காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை, அந்திமழை, ஜி4, குரு வைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 75ரூ. தமிழ்நாட்டில் 1967 பொதுத்தேர்தலில், காங்கிரஸை தி.மு.கழகம் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான். தி.மு.கவும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுபற்றிய விவரங்களை தெளிவாகவும், நடுநிலையுடனும் இந்நூலில் எழுதியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ராவ். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்ட […]

Read more

வாழ்க்கைக் கோயில்கள்

வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ. கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் […]

Read more

நாடாளுமன்றத்தில் வைகோ

நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]

Read more

சி. மோகன் கட்டுரைகள்

சி. மோகன் கட்டுரைகள், நற்றிணை பதிப்பகம், ப.எண்123ஏ, பு.எண் 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 380ரூ. தமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் சி.மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது. ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி.மோகனின் லாவகம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப்பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் […]

Read more

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், ராகுல சாங்கிருத்யாயன், தமிழில் ர. சௌரிராஜன், அலைகள் வெளியீட்டகம், 25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 85ரூ. ஒரு பெண்ணை நன்றாக வைத்துக்கொள்வது என்றால் நம் ஊரில் சொல்லக்கூடிய அதிகபட்ச வார்த்தை ராணி மாதிரி வச்சுக்கிறேன் என்பதுதான். ராணிகளை எப்படி வைத்திருந்தார்கள் என்று தெரிந்துகொண்டால் ஏன் அப்படி சொன்னார்கள் என்பது புரியும். புகழ்பெற்ற வரலாற்றுத் தத்துவ மேதையும் ஊர்சுற்றியுமான ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய இந்த நூல் ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் வாழ்ந்த ராணிகளின் கதையைப் பேசுகிறது. அந்த […]

Read more

ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்

ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்?, ஓஷோ சித், ஓஷோ சாஸ்வதம், 3/184, கந்தம்பாளையம், அவினாசி 641654, விலை 200ரூ. ஓஷோ ரஜினீஷ் பேசியும் எழுதியும் வெளியான 600 புத்தகங்களில் 10க்கும் குறைவானவையே காமத்தைப் பற்றியவை. ஆனால் அவையே அவரது அடையாளமாகப் பரப்பப்பட்டன. உண்மையில் ஓஷோவின் தனித்தன்மை என்பது தர்க்கம். அமெரிக்கா முதல் கம்யூனிஸ்ட்கள் வரை, மகாவீரர் தொடங்கி போப் ஆண்டவர் வரை அனைத்தையும் தன்னுடைய விமர்சன அம்புகளால் ஓட்டை போட்டார் ஓஷோ. இத்தகைய ஓஷோவின் வழித்தடம் அவருக்குப் பின்னால் தொடரவில்லை என்பதே உண்மை. […]

Read more

பழமை ஆனாலும் புதுமை

பழமை ஆனாலும் புதுமை, அலைய்டு பப்ளிஷர்ஸ், 751, அண்ணா சாலை, சென்னை 2, விலை 250ரூ. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியார் பாடினார் அன்று. ஆனால் திருக்குறளின் பெருமையை இங்கிருந்து எட்டுத்திக்கும் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு எழுதிய ஆங்கில நூல்தான் என்சியன்ட் எட் மாடர்ன் (பழமை ஆனாலும் புதுமை). நிர்வாகவியல் கருத்துகள் திருக்குறளில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன? என்பதை யாரும் இதுவரையில் சொல்லியிராத புதுமையான ஆராய்ச்சிகளோடு எழுதியிருக்கிறார். இந்த நூலை அறிவாற்றலை வளர்க்கவும் படிக்கலாம், […]

Read more

அனுபவச் சுவடுகள்

அனுபவச் சுவடுகள், கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா வெளியீடு, சென்னை 17, பக். 192, விலை 125ரூ. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் நூல். தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், எழுத்தாளர் ஜெயகாந்தன், பணி நிறைவு பெற்ற நீதிபதி சந்துரு, அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன் ஆகியோருடனான தனது நட்பு குறித்து நூலாசிரியர் விவரித்துள்ள சம்பவங்களின் மூலம் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோல, பிலிப்பைன்ஸில் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் சுவைபட விவரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் […]

Read more

குறுந்தொகை உரை நெறிகள்

குறுந்தொகை உரை நெறிகள், ஆ.மணி, தமிழன்னை ஆய்வகம், 56, அன்பு இல்லம், 4ஆவது குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப் பாளையம், புதுச்சேரி 605009, பக். 304, விலை 113ரூ. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைக்கு இதுவரை 19க்கும் மேற்பட்ட உரைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் இன்றியமையாத உரைகளாகக் கருதப்படும் தி.சௌ. அரங்கனார், உ.வே. சாமிநாதையர், ரா.இராகவையங்கார் ஆகியோரின் உரைகளைத் தொகுத்தும் வகுத்தும், விரித்தும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். கிடைக்கப்பெறாத உரைகளான பேராசிரியர் உரை, நச்சினார்க்கினியர் உரை பற்றிய குறிப்புகளும் உள்ளன. குறுந்தொகையின் முதல் உரையாசிரியரும் […]

Read more

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள்

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள், வாலி பதிப்பகம், 12/28, சவுந்தர்ராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 150+150ரூ. எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், திரை உலகில் புகழின் உச்சியில் இருந்தபோது, இருவருக்கும் பாடல்கள் எழுதிய பெருமைக்கு உரியவர் வாலி. எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆரின் கொள்கை விளக்கப் பாடல்களில் பெரும்பாலானவற்றை எழுதியவர். நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்(எங்க வீட்டு பிள்ளை), மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (தெய்வத்தாய்), வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் (தேடி வந்த மாப்பிள்ளை), நல்ல நல்ல […]

Read more
1 705 706 707 708 709 841