சிறுவர் கதைப் பாடல்கள்

சிறுவர் கதைப் பாடல்கள், கிருங்கை சேதுபதி, சாகித்ய அகடமி, விலைரூ.230 ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம். எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more

கட்டுரைக் களஞ்சியம்

கட்டுரைக் களஞ்சியம், முனைவர் மு. இளங்கோவன், வயலவெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), அரியலூர் 612 901, பக். 160, விலை 150ரூ. செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை. தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது. நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் […]

Read more

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ. இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை, பிரபோதரன் சுகுமார், ஹயக்ரீவா பப்ளிகேஷன்ஸ். பதினெட்டா நூற்றாண்டில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சமாதி […]

Read more

இசைஞானி இளையராஜாவின் பால் நிலாப்பாதை

பால் நிலாப்பாதை, இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், பக். 208, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-373-6.html திரையுலகில் இசைஞானியின் வெற்றிகளும், சாதனைகளும் அற்புதமானவை. ஆச்சரியப்பட வைப்பவை. அவருடைய வாழ்க்கைப் பயணம், கிராமத்துப் புழுதி மண்ணில் துவங்கி, உலகெங்கிலும் சுற்றி வருகிறது. அவரது இசைப் புகழோ ககனப் பெருவெளியெங்கும் காற்றுப் போல பரவி, வியாபித்திருக்கிறது. வாழக்கை, தொழில் சார்ந்த அனுபவங்களைத் தாண்டி அவருடைய ஆன்மிக அனுபவங்களும், நம்மை அவரருகே கொண்டு வந்து நிறுத்தி, அவரை அண்ணாந்து பார்க்க […]

Read more

சிவப்புச் சின்னங்கள்

சிவப்புச் சின்னங்கள், நிர்மால்யா, மலையாளமூலம் எம்.சுகுமாரன், சாகித்ய அகடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷா சாலை, புதுடில்லி 110001. பக் 369, விலை 180ரூ. மார்க்சிய கருத்தியல், அரசியல், பொருளாதார சூழல் இவையே தனது கதைகளின் அடியோட்டம் என்றும் அவற்றிற்குத் தத்துவ ரீதியான பரிணாமம் எதுவுமில்லை என்றும் கூறும் சுகுமாரனின் 2006ம் ஆண்டின் சாகித்ய அகடமி விருதி பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு. பிறவி எனக்கு முதல் மறதியாக இருந்தது. இப்போது இதோ கடைசி மறதியாக மரணம் வந்து சேர்ந்துள்ளது என முடியும் (57) கைவிடப்பட்டவர்களின் வானம் […]

Read more

கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ. சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   Guru Vijayeendra The Invinvible Saint(part 1). தமிழ்மூலம்-அம்மன் சத்தியநாதன், ஆங்கிலத்தில்-கே. லஷ்மண், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 290ரூ. […]

Read more

துக்காராம்

துக்காராம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மகாராஷ்டிரா மாநிலத்தில், பக்தி நெறியை பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப் போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வரகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் […]

Read more
1 2