வர்ணசாகரம்

வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ. வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்வும், அவர் சமுதாயத்துக்கு காட்டி வரும் நல்ல வழிகளை மையமாக வைத்து வண்ண புகைப்படங்களுடன், 24 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நூலாகும். வீழ்வது கேவலம் அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம், விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை என்ற நீதியரசரின் வைரவரிகளை இளைஞர்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நீதியரசரின் […]

Read more

மாணவர்களுக்காக மகாத்மா

மாணவர்களுக்காக மகாத்மா, எம்.எல்.ராஜேஷ், ஸ்ரீராம் பப்ளிகேஷன்ஸ், திருவள்ளூர் மாவட்டம், பக். 42. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு பலருக்கு வாய்ப்பதில்லை. அதனால் அவரது வரலாற்றைச் சுருக்கி, சித்திரக் கதைகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். குழந்தைகள் உட்பட அனைவரின் மனதிலும் எளிமையாக பதியும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இது. நூலைப் படித்து முடித்ததும் காந்தியடிகளின் வாழ்க்கை வெறும் வரலாறு அல்ல. அது அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை என்பதை உணரவைத்துள்ளார் நூலாசிரியர். காந்தியின் அன்பு, அகிம்சை, சகோதரத்துவம், அவர் மக்களுக்காக போராடிய சரித்திர […]

Read more

உண்மையைச் சொல்கிறேன்

உண்மையைச் சொல்கிறேன், என். முருகன், ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 180ரூ. இந்நூலாசிரியர் ஐ.ஏ.எஸ்.களிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அரசின் ஒவ்வொரு துறைகளுக்குமான பொறுப்புகள், நிர்வாக நடைமுறைகள், சிக்கல்கள், அவற்றை களையும் வழிமுறைகள், நிர்வாக நுணுக்கங்கள் என்று பல விஷயங்களையும் தனது அனுபவங்களோடு ஒப்பிட்டு எளிய முறையில் துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளில் எழுதி வருவது வாசகர்கள் அறிந்ததே. அத்துடன் அன்றாட நாட்டு நடப்புகள், அரசியல் நடைமுறைகளையும் உரிய கோணத்தில் அலசி ஆராய்ந்து, சமூக […]

Read more

யாழ்ப்பாண அகராதி

யாழ்ப்பாண அகராதி, சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, விலை 1240ரூ. (இரண்டு தொகுதிகளும்). கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி பேசிய தமிழ் மொழியின் தொன்மையும் பழைமையும் யாராலும் இன்னும் முழுமையாகக் கணிக்க முடியாதது. கற்காலம் முதல் இன்றைய கணினி காலம் வரையிலும் தன் தனித்தன்மை மாறாமல் உயிரைத் தக்கவைத்து உணர்வுபூர்வமாகவும் வளர்ந்தும் வலம் வந்தும் வருகிறது தமிழ்மொழி. அந்த மொழியின் வளத்தை அறிய வேண்டுமானால், அகராதிகள்தான் அதற்கும் வழிவகுக்கும். கடந்த 18ம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டைப் போட்டிருந்த காலத்திலேயே எனது சுட்டுவிரலைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். தம்பி ராஜேந்திரன் கழகத்தால் வளர்ந்தவன் அல்ல. இந்தக் கழகத்தை வளர்ப்பதற்காகத் தன்னையே ஒப்படைத்துவிட்டவன். தமிழகத்தில் ஏன் உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்ற பெருமையும் தம்பிக்கு உண்டு என்றார் அறிஞர் அண்ணா. தனது கனிந்த முகத்தால், கணீர் குரலால், காந்தச் […]

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, தமிழில சுதாங்கன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 254, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html இன்றைய உலகின் மனிதனின் தலையாய்ப் பிரச்னையான மனஅழுத்தத்துக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதற்கு எளியமுறை தியானங்கள் மூலம் விளக்கமளிக்கிறது இந்த நூல். உங்களை நீங்களே மன ரீதியாக சோதித்துக் கொள்ளுங்கள், இதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அல்லது உங்களுக்கு எது எளிதானதோ அதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் பிரச்னைக்குத் தீர்வு. இதற்காக உடலை வருத்திக்கொண்டு, […]

Read more

இலக்கியச் சுவடுகள்

இலக்கியச் சுவடுகள், ஆ. மாதவன், ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 250ரூ. பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது. எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது. பஷீரின் படைப்புலகம் கட்டுரை மிக நீண்டது (30 பக்கங்கள்) என்றாலும், ஒரு தமிழ் வாசகனுக்கு வைக்கம் முகமது பஷீரின் படைப்பாற்றலை […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை), தொகுப்பும் உரையும் – ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 284, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html சங்ககாலம் என்பது புனைவானது. சமயவாதிகளால் இட்டுக்கட்டப்பட்டதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் கருதும் சில ஆய்வாளர்களின் கருத்துகளை மறுத்து, ஆதாரங்களுடன் பல உண்மைகளை முன்வைக்கிறது தொகுப்புரை. சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், தொகுப்பாளரின் […]

Read more

சர்வோதய ஆளுமைகள்

சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமா காளியம்மன் கல்வி அறக்கட்டளை, மதுரை, பக். 576, விலை 400ரூ. காந்தியக் கொள்கையை 11 பெருந்தலைப்புகளில் 138 உள் தலைப்புகளில் மிக மிக எளிமையாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். சர்வோதய தத்துவத்தை விளக்கும் வகையில் ஜெய்ஜகத் சுவாமிகளும் சிஷ்யர்களும் எனும் தலைப்பில் உழவர், நெசவாளர் உழைப்பை வெளிப்படுத்தும் நூலாசிரியர் களத்து மேட்டுக் காட்சிகளின் மூலம் கிராமப்புற சமதர்ம சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். அதன் மூலம் உடல் உழைப்பினால் வாழும் ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், உழுது பாடுபடும் ஓர் […]

Read more
1 621 622 623 624 625 841