உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, பக்கம் 200, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மன உளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செயல்படக்கூடியவன், அவனுடைய நண்பர்கள் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணையதளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப் பாடுபடுகிறார்கள். […]

Read more

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், அஜன் பிராம், பக். 304, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 150 இந்நூலின் ஆசிரியர் தனது பிரசங்கத்தின்போது கூறிய கதைகளின் தொகுப்புதான் இந்நூல். ஒவ்வொரு கதையும் நமது நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இக்கட்டான நேரத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை வந்தால் பேசாமல் அமைதியாக இருந்துவிடு. இதனால் உயிரையே காக்கும் அறிவுத் திறம் உனக்கு ஏற்படும் என்று ஆதாரத்துடன் ஒரு கதையில் விளக்குகிறார் அஜன் பிராம். நமது இளமைக் காலத்திலேயே அதிகம் பேசாமல் […]

Read more

தீராத விளையாட்டு விட்டலன்

தீராத விளையாட்டு விட்டலன், அருண் சரண்யா, பக். 240, கல்கி பதிப்பகம், சென்னை – 32. விலை ரூ. 200 மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மகாபக்தர்களின் சரிதங்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியச் செய்பவை; நம்மை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துபவை. பண்டரிபுரத்தில் அருளாட்சி புரியும் பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களின் சரிதத்தை நூலாசிரியர் அற்புதமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார். கண் கவரும் வேதாவின் ஓவியங்களும், ஸ்ரீஹரியின் புகைப்படங்களும் இந்நூலுக்கு மெருகு சேர்க்கின்றன. நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் […]

Read more

கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98. இரண்டு தொகுப்புகள் விலை ரூ. 1300 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-270-1.html ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல், உலகப் புகழ் பெற்றது. அந்த அற்புதமான நாவலை கவிஞர் புவியரசு நல்ல தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தத் தமிழ்ப் பணிக்காக அவர் பாராட்டுக்குரியவர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய மூன்றுக்கும் மொழிபெயர்ப்புக்கான தன்மை மாறுபடுகின்றன. மொழிபெயர்ப்பாளரின் பணிச்சுமையும் […]

Read more

ஆச்சி

ஆச்சி, கவிஞர் கண்ணதாசன், பக். 207, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-587-2.html நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வழக்காறுகள், மரபுகள், மாண்புகள், சமூக யதார்த்தம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த உரைநடைச் சித்திரம்தான் கவியரசு கண்ணதாசனின் ஆச்சி நாவல். இந்நாவலில் பயின்று வருகிற சீதை ஆச்சி, தண்ணீர்மலையான், பெரியகருப்பன், ராமநாதன், தெய்வானை, அன்னபூரணி, மெய்யம்மை ஆகிய ஒவ்வொரு கதாபாத்திரமும் செட்டியார் மரபின் அழுத்தமான வார்ப்புகள். ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை […]

Read more

2012 யுக மாற்றத்தின் வாசல்

2012 யுக மாற்றத்தின் வாசல், மா. கணேசன், பக்.164, புதிய மானுடம் பிரசுரம், 222, அசோக் நகர் – II, காந்திநகர் அஞ்சல், வடக்குத்து, குறிஞ்சிப் பாடி தாலுகா. விலை ரூ. 100 ‘டிசம்பர் – 21, 2012 உலகம் அழிந்துவிடும், மாயன்களின் நாள்காட்டி அதோடு முடிந்துவிட்டது,’ இந்தச் செய்தி உலகெங்கும் தற்போது கிண்டலும் கேலியுமாக விவாதிக்கப்பட்டு வருகிறது! ‘யாரும் நம்பத் தயாராக இல்லை, நம்பவும் வேண்டாம் – ஆனால், நம் கண் முன்னே தினம் தினம் நடந்துவரும் நிகழ்வுகளும், நாம் படிக்கும் செய்திகளும், […]

Read more

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு, எஸ். வர்க்கீஸ் ஜெயராஜ், பக். 150, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 14. விலை ரூ. 150 முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறும், அதற்கடுத்து பல ஆண்டுகள் கழித்து வைகை அணை கட்டப்பட்டதன் வரலாறும் மிகச் சுருக்கமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பின் இணைப்பில் உள்ள குறிப்புதவி நூல்கள் மற்றும் அரசு ஆணைகள், பத்திரிகைக் குறிப்புகள் ஆகியன இந்த நூலின் புள்ளிவிவரங்கள் ஓர் ஆவணம் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரியாறு அணையில் பென்னிகுக்கின் […]

Read more

அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள்

பாரதியாரின் பாதையிலே, ம.பொ. சிவஞானம், பக்.136, ம.பொ.சி. பதிப்பகம், சென்னை – 41; விலை ரூ. 75 விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், மகாகவி பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பல்வேறு கோணங்களில் பாரதியின் பாடல்களை ஆராய்ந்து தான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருப்பதாக, முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவரது கதை, கட்டுரைகளிலிருந்தும் பல மேற்கோள்களை தனது ஆய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

செவ்வியல் இலக்கிய மணிமாலை, ம.சா. அறிவுடைநம்பி, பக்கம் 320, கருமணி பதிப்பகம், புதுச்சேரி-8, விலை 160 ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள், தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் […]

Read more
1 176 177 178 179 180