இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 310, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-182-5.html இந்நூலாசிரியரின் பிறமொழி கலப்பில்லாத தெள்ளு தமிழும், ஆற்றொழுக்கு நடையும், புதிய சிந்தனையும் வாசகனை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. மகாபாரதம் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்ட கதை. ஆனாலும் எந்த ஒரு கதாபாத்திரமும் குறைவற்ற நிறைவான உயர்வு நிலையைக் கொண்டவையாக அமைக்கப்படவில்லை. கடவுள் அவதாரமாகக் கூறப்படும் கிருஷ்ண பகவானின் பாத்திரத்திலுள்ள குறைகள் கூட துரியோதனால் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படுகிறது. இப்படி எல்லா […]

Read more

கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர், ஆ.சி. சம்பத், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-183-2.html விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், இந்தியாவின் தென் பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். அவர் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எழுந்த பல சவால்களை எளிதாகச் சமாளித்தார். விஜயநகரத்தின் மீது தொடர்ந்து படையெடுத்த தக்காணத்து சுல்தான்களை வீரம் மற்றும் விவேகத்தால் வென்றெடுத்தார். அவரது பதவி ஏற்பு, ஆட்சிமுறை, போர்கள், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாய அமைப்பு ஆகிய அனைத்தையும் எளிமையாகவும், […]

Read more

மனித நோய்கள்

மனித நோய்கள், அருள் செங்கோர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. மருத்துவ நூல்களில், குறிப்பிடத்தக்க சிறந்த நூல். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? தூக்கமின்மை, மனச்சோர்வு, ஜலதோஷம், தலைவலி, வாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, மஞ்சள் காமாலை முதலிய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும், இந்த நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்துவிட்டால் என்ன சிகிச்சை செய்வது என்பது குறித்தும் இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் அருள் செங்கோர். நோயின்றி வாழ வழி காட்டும் நூல் இது. நூலாசிரியர் அருள் செங்கோர் தமிழறிஞர் க.ப.அறவாணனின் […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more

தருமபுரி இளவரசன் படுகொலை

தருமபுரி இளவரசன் படுகொலை, எம். துரைராஜ், அம்பேத்கர் புரட்சி முன்னணி வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல். அதன்பின் ஏற்பட்ட கலவரம். மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன் குர்லா விரைவு ரயிலின் […]

Read more

மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

அந்நிய நிலத்தின் பெண்

அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை. சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, […]

Read more

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன்

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன், ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ வெளியிடு, திருச்சி, பக். 257, விலை 300ரூ. காவிரி வெள்ளத்தை தடுக்க பொறியியலாளர்களை நியமித்த ராமானுஜர் கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், வைணவ நெறியின் கலங்கரை விளக்காக திகழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர், ராமானுஜரை, சேவைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகான் என போற்றுகிறார். அரிய நெறிகளை பரப்ப, ராமானுஜர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் வந்து காலூன்றிய காலகட்டத்தில் பாமர மக்கள் மதமாற்றத்தில் சிக்கி விடாமல் […]

Read more
1 623 624 625 626 627 841