கல்குதிரை

கல்குதிரை, இளவேனிற்கால இதழ், எழுத்தாளர் கோணங்கி,  கோவில்பட்டி 628502. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் நவீன இலக்கியத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த இந்த இதழ்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய கருத்தியல் ஆளுமைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின. இன்றைய காலகட்டத்தில் வெகுஜன இதழ்களுக்கு இணையாக அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை தொடர்ந்து வெளிவர முடியாமல் பொருளாதாரக் காரணங்களால் நின்றுபோய்விடுவதும் நடக்கிறது. […]

Read more

அன்பின் நடுநரம்பு

அன்பின் நடுநரம்பு, அகச்சேரன், தக்கை பதிப்பகம்,சேலம், விலை ரூ. 10 கவிதைகளாகும் மனிதர்கள் பராக்குப் பார்த்தல் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம். பெரும்பாலான இன்றைய நவீனத் தமிழ்க் கவிதைகள் பராக்குப் பார்த்தலை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். பராக்குப் பார்ப்பதற்கு வழியமைத்துத் தருபவை முக்கியமாகப் பேருந்துப் பயணங்கள்தாம். இம்மாதிரியான பயணங்கள் குறித்துத் தமிழ்க் கவிதைகளில் ஏற்கனவே பதிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது சமீபத்தில் வெளிவந்துள்ள அகச்சேரனின் அன்பின் நடுநரம்பு. விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும் அகச்சேரனின் பேருந்துப் பயணங்களில் அவர் தன் முழு ஆளுமையையும், […]

Read more

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

நாகூர் நாயகம் அற்புத வரலாறு, நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, விலை 140ரூ. இந்த விநாடி, அடுத்த விநாடி போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமீயின் இன்னொரு படைப்பு நாகூர் நாயகம் அற்புத வரலாறு. நாகூர்பதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தவராஜ செம்மேரு என்று குணங்குடியார் போற்றி மகிழ்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிபு வலியுல்லாஹ், ஷாகுர்ஹமீது பாதுஷா, எஜமான் ஆண்டவர் என்றெல்லாம் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் புகழ்ந்து ஏற்றப்படுகின்ற இறைநேசகர் அப்துல் காதிர் அவ்லியாவின் வரலாற்றுத் தொகுப்பு […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர்.நாகராஜ் கல்விப்புல வட்டாரத்தில் சர்வதேச கவனத்தைப் பெற்றவர். அவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க தலித் விமர்சகராகவும் செயல்பாட்டாளராகவும் விளங்கினார். இலக்கியத் துறைப் பேராசிரியரான நாகராஜ், சமூக அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது இலக்கியம் வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்காக இருக்க முடியும் என்று நம்பியவர். அறிவை ஒழுங்கமைத்துக்கொள்ள கதை சொல்லல் சிறந்த வழியென்று முன்மொழிந்த அவர், தன்னுடைய கட்டுரைகளையும் கதைகளாகவே வடிவமைத்தார். வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நாட்டாரியல் […]

Read more

சோர்விலாச் சொல்

சோர்விலாச் சொல், பாராளுமன்ற உரைகள் 1991-2011, பசீர் சேகுதாவூத், விளிம்பு, புத்தாநத்தம், விலை 250ரூ. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல்பாட்டாளர் பஷீர் சேகுதாவூதின் நாடாளுமன்ற உரைகள் சோர்விலாச்சொல் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. அவரது சமூகம், அறம் சார்ந்த அணுகுமுறை, சமூக, அரசியல் நோக்கில் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல், இயங்குதளம், ஒரு இஸ்லாமியராக அவர் எதிர்கொண்ட மானிடச் சிக்கல்கள் என்பவற்றின் சான்றாக இவை உள்ளன.  இன்றுவரை அறியப்பட்டிருந்த பஷீரின் ஆளுமையின் பன்முகத்தன்மையைச் சோர்விலாச் செல் வெளிச்சமிட்டுக்காட்கிறது. முஸ்லிம்களின்மீது படிந்த வரலாற்றுக் […]

Read more

மரங்கொத்திச் சிரிப்பு

மரங்கொத்திச் சிரிப்பு, ச. முத்துவேல், உயிர் எழுத்துப் பதிப்பகம், திருச்சி, விலை 60ரூ. நவீன வாழ்க்கையின் சிக்கலை அதே காத்திரத்துடன் வெளிப்படுத்த மரபான பழைய வடிவங்களை உடைக்க வேண்டியிருந்தது. அதன் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும் அவ்வளவு வீரியமிக்கதாக எழுந்தன. நவீனக் கவிதை இவ்வாறுதான் எழுந்தது எனலாம். அந்தத் துணிச்சல் தந்த உத்வேகத்துடன்தான் மரங்கொத்திச் சிரிப்பு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் ச. முத்துவேலின் அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதருடனும் காட்சியுடனும் முத்துவேலுக்கு […]

Read more

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 65ரூ. கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து வெவ்வேறு சூழலில் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கணினியில் தமிழ் என்னும் கட்டுரை கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய முறைகள், உள்ளீடு செய்வதில் எழும் சிக்கல்கள் இவற்றை விளக்குகிறது. கணினியில் தமிழை உள்ளீடு செய்யப் பல இலவச இடை முகமென்பொருள்கள் வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மென்பொருளின் தனித்தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கிறது ஒரு கட்டுரை. வணிகநோக்கமின்றி  நிரல் குறிகளைப் […]

Read more

முதல்பெண்

முதல்பெண், பேரா. சோ. மோகனா, புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 50ரூ. முன்னோடிப் பெண்களின் வரலாறு பெண் இனத்தின் வரலாறு வெளிப்படும்போதுதான், பெண்மீதான இன்றைய மதிப்பீடு மாறும். இதன் ஒரு முயற்சியாகப் பேராசிரியை சோ. மோகனா எழுதிய முதல்பெண் என்ற நூல். முதல் பெண் அறிவியலாளர், கணிதவியலாளர், விண்வெளி விஞ்ஞானி, அறுவை சிகிச்சை மருத்துவர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆகியோரை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அகழ்வாய்வின் மூலமாகக் கிரேக்கத்திலும், எகிப்திலும், சைப்ரஸ் தீவிலும் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை […]

Read more

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம், ஜேனஸ் கோச்சார்க், தமிழில் – தி.தனபால், பாரதி புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை, விலை 40ரூ. குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் என்னும் நூல். இந்நூலை தி. தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை […]

Read more

மிளிர் கல்

மிளிர் கல், இரா. முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. ரத்தினக் கற்கள் தேடும் நீலகண்டப் பறவை நாகரிகச் சமூகங்கள் நாதங்கள் வேரைத் தேடுகின்றன. அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றன. வரலாற்றில் புதையுண்ட தங்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்துக் கரிசனம் கெள்கின்றன. சிலம்பு தமிழின் தொன்மை அடையாளம், கண்ணகியும்தான். கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கப் பரல்கள் பண்டைத் தமிழகத்தின் ஒப்பற்ற விளைச்சல், பெரு வணிகப் பண்டம். மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்றெல்லாம் ரத்தினக் கற்கள் சுட்டப்படுகின்றன. இவை புறநானூறு போன்ற செவ்விலக்கியங்களில் மிளிர மணிகள் எனப்படுகின்றன. […]

Read more
1 29 30 31 32 33 36