ரோமாபுரி யாத்திரை

ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், சந்தியா பதிப்பகம். கவித்துவமும் பயணக் குறிப்பும் தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதுதான் முதல் பயண விவரண நூல் என்கிறது சந்தியா பதிப்பகம். பாரேம்மாக்கல் கோ.வர்ணதோர் என்கிற போர்த்துகீசியர் கடல் மார்க்கமாக உலகைச் சுற்றி வரும் இந்தப் பயணத்தினூடாக இந்தியா குறித்தும், தமிழகம் குறித்தும் பல பதிவுகளை செய்துவிட்டுப் போயிருக்கிறார். இந்நூலை யூமா வாசுகி மொழியாக்கம் செய்திருக்கிறார். விவலிய மொழியின் கவிதைக்குப் பக்கமான நடையில் யூமாவின் மொழிபெயர்ப்பு இந்த யாத்திரையை மகிமைப்படுத்துகிறது என்று லிபி ஆரண்யா தன் முன்னுரையில் சொல்கிறார். […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில் ராஜேந்திரன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 328, விலை 250ரூ. இன்றைய குழந்தைகளிடம் கடவுள் கண்முன் தோன்றி வரம்கேள் என்று சொன்னால் இந்த உலகத்துல இனிமே பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பள்ளிகள் குழந்தைகளைப் படுத்தி எடுக்கின்றன. விளையாட்டும் குறும்பும் நிறைந்த குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் தான் உலகில் இருக்கும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். ‘ […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி பி.ஏ., விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ. அகிம்சை மீது அளவற்ற அன்பு செலுத்திய காந்தி, தமிழின் மீது தணியாத காதல் ஈடுபாடும் வைத்திருந்தார். தான் ஒரு இந்து என்பதற்காக கீதையை மதித்தார் என்று எடுத்துக்கொண்டால், உலகப்பெரும் அறநூல் என்ற மகுடத்தோடு திருக்குறளைப் படித்தார். எழுத்துக் கூட்டியாவது தமிழைப் படித்தவர். மோ.க. காந்தி என்று தமிழில் அவர் இட்ட கையெழுத்து இன்றும் சபர்மதி ஆசிரமத்தில் இருக்கிறது. இந்த ஈடுபாடுதான் அவரைத் தமிழகத்தை நோக்கியும் அடிக்கடி […]

Read more

சூரிய உதடுகள்

சூரிய உதடுகள், சுசி. நடராஜன், சாரதி பதிப்பகம், 107/6, ரிச்சித் தெரு, சித்தாதிரிப் பேட்டை, சென்னை2, பக். 96, விலை 45ரூ. கவிதையின் ஆழம் கவிஞன் எடுத்தாளும் வார்த்தைகளில்தான் உள்ளது. மனிதம், இயற்கை, சமூகம், காதல், போட்டி, பொறாமை, சுதந்திரம் எதுவாக இருந்தாலும் சுசி. நடராஜனின் வார்த்தைகளில் ஓர் உயிர்ப்பு பெற்றுவிடுகிறது. இரட்டை மாடு வாழ்க்கை வண்டி பூட்டிய பிறகு பாரம் சுமக்க பயப்படும் மிரட்சி வாழ்க்கைப் பயணத்தில் எழும் மிரட்சியை ஆசிரியர் தொட்டுச் செல்லும் பாங்கில் ஒரு பெருமூச்சு எழுகிறது. வாழ்க்கையின் எச்சரிக்கை […]

Read more

அப்பாவின் துப்பாக்கி

அப்பாவின் துப்பாக்கி, ஹினெர் சலீம், தமிழில் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்,, பக். 112, விலை 90ரூ. குர்திஸ்தான் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றை, சிறுவன் ஆசாத்தின் கதைக்குப் பின்புலமாக்கியதன் நோக்கம் நூலில் நிறைவேறியுள்ளது. குர்திய மக்களின் விடுதலை வேட்கையைப் பதிவு செய்வதுதான் நூலாசிரியரின் நோக்கம். அதைத்தான் அப்பாவின் துப்பாக்கியாக வடித்துள்ளார். கூடவே, அந்நாட்டின் இயற்கை வளம், பண்பாட்டுக் கூறுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் மேல் விழும் சிதைவுகளையும் மறக்காமல் பதிவு செய்கிறார். வழக்கமான […]

Read more

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், பேராசிரியர்கள் வி.மரிய அந்தோணி, க. திருமாறன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. தமிழ் இலக்கண விதிகள் எளிய நடையில் சான்றுகளோடு விளக்கியிருப்பதோடு பேச்சு வழக்கில் உள்ள ஏராளமான பிழையான சொற்களும் தரப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்களும் தமிழை பிழையின்றி பேச, எழுத நினைப்போருக்கும் உகந்த நூல். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.   —-   நகைச்சுவைச் சக்கரவர்த்தி ஜே.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், சென்னை, பக். 408, விலை 300ரூ. திரை உலகினரே மறந்துவிட்ட […]

Read more

சிறுவர் கதைக்களஞ்சியம்

சிறுவர் கதைக்களஞ்சியம் (தொகுதி 3,4), மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 85+85ரூ. சின்னஞ்சிறுவர்களின் வெள்ளை மனதில் நல்ல நல்ல கருத்துக்களை விதைகளாக விதைத்திருக்கிறார் ஆசிரியர். பெரிய பெரிய தத்துவ நூல்கள், ஞான நூல்களால் புரிய வைக்க முடியாத உயர்ந்த நீதிகளை, தர்மங்களை நியாயங்களை, நெறிமுறைகளை, நியதிகளை, சின்னஞ்சிறு கதைகளாக்கி போதிக்கும் உத்தியை இக்கதைக்களஞ்சியங்கள் வழியாகச் செய்துள்ளார். கதைகளில் மன்னர்கள், வியாபாரிகள், ஞானிகள், வரலாற்றுப் புருஷர்கள், புராண நாயகர்கள், சமகால நிகழ்வுகள் என்று களமாக எடுத்திருப்பது, சலிப்பில்லாமல் […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, சாய்சூர்யா, 204/43, டி7, பார்சன் குருபிரசாத் ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை 450ரூ. இது புதுவிதமான நாவல். 1947 ஆண்டு 15ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்குமுன், 1922 ஆகஸ்ட் 15ந்தேதி பிறந்த கல்யாணம், பின்னர் மகாத்மா காந்தியின் காரியதரிசியாக இருந்திருக்கிறார். 2000வது ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி பிறந்த சத்யா இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம். பொதுவாக சரித்திரக் கதை என்றால், சரித்திரம் குறைவாகவும், கற்பனை அதிகமாகவும் இருக்கும். இதில் கற்பனை குறைவாகவும், […]

Read more

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார்

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார், டி.வி. சுப்ரமணியன், செந்தூரன் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 150ரூ. உலகில் தோன்றிய முக்கியமான சமூகப் புரட்சியாளர்களுள் ஒருவர், தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆரம்பகால வாழ்க்கை, சமுதாய சிந்தனைகள், மதம், இதிகாசம் பற்றிய அவரது கருத்துகள், சுவாரசியமான சம்பவங்கள், மேடைப் பேச்சு, பொன்மொழிகள் என்று எளிய நடையில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஈ.வெ.ரா. என்ற மனிதரைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும், அவர் எப்படி சமுதாயத்தைப் புரட்டிப் போடுபவராக மாறினார் […]

Read more

அவ்வையார் அருளிய நல்வழி

அவ்வையார் அருளிய நல்வழி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 150ரூ. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அவ்வையார் கூறி சென்ற வழியில் தெளிவு காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடையளிக்கும் நூல் இது. பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் 41 தலைப்புகளில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் செயல்களை எளிமையான நடையில் தந்துள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள தத்துவ கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனித மாண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அவ்வையார் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கும் […]

Read more
1 703 704 705 706 707 841