இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்,

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும், இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் ச. சங்கர சரவணன், விகடன் பிரசுரம், விலை 195ரூ.‘ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., TNPSC முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும்வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. இந்தியாவை வெள்ளையர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆண்ட காலகட்டத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி.    —-   இறைவழி மருத்துவம், ஹெல்த்டைம் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-310-5.html […]

Read more

அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம், ச.சிவ. வல்லாளன், விகடன் பிரசுரம், விலை 155ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-6.html வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் அது ரத்த உறைவைத் தடுக்கும். இஞ்சி சாப்பிடுவோருக்கு இதய நோய் ஏற்படுவது இல்லை. மஞ்சள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறுகிறார் ச.சிவ. வல்லாளன். நன்றி: தினத்தந்தி.   —- காகிதப் படகில் சாகசப்பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, […]

Read more

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், விலை 90ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு என்கிறோம். ஆனால் இந்த ஏழு அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட மர்மங்கள் குறித்து இந்நூல் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ். சுவைபட எழுதியிருப்பதோடு, மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கிறார். நன்றி: தினத்தந்தி.   —- நீதிநூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, விலை 720ரூ. மனிதர்கள் இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழிவகைகளைக் […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more

ஜென் தொடக்க நிலையினருக்கு

ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு. எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி […]

Read more

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம், டிஸ்கவரி புக் பாலஸ், சென்னை, விலை 200ரூ. தமிழ் சினிமாவை, உலகத்தரத்துக்கு உயர்த்தியவர்களில் முக்கியமானவர் ஏவி.எம். மெய்யப்ப செட்டியார். ஏவி.எம். பேனரில் முதல் படம் நாம் இருவர். காரைக்குடியில் சாதாரண நாடகக் கொட்டகையில் தயாரிக்கப்பட்டு, சாதனை படைத்தது. படம் சிறப்பாக அமைவதற்காக செலவைப்பற்றி கவலைப்படமாட்டார். பாட்டு, நடனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்தநாள் படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் கல்கத்தா விஸ்வநாதன். படம் பாதிக்குமேல் எடுக்கப்பட்டபிறகு அதைப் பார்த்த ஏவி.எம்.முக்கு திருப்தி இல்லை. இதுவரை எடுத்ததை தூக்கிப் போட்டுவிட்டு, சிவாஜிகணேசனை கதாநாயகனாக […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-359-0.html ‘கல்லூரி கால் தடங்கள், இக்கணம் தேவை சிக்கனம், பணவீக்கம் ஒரு பார்வை, வேளாண்மை அன்றும் இன்றும் முதல் தலைமுறை, இளமையென்னும் தென்றல் காற்று போன்ற 39 தலைப்புகளில் வெ. இறையன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தோல்வியையும், துயரத்தையும் உறவுகளாக மாற்றிக் கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள். சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம், வெற்றி என்பது நம் மீது எறிந்த […]

Read more

குற்றம் தண்டனை மரண தண்டனை

குற்றம் தண்டனை மரண தண்டனை, அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. எதிர்ப்பு மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் கருத்தியலாளர் அ.மார்க்ஸின் குற்றம், தண்டனை, மரண தண்டனை என்ற நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன. நமது தூக்குமுறை வலி நிறைந்ததாகவும் இழிவுமிக்கதாகவுமே உள்ளது என்கிறார் அ.மார்க்ஸ். […]

Read more

சாகசக்காரி பற்றியவை

சாகசக்காரி பற்றியவை, தான்யா, வடலி வெளியீடு, சென்னை, விலை 50ரூ. புலம் பெயர்ந்து கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வாழும் கவிஞர் தான்யாவின் கவிதைநூல். புலம் பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைகளின் மையக்கரு. பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றி தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றவைக்கிறது என்பதை பதிவு செய்ததோடு அச்சூழலில்லிருந்து வெளிவர போராடிக் கொண்டிருக்கும் சாகசக்காரிகளைப் பற்றிய கவிதைகள் இவை. குடும்பம், குடும்ப உறவுகளுடனான போரே இதன் பாடுபொருளாகியிருக்கிறது. பேராற்றல் மிக்க பெண்களை […]

Read more

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ. மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் […]

Read more
1 141 142 143 144 145 223