முக்கோணக் கிளிகள்

முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ. முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.   —- மனஅலசல், க. செல்லப் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ. பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் […]

Read more

கம்பன் கவியமுதம்

கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் புதுத்தகம் வெளியீடு, பக். 408, விலை 240ரூ. இந்திய பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருக்க வேண்டும். இந்தியாவை உருவாக்கிய சட்டங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்தவராக அருணகிரி விளக்குகிறார் என்பதை நாடாளுமன்றம் அமைந்த விதத்தை அவர் விளக்கும்போதே நிரூபணமாகிவிடுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, தலைமைச் செயலாகம், தலைவர்கள், பிரதமர்கள், நாடாளுமன்ற நடைமுறைகள், தேர்தல் ஆணையம், ஆணையர்கள், தேர்தல் நடைமுறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உரிமைகள், […]

Read more

இந்துமதம்

இந்துமதம், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 440, விலை 300ரூ. இந்து மதம் என்பது பல்வேறு சமயக் கொள்கையின் ஒருமைப்பாடு என்பதை தமிழ் உலகிற்கு நிறுவும் அரிய முயற்சி இந்நூல். பல மெய்ஞானிகள், நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரை என்றெல்லாம் பலவகையான எண்ணிறந்த வழிமுறைகளை நம் இந்து சமய நெறியில் எதற்காக எடுத்து வைக்கப்பெற்றுள்ளன என்பதை இந்நூலைக் கற்போர் யாவரும் புரிந்து கொள்வர். பலதரப்பட்ட மக்கள் வாழும் நம் சமூகத்தில் […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, பக். 360, விலை 300ரூ. வெற்று ஆரவாரங்கள், தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு. கதைக்குக் கதை நம் அண்டைவீட்டு நிகழ்வுகளே கருக்கெண்டுள்ளது. மேல்வீடு முதல் தட்டான் வரையான 34 கதைகளும் நம் சக மனிதர்களின் அடையாளங்களைத் தாங்கி வந்துள்ள கதைகள். மேல் வீடு சங்கரியாகட்டும் கௌவியாகட்டும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையனாகட்டும் அத்தனை பேரும் இந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிக்கலில் விடுபட முடியாத புதிர்களாகவே உள்ளனர். சிவபாஸ்கரன், லக்ஷ்மி அக்கா, அனு, விஜயலட்சுமி, சீனிவாசன் […]

Read more

அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணிமைந்தன், அடையாறு புற்றுநோய் அறக்கட்டளை, பக். 288, விலை 150ரூ. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் கன அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட் லட்சக்கணக்கான புற்று நோயாளிகளின் மறுவாழ்வு இல்லமாகத் திகழும் அதை நிறுவ அவரும் அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் பட்ட கஷ்டங்கள் இதுவரை வெளியுலகிற்குத் தெரியாதவை. அவற்றை விறுவிறுப்பான நாவல்போல் தந்துள்ளார் ராணிமைந்தன். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தோற்றமும் வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரு வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. மருத்துவமனை உருவாக உதவிய […]

Read more

பிஸினஸ் மகாராணிகள்

பிஸினஸ் மகாராணிகள், சு. கவிதை, குமுதம் புது(த்)தகம், பக். 136, விலை 95ரூ. தாங்கள் வாழும் சூழ்நிலையை மீறி, ஜெயிக்கும் பெண்கள் பற்றிய சாதனைத் தொகுப்பு இந்நூல். குமுதம் சிநேகிதியில் தொடராக வந்தபோது பல பெண்களின் வாழ்வில் சாதிக்க தூண்டுகோலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எல்லாம் பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கிரண் மஜுர்தார்ஷா வினிதாபாலி, லீனாநாயர், இந்திராநூயி உள்ளிட்ட பல பிஸினஸ் மகாராணிகளின் அனுபவங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவன. அவர்கள் தரும் சக்ஸஸ் டிப்ஸகள், சவால்களை […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து […]

Read more
1 34 35 36 37 38 57