பாரதியின் புதிய ஆத்திசூடி சுவை புதிது

பாரதியின் புதிய ஆத்திசூடி சுவை புதிது, து. இராசகோபால், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 288,விலை 140ரூ. குழந்தைகளின் நாற்றங்கால் பருவம் ஆரம்பப் பள்ளிப் பருவம். இக்காலத்தில் அறவியல் கருத்தகளை எளிய பாடல்கள் மூலமாக நமது குழந்தைகளின் மனதில் விதைக்கும் அற்புதமான கல்விமுறை நம்மிடம் இருந்தது. ஒற்றை வரியிலான உபதேச மொழிகளாக அமைந்த நீதி நூல்கள் குந்தைகளின் மனப்பயிற்சிக்கும் வாக்குப் பயிற்சிக்கும் மிகவும் உதவின. அதில் ஒன்றுதான் ஔவையார் எழுதிய ஆத்திசூடி. மகாகவி பாரதி இத்தகைய நிதிநூல்களின் முக்கியத்துவத்தை மிகவும் உணர்ந்திருந்தார். அதனால்தான் […]

Read more

முரண் எங்கெங்கு காணினும்

முரண் எங்கெங்கு காணினும், சேஷ், வெங்க், XLOG, சென்னை 33, பக். 176,விலை 110ரூ. முரண்பாடுகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் என எங்கெங்கு காணினும் முரண்கள். முரண்களைத் தவிர்க்கவும் முடியாது. எனவே முரண்களோடு வாழ்வதுதான் வாழ்க்கை என்று சொல்லும் நூல். ஆனால் வாழ்க்கையில் முரண்பாடுகள் மட்டுமே இருப்பதில்லை. ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன. இல்லையென்றால் வளர்ச்சி எப்படி ஏற்பட முடியும்? உலகம் எப்படி இயக்க முடியும்? ஒற்றுமைக்கும் இணக்கத்துக்கும் இந்நூல் அழுத்தம் தரவில்லை. தனிமனிதர்கள் சந்திக்க நேர்கிற முரணகள் மட்டுமல்ல, உலகு தழுவிய, […]

Read more

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள், திருவாரூர் அர. திருவிடம், நக்கீரன் பதிப்பகம், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் சந்தித்த கொடூரம், வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களின் மனநிலை ஆகியவற்றை நூலாசிரியர் ஒரு திரைக்கதைபோல விவரித்துள்ளார். நூலின் ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை விளக்குவதாக இருக்கிறது. நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி இந்திய அரசியலில் பெற்ற முக்கியத்துவம், அவர் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் விரிவாக […]

Read more

சரபேந்திர பூபால குறவஞ்சி

சரபேந்திர பூபால குறவஞ்சி, மணி மாறன், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், பக். 180, விலை 100ரூ. தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. இது நாடக வகையைச் சார்ந்தது. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவது இந்நூல். குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பட்டதுதான் இக்குறவஞ்சி. இவர்கள் தண்டபாணி தேசிகரின் மகனாவார். இந்நாடகம் தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திருவிழாக்காலங்களில் […]

Read more

சிலம்பின் பரல்கள்

சிலம்பின் பரல்கள், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார காப்பியத்தின் சுவையையும், சிறப்புகளையும், கதைச் சுருக்கத்தையும் கொண்டது இந்நூல். சிலம்பினை கற்கச் சிறந்த நூல் இது என்று பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மதிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பரலும், ஒரு தொடுக்கப்பட்ட மாலைதான். பதினாறு தலைப்புகளில் சிலப்பதிகார தோட்டத்தில் மறைந்துகிடக்கும் மனோரஞ்சித மலர்களையும் வெளிக்கொணர்கிறார் ஆசிரியர் என்று முனைவர் தி. ராசகோபாலன் பாராட்டியுள்ளார். சிலப்பதிகார காப்பியத்தில் முத்தமிழும் கொஞ்சிக் குலவுகின்ற அழகையும், […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 512, விலை 250ரூ. இந்து சுந்தரேசன், ஆங்கிலததில் எழுதிய ஷேடோ பிரின்சஸ் என்ற வரலாற்று நாவலை, அவரது தாயார் மதுரம் சுந்தரரேசன் மூலக்கதையை படிப்பது போன்றே, கற்பனை வளத்துடன் கூடிய, முகலாய சரித்திரக் காதல் கதையை, மிகவும் சாதுர்யமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார். பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகிய அறுவரும், முகலாய சாம்ராஜ்யத்தின் வரலாற்று நாயகர்கள் என்றால், நூர்ஜஹான், மெகருனிசா, மும்தாஜ், ஷாஜஹான்-மும்தாஜின் மகள் […]

Read more

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும், மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 144, விலை 80ரூ. தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்என வழங்குவதை போலவே வேதாத்திரி மகரிஷியின் பாடல்கள் உரைகள் எல்லாம், வேதாத்திரியம் என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. இருவருமே குரு அருள் தேவை என்று கூறினர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற தாரக மந்திரத்தை தந்தவர் மகரிஷி. உடலோம்பல் இறை […]

Read more

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ. கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, டாக்டர் கோவி மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 356, விலை 275ரூ. சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால் புலைச்சியாயினும், பிறவி இசை மேதை. மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடும் உறுதி. சமஸ்தானங்கள், ஜமீன்தாரர்கள், கலெக்டர்கள், வெள்ளைக்கார துரைகள் முதலியோர் ரசிப்பதற்காக அவர்களுக்காக பாடமாட்டேன் என்ற வைராக்கியம், நம்மை பிரமிக்க வைக்கும். கலைகளை வளர்த்த தஞ்சை சரபோஜி மன்னரே, அவளைக் காதலிக்கிறார். பின் தன் மகன் சிவாஜியும் அவளை […]

Read more

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தை பலரும் பல வழிகளில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தை எளிய தமிழில் ஒரு நாவல்போல சுவைபட கொடுத்து இருப்பது புதுமை என்பதோடு, ராமாயணத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் கருவியாக இந்த நூல் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. உத்ர காண்டம் […]

Read more
1 706 707 708 709 710 841