தி மைக்ரண்ட் சில்க் வேவர்ஸ் ஆப் தமிழ்நாடு ஏ ஸ்டி

தி மைக்ரண்ட் சில்க் வேவர்ஸ் ஆப் தமிழ்நாடு ஏ ஸ்டி, பேராசிரியர் சி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சக்தி கல்சுரல் அண்டு எஜுகேஷனல் டிரஸ்ட், மதுரை, பக். 448, விலை 500ரூ. பட்டு நூல்காரர்களை வடக்கிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததேன்? சவுராஷ்டிரா என்ற பொதுவானச் சொல், இந்த ஆங்கில நூலைப் பொருத்தவரையில், Sav rastra என்ற சொல்லை, வட இந்தியாவில் வாழ்பவர்களையும், Sou rastra என்பது தென்னகத்தில் வாழ்பவர்களையும் (பட்டு நூல்காரர் குறிப்பதாகும் என்ற குறிப்போடு துவங்கிறது. ஹரப்பா நாகரிக காலத்திலிருந்தே, உலக வர்த்தக அரங்கில், சவுராஷ்டிரர்கள் சிறந்ததொரு […]

Read more

நூலின்றி அமையாது உலகு

நூலின்றி அமையாது உலகு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 244, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-233-3.html வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களை வாசிக்க செய்யும் இரா. மோகன் எழுத்தில், வானதி பதிப்பகம் வெளியிட்டு உள்ள நூலின்றி அமையாது உலகு என்ற புத்தக வாசிப்பு தொடர்பான புத்தகத்தை, சமீபத்தில் படித்தேன். பேசுவதை போன்ற எளிய  நடையுடன் பயணிக்கும் அந்த நூல், புத்தகங்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், புத்தகம் பற்றிய அறிஞர்களின் கருத்து, புத்தகம் பற்றிய பழமொழிகள் என, பல தடங்களில் […]

Read more

துரோகம் துரத்தும்

துரோகம் துரத்தும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகிலன், கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-296-1.html பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், டாப் த்ரில்லர் நாவல்களில் ஒன்றான AN ACE UP MY SLEEVE என்ற ஆங்கில நாவலை தமிழில் அகிலன் கபிலன் மொழிபெயர்த்துள்ளனர். எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால் எளிதில் நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம். […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசவுந்தரி, இந்திய மருத்துவ மையம், பக். 1217, விலை 1000ரூ. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல ஏன் பிறந்தோம் பெண்ணாய் என சலிப்புத் தட்டும் இந்தக் காலத்தில், பெண்ணாய் பிறக்க, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என பாரதியார் எதை உணர்ந்து சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் டாக்டர் ஞானசவுந்தரியின் புத்தகத்தைப் படித்தபின் பாரதியாரின் கூற்று உண்மை என, நினைக்கத் தோன்றுகிறது. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல என வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட, அது எவ்வளவ கடினம் என்பதை, தன் கடிதங்களின் […]

Read more

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்,

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-358-8.html அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. பணம் […]

Read more

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 216, விலை 195ரூ. நூல் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னனி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர்தான் பயணம் செய்த நாடுகளில் படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான 100 கதைகளை தொகுத்திருக்கிறார். கவலைக்கும் பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை. எடிசனின் சில நிமிட பொறுமை, […]

Read more

கம்பன் தமிழும், கணினித் தமிழும்

கம்பன் தமிழும், கணினித் தமிழும், முத்துநிலவன், தஞ்சை அகரம் பதிப்பகம். திருக்குறளில் தமிழ், தமிழ்நாடு வார்த்தைகள் இல்லாதது ஏன்? தஞ்சை அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, முத்துநிலவனின் கம்பன் தமிழும், கணினித் தமிழும் என்ற இலக்கிய விமர்சன நூலை அண்மையில் படித்தேன். பழங்கால இலக்கிய கணிப்பும், நவீன இலக்கிய கண்ணோட்டமும் உள்ள இந்நூல், அண்மைக் காலத்தில் வெளியான இலக்கிய விமர்சன நூல்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் ஒரு கட்டுரையில் பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாட்டுக்கு இரண்டாம் பரிசும், ஆ. […]

Read more

என் உயிரே என் உறவே

என் உயிரே என் உறவே, (நாவல் பாகம் 1, 2) பிரவீணா, அருண் பதிப்பகம், பக். 492, 412, விலை தலா 200ரூ. சினிமா ரசிகர்களுக்கு உகந்த நாவல், ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா. கதாநாயகி கீர்த்தனா, பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய்விடுகிறாள். எனவே கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு பாலா பண உதவி செய்கிறான் […]

Read more

வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், பக். 176, விலை 95ரூ. 25 தலைப்புகளில், வெற்றியின் வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். தனது கட்டுப்பாடும், பிறருக்குக் கொடுக்கும் மதிப்பும், மிகுதியான உழைப்புமே வெற்றி எனும் வீட்டிற்கு அழைத்து செல்பவை என்பதை எளிய தமிழில் எடுத்துக்கூறும் இந்த நூல், அனுபவத்தின் வெளிப்பாடு. எதையும் எடுத்துக்காட்டுடன் தெரிவிக்கும்போது எளிமையான புரிதல் என்பது இயல்பாக அமைகிறது என்பதை, இந்த நூலைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும். பண்பும், நாடு சார்ந்த நெறிமுறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கப்பூர்மான […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம், தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், பக். 408, விலை 150ரூ. நாவலின் கதாநாயகி பூவரசி எழுந்து, வராந்தாவின் பக்கம் போய் நின்று, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மேல் பார்வையைப் பதிக்கிறாள். இந்த அழகான நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே உலா வரும் பூமிப்பந்தின் மேல் வசிக்கும் மனிதர்களுக்கு, இப்படியெல்லாம்கூட துன்பங்கள் வருமா? என்று யோசிக்கிறாள் (பக். 203). மிகவும் நல்லவளான பூவரசிக்கு பல சோதனைகள். அவளை தன் மோச வலையில் சிக்க வைக்க முயல்கிறான் ஒரு தீயவன், கடைசியில் […]

Read more
1 177 178 179 180 181 240