புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

ஜான்சிராணி

ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]

Read more

மோகனம்

மோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]

Read more

யோகாசனமும் மருத்துவப் பயன்களும்

யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   —- 1001 […]

Read more

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், ஹோல்கல் கெர்ஸ்டன், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவரது வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகளின் பதிவு இந்நூல். மத சரித்திர நூல்களை எழுதுவதில் நிபுரணரான ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். அவை இயேசு பற்றிய ஆய்வுக்குப் பயனுள்ள ஆதாரங்களாக விளக்குகின்றன. இயேசு இளம் வயதில் பட்டு வியாபார பாதை (Silk Route) வழியாக இந்தியாவுக்கு […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ. நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் […]

Read more

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

கருப்பு காந்தி காமராஜர்

கருப்பு காந்தி காமராஜர், சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 40ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு ஏற்றபடி அழகாக எழுதியுள்ளார், எழுத்தாளர் மெர்வின்.   —-   யோகா புத்தகம், தஞ்சை சக்தி ரமேஷ்,  3/6, சத்திய மூர்த்தி நகர், நந்தனம், சென்னை 35, விலை 160ரூ. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் எவ்வளவு அவசியமானவை என்பதை வலியுறுத்தி, ஸ்பெஷல் யோகா என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார் தஞ்சை சக்தி ரமேஷ். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.   […]

Read more

ஸ்பெக்ட்ரம் ஊழல்

மணிச்சுடர் வெள்ளி விழா மலர், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை – 1, விலை 300 ரூ. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள வெள்ளி விழா மலரில், கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். சிரமப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள மலர், சிறப்பாய் அமைந்துள்ளது.   — ஸ்பெக்ட்ரம் ஊழல், கிழக்கு […]

Read more