சோவின் ஒசாமஅசா

சோவின் ஒசாமஅசா, எழுத்தும் தொகுப்பும் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256+256, விலை 190ரூ+190ரூ. ஒரு சாதாரண மனிதனுக்குள் இத்தனை அசாதாரண அனுபவங்களா என்று வியக்க வைக்கும் நூல். வழக்கறிஞர், பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், அரசியல்வாதி, நாடகவாதி என்று பன்முகத்தன்மை கொண்ட சோவின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் சுரங்கம். தாத்தா ராமநாதய்யர் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுடனான அவரது அனுபவங்களைச் சொல்லும்போது, உண்மையைத் துணிந்து சொல்லும் போக்கு சோவுக்கே உரியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, காமராஜர், ராஜாஜி, பாலசந்தர், மொரார்ஜி, […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை, பா. சேதுமாதவன், உலா பதிப்பகம், திருச்சி, பக். 136, விலை 80ரூ. சங்ககால மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரும் சோழநாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர். காரணம் அதன் பெருவளமும் புவியியல் ரீதியாக பெற்றிருந்த இயற்கை அமைப்புமேயாகும். இம்முயற்சியில் பலர் வெற்றியும் கண்டனர். பல மொழிகள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் நிரிவாகத்தின் கீழ் சோழநாடு இயங்கி வந்ததால், காலந்தோறும் பல நெருக்கடிகளையும், பன்னாட்டு, கலாச்சார சமூக பொருளாதார மாற்றங்களையும், கலை, இலக்கிய வளர்ச்சியையும் பாதிப்பையும் கண்டது. இச்சரித்திரக் கூறுகளை […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. காந்தியடிகளின் வாழ்க்கையை மக்கள் மனதில் எளிதில் பதிவு செய்ய முனைவர் ஆவுடையப்பன் எடுத்திருக்கும் உத்தி இது. ஒரு நிகழ்வைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவத்தை பொருத்தி விடுகிறார். அதை அந்த உரையாடல் மூலம் நிறைவு செய்வதால் படிப்போர் மனதில் எளிதில் காந்தியின் கொள்கைகள் வந்து உட்கார்ந்துவிடுகின்றன. அகிம்சை, சத்தியம், அன்பு, சகிப்புத்தன்மை, சத்தியாகிரகம் போன்றவற்றை காந்தி எப்படி தன் வாழ்வின் நெறிமுறைகளாகக் […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், ஜீவா பதிப்பகம், பக். 176, விலை 90ரூ. தமிழில் கடித இலக்கியம் என்னும் துறை வளர பலர் பலவழிகளில் உதவியுள்ளனர். அவர்களில் வெ. சாமிநாத சர்மாவின் பங்கு அதிகம். மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அன்றைய ஜோதி இதழில் அவர் முழுமையாக நேர்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கடிதப் போக்குவரத்தின் தொகுப்பே இந்நூல். கடிதங்கள் ஒவ்வொன்றும், காலம், நேரம், இடம், அரசியல் சூழல், சமூக தேவை, காங்கிரஸின் அன்றைய நிலை, இந்திய தேசிய சுதந்திரப் […]

Read more

வெற்றிப் படிக்கட்டு

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. வசந்தகுமாரின் இரண்டாவது வெற்றிப் படிக்கட்டு இது. படிப்போரையும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவைக்கிறார். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துத் தரப்பினரும், எல்லா தொழில் செய்பவர்களும், அவர்கள் சிறு வியாபாரிகளாக இருந்தாலும் சரி, பெரும் தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, ஆண்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பும்வகையில் வெற்றிக்குரிய வழிகாட்டுதலைத் தந்துள்ளார். அதற்குப் பொருத்தமான உன்னதமிக்க சின்னஞ்சிறிய கதைகளைக் கூறிச் சொல்வது நூலின் சிறப்பு. தன்னம்பிக்கை, […]

Read more

தேவதைகளின் வீடு

தேவதைகளின் வீடு, எம்.ஸ்டாலின் சரவணன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 88, விலை 60ரூ. கவிஞருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இக்கவிதை ஊர்வலம் என்பதை கவிதைகளின் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவருக்குள் எழும் கோபதாபங்களையும் மகிழ்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் இறங்கி வைக்கும் சுமைதாங்கியாக இக்கவிதைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். “ஆறு கொலை தடயம் சிக்கியது மணல் லாரி தடம்” போன்ற கவிதைகள் அந்த ரகமே. தன் வாழ்வில், தன் நண்பர்களின் வாழ்ந்த நடந்த நிகழ்வுகளை சமுதாயம் உணரும் விதத்தில் அதன் போக்கிலேயே சென்று உண்மையாகப் பேசுவதால் இக்கவிதைகள் […]

Read more

செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி,  கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ. கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 64, விலை 70ரூ. மாணவர்கள் அதிக மதிப்பும் மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குமுதம் பக்தி ஸ்பெஷலில், ஷெல்வீ எழுதிய பலன்களும் பரிகாரங்களும் தொகுத்து, இப்போது குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, நூலாக கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் முன்னேற்றத்தில் எல்லா பெற்றோருக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்கும். மாணவர்களின் ஒவ்வொரு ராசியையும் கூறி, […]

Read more
1 36 37 38 39 40 57