கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ. புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் […]

Read more

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பு மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை. ஜெயகாந்தன் என்ற ஆளுமை உருவான பின்னணி, வாழ்கைப் போராட்டத்தில் எழுதுகோலை அவர் ஆயுதமாக தேர்ந்தெடுத்த அனுபவம், தமிழ் இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த அவரது எழுத்தின் துணிவு, சமூகத்தின் மீதான அவரது அக்கறை, கோபம், அவர் எழுப்பிய குரல், மண் வாசனையைத் தாண்டி மனித நெடியை வீசச் செய்த அவரது கதைகள் பற்றிய பார்வை, சினிமா சார்ந்த அவரது விமர்சனங்கள் சினிமா உலகில் எத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்தியது, மாற்று சினிமாவுக்கான அவரது […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ. அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து […]

Read more

கனவு சினிமா

கனவு சினிமா, க. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. ஒரு உதவி இயக்குநரின் அனுபவங்களின் பதிவாக மட்டும் நில்லாமல், சினிமா இயக்குநராக வேண்டும என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தரும் அனுபவப்பாடமாகவும் இந்நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர். வாய்ப்புக்காக பல இயக்குநர்களைத் தேடிப் போனதை, கேட்டறிந்த உண்மைகளை, கண்டுணர்ந்த அனுபவங்களை கனவு சினிமாவாக பதிவு செய்துள்ளார். வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தர கற்பனை கலந்திருக்கிறார். அதுதானே சினிமா. சினிமாவை சுவாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   […]

Read more

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…,

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம்,மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. சாதி, தீண்டாமை என்ற கோட்பாடுகள் தமிழகத்தில் ஏன் தோன்றின, எப்போது தோன்றின? குறிப்பாக சங்க இலக்கியங்களில் அவை தென்படுகின்றனவா? என்ற தேடலின் முயற்சியே இந்நூல். சாதி, தீண்டாமை என்கிற கோட்பாடுகள் காலந்தோறும் எப்படி உருப்பெற்றன என்ற வகையிலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 3/8/2015.   —- வல்லினம் நீ உச்சரித்தால், முகமது மதார், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 50ரூ. ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஏதாவது […]

Read more

யோகாசனமும் மருத்துவப் பயன்களும்

யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   —- 1001 […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, இராம்குமார் சிங்காரம், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html குமுதம் குழுமத்தைச் சேர்ந்த கல்கண்டு இதழில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற தன்னம்பிக்கை ஊட்டிய நூல். ஒரு கருத்தைச் சொல்லவும் கேட்பவர், அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுபவை கதைகள். உலகப் பேச்சாளர்கள் யாராக இருந்தாலும் தங்கள் கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்ய கதை சொல்வதை ஒரு உத்தியாகவே கொண்டுள்ளனர். இதைத்தான் […]

Read more

வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, இடையன் இடைச்சி நூலகம், கோவை, பக். 96, விலை 100ரூ. கவிதைகளை வெயிலில் நனையவிடலாம், மழையில் காயப் போடலாம், அது இலக்கணப் பிழையோ, சொற்பிழையோ ஆகாது. கவிதையின் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பொருட்பிழை நிகழாது கவிஞன் நிகழ்த்திக் காட்டும் உத்தி அது. கவிஞர் ச. மணி வெயிலில் நனைந்த பிறகும் மழை மழையாகவே இருக்கிறது என்பதை நம்முன் காட்சிப்படுத்துவது அனுபவ வெளிப்பாடு. நூற்றாண்டினாலும் பக்தர்களின் பாதங்களை அலம்பி விடும் தெப்பக்குளத்து மழை கவிஞரின் படிமக் காட்சிக்கு சாட்சி. […]

Read more

வெளிச்சம் விற்க வந்தவன்

வெளிச்சம் விற்க வந்தவன், ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 320, விலை 200ரூ. மழை பொழிய ஆரம்பிக்கும் முன்னே வரும் மண்வாசனை மாதிரியான கதைகள் இவை. கதைக்களம், சித்தரிக்கும் மாந்தர்கள், ஊடாடும் விலங்குகள் எல்லாமே நம்முடன் நெருக்கமாக உறவாடியவையே. அன்றாடம் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்துபோன சம்பவங்களின் நினைவை மீட்டெடுக்கும் கதைகள் அதிகம். ஒரு கதையைப் படித்ததும் அடுத்த கதையையும் படிக்கலாமே என்று ஏங்க வைக்கும் யதார்த்த உந்துதல். இப்படி ராஜா செல்லமுத்துவின் இந்த சிறுகதைத் தொகுப்புக்கு பல சிறப்புகள். ஆடுகளை சுமந்து […]

Read more

108 திருப்பதிகள் (பாகம் 5)

108 திருப்பதிகள் (பாகம் 5), ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், பக். 192, விலை 200ரூ. மகாவிஷ்ணு எப்போதும் இருந்து அருள்பாலிக்கும் 108 திருப்பதிகள் ஒவ்வொன்றுக்கும் நேரில் சென்று தங்கி தரிசித்து அதன் விவரங்களை பக்தர்களுக்காக வழங்கியுள்ளார் ப்ரியா கல்யாணராமன். புண்ணிய ஸ்தலங்களை நேரில் தரிசிக்கும் அனுபவத்தை, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக உள்ளது. இதற்கு முன் வந்த நான்கு பாகங்களைப் போலவே இதுவும் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக வந்தபோது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காஞ்சிபுரத்தில் திரு நிலாத் திங்கள் தூண்டத் […]

Read more
1 33 34 35 36 37 57