எதிலும் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும், வீரத்தையும், விடாமுயற்சியையும் விதைத்து வந்த அவர், அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கலை, பொதுவாழ்வு என எதிலும் தன்னிகரற்ற மனிதராய் இருந்த அவரது, தனிப்பட்ட வாழ்க்கை மிக மிக எளிமையானது. இதற்கு அடித்தளமாய் இரந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறையை, அவர் வாழ்ந்த இடங்களுக்ளுக்குச் சென்று, அவரது உறவுகள், நண்பர்கள், அறிமுகமானோரிடம் […]

Read more

அவ்வையார் நூல்கள்

அவ்வையார் நூல்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன்), செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. நூலாசிரியர் கொங்கு நாட்டினர். குறையாத கல்வி நிரம்பியவர். அறிவியல், கணக்கு, தொழில்நுட்பம் ஆய்ந்து தேர்ந்தவர். இந்த நூலில் அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, கல்வியில் ஒழுக்கம், அவ்வைக்குறள், பிள்ளையார் அகவல், தனிப்பாடல் என, கிடைத்தவற்றைத் தொகுத்து, அந்த அடி அல்லது பாடலுக்குப் பொருள் விரிவுரை எழுதியும், மூலத்தை ஆங்கிலத்தில் எழுத்தாக்கம் செய்தும், ஆங்கில விளக்கமும் தந்து நூலை ஆக்கியுள்ளார். அவையார் பலர் வாழ்ந்திருந்தனர். சங்ககால அவ்வை […]

Read more

எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம், தெலுங்குமூலம் சலீம், தமிழில் சாந்தா தத், சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 256, விலை 145ரூ. நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை, விஞ்ஞானப் பூர்வமாய் அணுகும் வித்தியாசமான பார்வை கொண்டவை, சலீம் படைப்புகள். எய்ட்ஸ் எனும் கொடிய நோய் குறித்தும், அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்னைகள் குறித்தும், சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல் இது. இரண்டு குடும்பங்கள். ஒன்று மத்தியதரவர்க்கம். இன்னொன்று அடித்தட்டு வர்க்கம். இரு குடும்பங்களுமே, எய்ட்சால் பாதிக்கப்பட்டவை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதயம் உண்டு எனும் […]

Read more

செல்லுலாயிட் சித்திரங்கள்

செல்லுலாயிட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 207, விலை 100ரூ. சிவாஜிக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலத்தில், ஆயிரம் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறார் தமிழ்மகன். அடுத்த எட்டு ஆண்டுகளில் இருபதுக்கும் குறைவாம். இரண்டும் கடந்த சமஸ்திதியில் வெளிவந்திருக்கிறது அவருடைய இந்த நூல். சின்னச் சின்னக் கட்டுரைகள் சிறுகதை போன்ற முத்தாய்ப்போடு. உருக்கம் அல்லது கிறக்கம் தரும் தகவல்கள், பனி மூட்டம் போன்ற மனித நேயங்கள், விடையில்லாத கேள்விகள், கிளாமரில் துவங்கி மதமாற்றம் வரை போன நடிகையர் என்று சினிமா வேகத்தில் நிறைய […]

Read more

லோன் உல்ப் அன்ட் கப்

லோன் உல்ப் அன்ட் கப், கசோ, டார்க் வின்ட் மங்காய் பதிப்பகம், ஓவியம் கொசாகி. கதை சொல்லும் ஓவியங்கள் ஜப்பானிய சாமுராய் இனத்தின், வீர தீரத்தை சித்தரிக்கும், லோன் உல்ப் அன்ட் கப் என்ற படக்கதை (காமிக்ஸ்) தொடரின், பிளாக் வின்ட் என்ற பகுதியை சமீபத்தில் படித்தேன். டார்க் வின்ட் மாங்காய் என்ற ஜப்பானிய பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் ஓவியங்களை, கொசாகி வரைந்துள்ளார். கதையை கசோ எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் உள்ள இந்தப் படக்கதை, மண் மற்றும் பெண்ணுக்காக சாமுராய் இனத்தினர் நடத்தும் வீர, […]

Read more

ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம்

ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், வி.என்.கஜேந்திர குருஜி, ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம் வெளியீடு, பக். 1279, விலை 800ரூ. உலகின் முதல் ஆண்மகன் யார்? நூல் துவக்கத்திலேயே, ‘விராட் விஸ்வப் பிரம்மம்’ என்ற முழுமுதற்கடவுளைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். அது ஆணுமல்ல. பெண்ணுமல்ல. இரண்டிற்கும் பொதுவான அலித்தன்மையில் அமைந்தது. அந்தப் பிரம்மத்திலிருந்து, ஐந்துவித பருவகாலமும் ஒருங்கே சேர்ந்தபோது, உலகின் முதல் ஆண்மகன் என்று பிறந்தவர் விஸ்வகர்மா. அதேபோல், அந்தப் பிரம்மத்திலிருந்து ஜனித்த முதல் ஒரே பெண். விஸ்வகர்மிணி எனும் ஸ்ரீகாயத்ரி. இந்த இருவரும் இணைந்து, […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]

Read more

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும், டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) தொகுத்துள்ள அணிந்துரைகளும், வாழ்த்துரைகளும் என்ற நூல் அனைவரையும் சாதிக்க தூண்டுவதுடன், சிந்திக்கவும் வைக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாழ்த்துரைகள் மூலம் நூலாசிரியர் சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய சேவைகளையும், அவருடைய நற்பண்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நூலில் இடம் பெற்றுள்ள வைரவரிகள் அனைத்தும் பாலைவனச் சோலையின் பூக்களாக […]

Read more

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள்

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள், சைதன்யா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்குவது கவிதை என்கிறார் சைதன்யா. உண்மைதான். கவிதைக்கு இறகு இல்லை என்று யார் சொன்னது என்று கேட்கிறார். நூறு கோடி நிறங்களில் பறந்து கொண்டிருப்பது வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமல்ல கவிதைகளும்தான். மனித நேயம் எங்கே இருக்கிறது? அது இல்லை என்பதைச் சொல்ல வரும் கோபத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் நியதி இல்லை. வழிகாட்டல் இல்லை. பெரியாரின் குரல் இடுக்கில் இக்கவிதைகள் சிக்கிக் கொண்டதே ஒரு படிமம்தானே. நன்றி: குமுதம், […]

Read more
1 548 549 550 551 552 841