சகாயம் சந்தித்த சவால்கள்

சகாயம் சந்தித்த சவால்கள், கே. ராஜாதிருவேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, வலை 80ரூ. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம். ஊழல், முறைகேடு, விதிமீறல் செய்பவர்களுக்கு சகாயம் எப்போதும் ஒரு கஷாயம். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒருசில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையானவர்களாக இருந்தால்போதும் என்று நினைப்பார்கள். ஆனால் சகாயம் தன்னைச் […]

Read more

நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், மாட் விக்டோரி பார்லோ, தமிழில் சா. சுரேஷ், எதிர் வெளியூடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, பக். 248, விலை 200ரூ. பணத்தைத் தண்ணீரைப் போலச் செலவழிபப்து என்பது இப்போது ஒரு முரண் வாக்கியம் ஆகிவிட்டது. எவ்வளவு செலவு செய்தாலும் தண்ணீர் கிடைக்காத ஒரு கொடுங்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். கிணறுகளில், ஆறுகளில், வீட்டு ஆள்துளைக் கிணறுகளில் எங்கும் நீர் இல்லை. என்ன காரணம்? நம் நீராதாரத்தை நிர்மூலமாக்கியவர்கள் யார்? நம் குடிநீரில் மண் அள்ளிப் போட்டது […]

Read more

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, நாகரத்தினம் கிருஷ்ணா, சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 160ரூ. பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரிவும் பதிவுகள் வரலாறாக உருமாகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்து எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, செஞ்சிக்கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது செஞ்சிக் கோட்டை […]

Read more

மகிழ்ச்சியான இளவரசன்

மகிழ்ச்சியான இளவரசன், ஆஸ்கார் வைல்டு, தமிழில் யுமா வாசுகி, புலம், சென்னை 5, பக். 96, விலை 70ரூ. பிரியங்களும் மகிழ்வும் உற்சாகமும் அளவில்லாக் கற்பனைகளும் நிறைந்த குழந்தைகளின் உலகம், விமர்சனங்களையும் விசனங்களையும் கொண்டுழலும் வளர்ந்த மனங்களிலிருந்து வேறுபட்ட உன்னதங்கள் நிறைந்த செழுமைமிக்க நிலமென விரிந்துகிடக்கிறது. புராண, இதிகாசங்களும் வாய்மொழிக் கதைகளும் நிரம்பியிருக்கும். தமிழ்ப் பரப்பில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவையே. மாயாவிகளும், நன்மை செய்யும் குள்ளமனிதர்களும், தந்திரம் மிகுந்த விலங்குகளும், பேசும் பூக்களும், உயிர் காத்து வைத்திருக்கும் அன்னங்களும், இவர்களின் உலகில் […]

Read more

ராவ் சாகிப்

ராவ் சாகிப் எல்.சி. குருசாமி, ம.மதிவண்ணன், கருப்புப் பிரதிகள். அடித்தள மக்களுக்காக ஒலித்த குரல் காலனிய ஆட்சியில் சட்ட மேலவையில் குத்தூசி குருசாமி பேசிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய உரைகளில் தலித்துகளும் மட்டுமல்லாது பெண்களுக்கான கல்வி குறித்தும் உரத்துப் பேசுகிறார். பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து தன்னுடைய உரைகளில் வலியுறுத்துகிறார். அடித்தள மக்களின் குரலாகவும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான குரல் எழுப்புபவராகவும் விளங்கிய குத்தூசி குருசாமியின் உரைகளை கவிஞர் ம. மதிவண்ணன் தொகுத்தளித்திருக்கிறார். குருசாமியின் உரைகள் பெரியார் மற்றும் […]

Read more

ரோமாபுரி யாத்திரை

ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், சந்தியா பதிப்பகம். கவித்துவமும் பயணக் குறிப்பும் தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதுதான் முதல் பயண விவரண நூல் என்கிறது சந்தியா பதிப்பகம். பாரேம்மாக்கல் கோ.வர்ணதோர் என்கிற போர்த்துகீசியர் கடல் மார்க்கமாக உலகைச் சுற்றி வரும் இந்தப் பயணத்தினூடாக இந்தியா குறித்தும், தமிழகம் குறித்தும் பல பதிவுகளை செய்துவிட்டுப் போயிருக்கிறார். இந்நூலை யூமா வாசுகி மொழியாக்கம் செய்திருக்கிறார். விவலிய மொழியின் கவிதைக்குப் பக்கமான நடையில் யூமாவின் மொழிபெயர்ப்பு இந்த யாத்திரையை மகிமைப்படுத்துகிறது என்று லிபி ஆரண்யா தன் முன்னுரையில் சொல்கிறார். […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில் ராஜேந்திரன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 328, விலை 250ரூ. இன்றைய குழந்தைகளிடம் கடவுள் கண்முன் தோன்றி வரம்கேள் என்று சொன்னால் இந்த உலகத்துல இனிமே பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பள்ளிகள் குழந்தைகளைப் படுத்தி எடுக்கின்றன. விளையாட்டும் குறும்பும் நிறைந்த குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் தான் உலகில் இருக்கும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். ‘ […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி பி.ஏ., விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ. அகிம்சை மீது அளவற்ற அன்பு செலுத்திய காந்தி, தமிழின் மீது தணியாத காதல் ஈடுபாடும் வைத்திருந்தார். தான் ஒரு இந்து என்பதற்காக கீதையை மதித்தார் என்று எடுத்துக்கொண்டால், உலகப்பெரும் அறநூல் என்ற மகுடத்தோடு திருக்குறளைப் படித்தார். எழுத்துக் கூட்டியாவது தமிழைப் படித்தவர். மோ.க. காந்தி என்று தமிழில் அவர் இட்ட கையெழுத்து இன்றும் சபர்மதி ஆசிரமத்தில் இருக்கிறது. இந்த ஈடுபாடுதான் அவரைத் தமிழகத்தை நோக்கியும் அடிக்கடி […]

Read more

சூரிய உதடுகள்

சூரிய உதடுகள், சுசி. நடராஜன், சாரதி பதிப்பகம், 107/6, ரிச்சித் தெரு, சித்தாதிரிப் பேட்டை, சென்னை2, பக். 96, விலை 45ரூ. கவிதையின் ஆழம் கவிஞன் எடுத்தாளும் வார்த்தைகளில்தான் உள்ளது. மனிதம், இயற்கை, சமூகம், காதல், போட்டி, பொறாமை, சுதந்திரம் எதுவாக இருந்தாலும் சுசி. நடராஜனின் வார்த்தைகளில் ஓர் உயிர்ப்பு பெற்றுவிடுகிறது. இரட்டை மாடு வாழ்க்கை வண்டி பூட்டிய பிறகு பாரம் சுமக்க பயப்படும் மிரட்சி வாழ்க்கைப் பயணத்தில் எழும் மிரட்சியை ஆசிரியர் தொட்டுச் செல்லும் பாங்கில் ஒரு பெருமூச்சு எழுகிறது. வாழ்க்கையின் எச்சரிக்கை […]

Read more

அப்பாவின் துப்பாக்கி

அப்பாவின் துப்பாக்கி, ஹினெர் சலீம், தமிழில் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்,, பக். 112, விலை 90ரூ. குர்திஸ்தான் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றை, சிறுவன் ஆசாத்தின் கதைக்குப் பின்புலமாக்கியதன் நோக்கம் நூலில் நிறைவேறியுள்ளது. குர்திய மக்களின் விடுதலை வேட்கையைப் பதிவு செய்வதுதான் நூலாசிரியரின் நோக்கம். அதைத்தான் அப்பாவின் துப்பாக்கியாக வடித்துள்ளார். கூடவே, அந்நாட்டின் இயற்கை வளம், பண்பாட்டுக் கூறுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் மேல் விழும் சிதைவுகளையும் மறக்காமல் பதிவு செய்கிறார். வழக்கமான […]

Read more
1 2 3 10