நமது பாரம்பரிய இசை

நமது பாரம்பரிய இசை, தொகுப்பாசிரியர்-சித்தார்த்தன், பண்மொழிப் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இந்த நூல் கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆராகண, அவரோகண வரிசைகளும் இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன. கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்க இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய இசை என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் […]

Read more

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம், லலிதாராம், சொல்வனப் பதிப்பகம், பெங்களூர், பக். 224, விலை 150ரூ. இசை தொடர்பான தரமான கட்டுரைகளை வெளியிடுவதில், சொல்வனம் இணைய இதழின் பங்கு மகத்தானது. இசை நுட்பம் குறித்த தேர்ந்த புரிதலும், அதை சுவாரசியமாகச் சொல்வதிலும் நேர்த்தி பெற்ற எபத்தாளர் லலிதாராம். லயம் என்ற தலைப்பில் சொல்வனத்தில், அவர் எழுதிய மிருதங்கம் தொடர்பான இசைக்கட்டுரைகளும், பழனி சுப்ரமணிய பிள்ளை குறித்த மேலும் பல அரிய விஷயங்களும் சேர்ந்து, உருவாகியிருக்கிறது இந்த புத்தகம். இது பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறாக மட்டுமில்லாமல், […]

Read more

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக்

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக் (ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 1260ரூ. இசை ரசிகருக்கு மிகவும் பிடித்தது, கீர்த்தனைகளும், கிருதிகளுமா அல்லது கற்பனையாக ஊற்றெடுக்கும் ஆலாபனைகளும், நிரவல்களும், ஸ்வரங்களுமா? எடுத்த எடுப்பிலேயே, கீர்த்தனைகளும், கிருதிகளும் தான் எனப் போட்டுடைக்கிறார் வித்யா பவானி சுரேஷ். இவர், சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல, கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர். அதையும் தாண்டி சிறந்த எழுத்தாளர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ராகத்தின் அமைப்பு, தாளத்தின் […]

Read more

வர்ணசாகரம்

வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ. வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் […]

Read more

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர் நிலை

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர் நிலை, குமரி அனந்தன், பூம்புகார் பதிப்பகம், பக். 395, விலை 320ரூ. எல்லா நூற்றாண்டிலும் சுரண்டல் கி.பி. 19ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர், உலக அளவில் தொழிலாளர்களின் உரிமை குரல்கள், ஓங்கி ஒலிக்க துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்திலும் தொழிலாளர் நலன், அவர்களின் முக்கியத்துவம், வாழ்நிலை, துன்பத்துக்கான காரணம், அதற்கான மீட்சி போன்றவை குறித்த கருத்தாடல்கள் எழ துவங்கின. திரைப்படம், இலக்கியம், நாடகம் போன்ற கலை வடிவங்களிலும் அவை எதிரொலித்தன. […]

Read more

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, மறைமலை அடிகள், சேகர் பதிப்பகம், பக். 168, விலை 125ரூ. சமஸ்கிருதத்தை வெறுத்தவரே மொழிபெயர்த்தார் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வடமொழி மகாகவி காளிதாசரின், சாகுந்தலம் காவியத்தை, 100 ஆண்டுகளுக்கு முன் அழகு தமிழில், மறைமலையடிகள் அதே பெயரில் செய்யுளாக ஆக்கினார். அந்த நூல், தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தை துவக்கிய மறை மலையடிகளின் தூய தமிழ் நடையை அறிய, இந்த நூலைப் படித்து மகிழலாம். தமிழனின் வீர விளையட்டான ஜல்லிக்கட்டை பார்ப்பதுபோல், படிப்பவரை சிலிர்க்க வைக்கும் […]

Read more

மீசை என்பது வெறும் மயிர்

மீசை என்பது வெறும் மயிர், ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-1.html மீசை அலங்காரமா? அதிகாரமா? ஆதவன் தீட்சண்யா எழுதிய மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சந்தியா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நந்தா ஜோதி பீம் தாஸ் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ஒட்டி, நாவல் செல்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவருக்கு, கல்வி மறுக்கப்படுகிறது. அவர் ஊரை விட்டுச் சென்று கடந்த 1964ல், சுனாமியால் தனுஷ்கோடி அழிந்தபோது, […]

Read more

மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

தருமபுரி இளவரசன் படுகொலை

தருமபுரி இளவரசன் படுகொலை, எம். துரைராஜ், அம்பேத்கர் புரட்சி முன்னணி வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல். அதன்பின் ஏற்பட்ட கலவரம். மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன் குர்லா விரைவு ரயிலின் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more
1 175 176 177 178 179 240