செவ்விலக்கிய சிந்தனைப் புதையல்

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் 612901, பக். 160, விலை ரூ.150. இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது என்று சொல்லத்தக்க அளவில் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. சங்க கால மன்னர்களான கரிகாலன், நன்னன், மலையமான் பற்றிய தகவல்களும், நவிர மலை, கபிலர் குன்று, பெருமுக்கல் மலை அரிக்கமேடு ஆகிய வரலாற்றுத் தலங்களைப் பற்றிய அரிய செய்திகளும், […]

Read more

இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி, எஸ்.17/8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. இறைவனை பல வழிகளில் தரிசிக்கிறோம். அதில் இசைவழி பிரார்த்தனையும் ஒன்று. இசை வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், சங்க காலத்து இசை வழிபாடு, மன்னர்கள் காலத்து இசை பிரார்த்தனை, பஜனைகள், திருப்புகழ் சபைகள், கிருஷ்ணர் ஜெயந்தி, இறைவனும்  இசையும், இசையின் இன்பம், பஜனை பலன்கள் ஆகியவை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.   —-   உயரிய சிந்தனைத் துளிகள், முனைவர் சோ. […]

Read more

புனையா ஓவியம்

புனையா ஓவியம், அநன், காவ்யா, சென்னை 24, பக். 210, விலை 180ரூ. சங்கத் தமிழ் நூல்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது இந்நூல். மடல், மன்றல், காஞ்சி, நடுகல், வையை, யானைக்கொடி, மருதம், பாலை, கோ, உணவு, உடை, புனையா ஓவியம், வி, நீர் மேல் எழுந்த நெருப்பு, அகத்தில் வரலாறு என சின்னச் சின்னத் தலைப்புகளிலான 15 கட்டுரைகளின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு. தலைப்புகளில்தான் சொற்சிக்கனம். ஆனால் கட்டுரைகள் விரிவாகவும், ஆழமாகவும், […]

Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-805-8.html திருமணம் சம்பந்தமான வழக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றித் திருமணம் செய்வது, வரதட்சணைக் கேட்டு சித்திரவதை செய்வது, பல பெண்களைத் திருமணம் செய்வது இப்படி பலவிதமான வழக்குகள் கோர்ட்டுக்ளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய வழக்கறிஞர் சுமதி, ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு சிறுகதையை எழுதி, அந்தக் குற்றம் எந்தப் பிரிவகளின் […]

Read more

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே, எஸ்.சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. படித்து பட்டம் பெற்று அரசு சார்ந்த உயர் பணியில் சேராமல் நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப்படையில் சேர்ந்த தியாக உணர்வை வெளிப்படுத்தும் சிறு நாவல்.   —-   கர்நாடக ருசி, வெ. நீலகண்டன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. 29 கர்நாடக மாநில வட்டார உணவு வகைகள் […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில் மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 270, விலை 180ரூ. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழர்களின் தொன்மையை நிலை நிறுத்துவது, போலவே நூலாசிரியர்கள் முயற்சி அமைந்திருப்பதைப் பாராட்டலாம். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என தமிழில் பாட்டி கால கதைகளை ஞாபகமூட்டும் வகையில் நூலின் முதல் கதையான கடவுளை நோக்கி ஒரு பயணம் அமைந்துள்ளது. பெரியதும், சிறியதுமான 94 […]

Read more

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள்

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள், டாக்டர் ஜி. லாவண்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. முதுமையில் ஏற்படும் மன உளைச்சல், நோய்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுப்பது எப்படி? அதற்கான உணவு மற்றும் இயற்கை மருத்துவ முறை என்ன? முதுமைக்கான யோகாசன குறிப்புகள், நீரிழிவை தடுப்பது எவ்வாறு என்பது போன்ற பல தகவல்கள் சுவைபட கூறப்பட்டுள்ளன.   —-   கணவர்தான் எனக்கு எல்லாமே, ந. சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், […]

Read more

மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம், பால குமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், ப,எண் 28, பு.எண். 13, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html ஒரு கலை வடிவம் என் வாழ்வை வலுப்படுத்தியது. எல்லா மனிதர்களுக்குண்டான நல்லவையும், கெட்டவையும் எனக்கும் நேர்ந்தன. அவைகளை எதிர்கொள்ள எழுத்து எனக்கு உதவியது (பக், 209) என்னும் பாலகுமாரன், எந்த எதிர்பார்ப்புமின்றி எந்தக் கலவரமுமின்றி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, நிர்வாணமாக மனம் நிற்பதுதான் ஆன்மிகம் (பக். […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. […]

Read more

மீஸான் கற்களின் காவல்

மீஸான் கற்களின் காவல், பீ.கே. பாறக்கடவு, தமிழில்-தோப்பில் முஹம்மதுமீரான், அடையாளம், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, பக். 60, விலை 50ரூ. கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே. பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்ளிவாசல் காஸியார் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வெள்ளம் வடிவது, […]

Read more
1 12 13 14 15 16