குரல்வளையில் இறங்கும் ஆறு

குரல்வளையில் இறங்கும் ஆறு, அய்யப்ப மாதவன் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 120, விலை 100ரூ. அய்யப்ப மாதவனின் சமீபத்திய தொகுப்பு குரவளையில் இறங்கும் ஆறு. கவிதைக்கான தனியான பிரயத்தனங்களை அய்யப்ப மாதவன் கொண்டிருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் உறங்கிவிட்ட இரவில் ஒரு நாளை, அதுவரையிலான தன் வாழ்வை நினைத்து உறங்காமல் கிடந்து நினைவில் ஓட்டிப் பார்க்கிறார். எங்கோ செல்ல நினைத்து, கடைசியில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு தற்காலிக மரணத்துக்குத் தயாராகிறார். இவ்வாறான தன் அனுபவங்களை எல்லாம் கவிதைக்குச் சொல்கிறார். எதிர்வினையாற்றாத கண்ணாடியில் […]

Read more

நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ. இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி […]

Read more

விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-867-0.html மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஐந்து சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் அடங்கிய தொகுப்பு. சங்கீத குருவின் மகளை சிஷ்யன் மணக்கும் கலப்பின காதல் கதையை அது அதில் இல்லை நெடுங்கதையில் ரசமாகவும் சங்கீதமாகவும் தந்திருக்கிறார் கவிஞர். என் அப்பாவுக்கு நீதான் பிள்ளை. அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அற்ப ஆயுசில் கணவன் இறக்க, மாமனாரை […]

Read more

வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more

வள்ளுவம் கூறும் வாழ்வியல்

வள்ளுவம் கூறும் வாழ்வியல், விதை வெளியீடு, ஈரோடு, விலை 275ரூ. வள்ளுவம் கூறும் வாழ்வியல் சிந்தனைகளான அறம், அன்பு, அருள், தவம், பொருள் ஈட்டும் முறைகள், இன்சொல், ஈதல், கல்வி, அறிவு, ஊக்கம், முயற்சி, மன உறுதி, ஒழுக்கம், பண்பு, நட்பு, எண்ணங்களில் உயர்வு, நிலையற்ற வாழ்வின் தன்மை போன்றவற்றையும், அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 100 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அதனோடு அறநூல்கள், இலக்கிய நூல்கள், சமய நூல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், பழமொழிகளையும் இணைத்து எல்லா தரப்பினரும் கற்றறியும் வண்ணம் தொகுத்தளித்துள்ளார் பொறியாளர் தே.ஹெலினா. இது […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர், பிறமொழிக்கதைகள், தமிழில் வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. பிரேம்சந்த், தாகூர், பகவதி, சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். லாகூர் எவ்வளவு தொலைவு என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி. நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. […]

Read more

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன்

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன், டாக்டர் ஒய். லிவிங்ஸ்டன், ஆரோவ்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, பக். 427, விலை 240ரூ. கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பதோ, சிந்தித்துக் கொண்டிருப்பதோ வாழ்க்கை இல்லை. நாம் ஒவ்வொரு விநாடியும் எவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுகிறோமோ, அதுவே உண்மையான வாழ்க்கை என்று, அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்து, ஒருவர் வெற்றியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி? அவ்விதம் வெற்றியான வாழ்க்கையை அமைக்க முயல்வோர் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அதற்கான […]

Read more

மொழிப்போர் மறவர்

மொழிப்போர் மறவர், வெளியிட்டோர் ஊர்ச் செய்தி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழைப் போற்றியி தகைமையாளர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாக தொகுத்தளிக்கிறது இந்நூல். தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், ச.சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் உள்பட 14 தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தளித்திருக்கிறார் ஓவியப் பாவலர் மு. வலவன். இந்தி […]

Read more

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-345-3.html இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும், பின்பும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி, புதிய தகவல்களைக் கூறும் நூல் இது. இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து, இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆராய்ந்துவிட்டு திரும்பிச் சென்றார். சிலுவையில் அறையப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு இந்தியா […]

Read more
1 144 145 146 147 148 223