மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html முதன்முறையாக, தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெறும் கதை சூழலை கொண்ட நாவல் என்ற அறிமுகத்தோடு, இந்த நூல் பரிச்சயமாகிறது. ஆங்கில சொற்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் ஒரு கலை. ஆசிரியருக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி படத் தொகுப்பாளர், டெரன்ஸ் பாலின் அனுபவங்களில் கதை நாயகனும், தன் அனுபவங்களைக் காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக சேகரித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய […]

Read more

நாரதரின் பக்தி நெறி

நாரதரின் பக்தி நெறி, மும்பை ராமகிருஷ்ணன், பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 100ரூ. நாரதர் என்ற பெயருக்கு, மனிதர்களின் அஞ்ஞானத்தை போக்கி, ஞானம், ஆனந்தம் அளிப்பவர் என்பது பொருள். பிரம்மாவின் மானச புத்திரரான நாரதர் எழுதிய பக்தி சூத்திரத்தை இந்த நூல் விளக்குகிறது. இதில் 84 நாரத பக்தி சூத்திரங்கள் விளக்கப்படுகின்றன.  முதல் 24 சூத்திரங்கள் பக்தியின் நிலையைக் கூறுகின்றன. மற்றவை அதன் விளக்கம் கூறுகின்றன. சூத்திரங்களை விளக்கும்போது, பகவத்கீதை, அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருமூலரின் திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, […]

Read more

ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 200ரூ. பெண் விடுதலையைப் பேசும் நாவல் இது. நாவலின் கதாநாயகி பள்ளிப்பருவத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நாயகியின் பெற்றோர் வெகுண்டு எழுந்து காதலரைப் பிரித்து, நாயகியை வேற்றூரில் படிக்க வைக்கின்றனர். 19 வயதிலேயே அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒரு திருமணமும் செய்கின்றனர். கட்டிய கணவன் மனதிற்கு இனியவனாக இல்லை. கணவனின் முட்டாள் தனங்களாலும், சுயநலமான நடத்தைகளாலும் கதாநாயகி மனம் சோர்ந்து போகிறாள். கடைசியில் தன் […]

Read more

நமது பாரம்பரிய இசை

நமது பாரம்பரிய இசை, தொகுப்பாசிரியர்-சித்தார்த்தன், பண்மொழிப் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இந்த நூல் கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆராகண, அவரோகண வரிசைகளும் இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன. கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்க இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய இசை என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் […]

Read more

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக்

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக் (ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 1260ரூ. இசை ரசிகருக்கு மிகவும் பிடித்தது, கீர்த்தனைகளும், கிருதிகளுமா அல்லது கற்பனையாக ஊற்றெடுக்கும் ஆலாபனைகளும், நிரவல்களும், ஸ்வரங்களுமா? எடுத்த எடுப்பிலேயே, கீர்த்தனைகளும், கிருதிகளும் தான் எனப் போட்டுடைக்கிறார் வித்யா பவானி சுரேஷ். இவர், சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல, கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர். அதையும் தாண்டி சிறந்த எழுத்தாளர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ராகத்தின் அமைப்பு, தாளத்தின் […]

Read more

வர்ணசாகரம்

வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ. வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்வும், அவர் சமுதாயத்துக்கு காட்டி வரும் நல்ல வழிகளை மையமாக வைத்து வண்ண புகைப்படங்களுடன், 24 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நூலாகும். வீழ்வது கேவலம் அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம், விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை என்ற நீதியரசரின் வைரவரிகளை இளைஞர்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நீதியரசரின் […]

Read more

கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர், ஆ.சி. சம்பத், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-183-2.html விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், இந்தியாவின் தென் பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். அவர் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எழுந்த பல சவால்களை எளிதாகச் சமாளித்தார். விஜயநகரத்தின் மீது தொடர்ந்து படையெடுத்த தக்காணத்து சுல்தான்களை வீரம் மற்றும் விவேகத்தால் வென்றெடுத்தார். அவரது பதவி ஏற்பு, ஆட்சிமுறை, போர்கள், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாய அமைப்பு ஆகிய அனைத்தையும் எளிமையாகவும், […]

Read more

இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more
1 142 143 144 145 146 223