இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், ராம்குமார், மணிமேகலை பிரசுரம், பக். 272, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-454-5.html உலகில், மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது, நதிகளின் கரைகளில்தான். நம் பாரத தேசத்தில் வடக்கில் துவங்கி தெற்கு முனை வரை ஆயிரக்கணக்கான நதிகள் பாய்கின்றன. அவற்றின் கரைகளில் எண்ணிறந்த கோவில்கள். அந்த நதிகளின் தோற்றுவாய் பற்றியும், அங்கு அமைந்துள்ள புண்ணிய ஷேத்திரங்கள், அங்கு தோன்றிய கோவில்கள் பற்றி எவ்வளவோ புராண கதைகள். இந்த நூலாசிரியர் மிக முயன்று, அவை […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ. ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 304, விலை 200ரூ. போதி தர்மர் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள அற்புதமான நூல். தமிழகத்தில் ஆன்மிக அறிவு பெற்று, அதனை சீனாவில் முழுமையாக அதாவது ‘சென்’மதக் கோட்பாட்டை உருவாக்கியவர் என்ற பெருமை படைத்தவர் போதிதர்மர். ஆன்மிகப் போதனைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் இந்திய ஞானி இவர். நோக்கு வர்மக் கலையின் முன்னோடி, கராத்தே என இப்போது பிரபலமாகியுள்ள தற்காப்புக் கலையின் தந்தை, சிறந்த மருத்துவ அறிஞர், அக்குபஞ்சர் […]

Read more

இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more

உலகத் தகவல் களஞ்சியம் 100

உலகத் தகவல் களஞ்சியம் 100, பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. நமக்கு ஆச்சரியம் தரும் தகவல்கள், விசித்திரமான தகவல்கள், பயனுள்ள தகவல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை சிரமப்பட்டுத் தொகுத்துத் தந்திருக்கிறார் மனோஸ். பூமிக்கு வரும் ஆபத்து, மிதக்கும் விமான நிலையம், தனியாகக் கடலைக் கடந்த பெண், நாளிதழ் இல்லாத நாடு, இந்தியாவின் ஒரே பெண் சுல்தான் இப்படி ஏராளமான தகவல்கள். உலகின் முதல் பெண் டாக்டர் பற்றிய தகவல் மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்த கால கட்டத்தில் (1800ம் […]

Read more

வியாச பாரதம்

வியாச பாரதம், வர்த்தமானன் பதிப்பகம், பக். 2000, விலை 700ரூ. வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் இதில் இடம் பெறுவதால் வியாசபாரதத்தை ஐந்தாம் வேதம் என்பர். நூற்றுக்கணக்கான மாந்தர்கள் உலாவரும் ஸ்வர்ண மாளிகை, வியாசபாரதம். ஏராளமான கிளைக்கதைகளையுடைய ஓர் ஆலவிருட்சம், வியாச பாரதம். நளதமயந்தி வரலாறு, சத்தியவான் சாவித்திரி வரலாறு, இராமன் வரலாறு, துஷ்யந்தன் சகுந்தலை வரலாறு போன்றவை புகழ் வாய்ந்தவை. அரிச்சந்திரன், குசேலன், கந்த பெருமான், பரசுராமர் போன்றோர் வரலாறும் இதில் இடம் பெற்றுள்ளன. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த எழுந்த இந்நூல், அறவழியில் […]

Read more

பாமரன் பார்வையில் கம்பர்

பாமரன் பார்வையில் கம்பர், அந்தமான் கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 268, விலை 110ரூ. பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை. காக்கா பிடிக்கலாமா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா?, அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே, பெண்டாட்டி ஊருக்குப் […]

Read more

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள், எஸ்.குருபாதம், மணிமேகலை பிரசுரம், பக். 372, விலை 250ரூ. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு-இறப்பு குறித்து அலசுகிறது. ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. -ஜனகன். நன்றி: […]

Read more

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 250ரூ. மறுபிறப்புத் தொடர்பான பல உறுதியான ஆவணங்களையும், செய்திகளையும் ஆழமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் எஸ். குருபாதம் தேடித் தொகுத்துள்ளார். குறிப்பாக மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. சாக்ரட்டீஸ், காளிதாசர், திருவள்ளுவர், சேக்ஸ்பியர், சுப்ரமணிய பாரதியார் போன்றவர்களின் ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, திறமை போன்ற ஆற்றல்களுக்கு உந்து சக்தியாக, அவர்களின் ஞாபக கலங்களில் பதிவாகியிருந்த முந்தைய பிறப்புகளில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 182, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-1.html மயில், குயில், குருவி, கிளி, புறா, காகம், ஆந்தை, மரங்கொத்தி, உள்ளான், முக்குளிப்பான் என தமிழகத்தில் அதிகம் காணப்படுகிற 328 பறவைகளைப் பற்றிய நூல். அவற்றின் உடல் அமைப்பு, நிறம், குரல், குணம், உணவு, வாழுமிடம், இனப்பெருக்க காலம், கூடுகள், முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் கொட்டிக் கிடக்கிற அரிய நூல். குழந்தைகள், பள்ளி, கல்லூரி […]

Read more
1 6 7 8 9