காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை (இரண்டு புத்தகங்கள்), வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391ஏ, இராம் தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை தலா 500ரூ. இந்நூலாசிரியர் காவல்துறை உயர் அதிகாரியாக சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகவும் உள்ளார். தனது நீண்ட கால அனுபவத்தைக் கொண்டு காவல்துறைக்கு மிகவும் பயன் தரத்தக்க Police investigation Powers. Tactics and Techniques என்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு புத்தகங்கள், தற்போது காவல் புலன் விசாரணை என்ற […]

Read more

நிமித்தம்

நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை வெளியீடு, 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 375ரூ. விடிந்தால் திருமணம் செய்துகொள்ளப்போகிற தேவராஜுக்கு இரவில் உறக்கம் வரவில்லை. நாற்பத்தியேழு வயதில் திருமணம் செய்துகொள்கிற அவனுக்கு திருமணத்துக்கு முதல்நாளே வந்துவிடுவதாகச் சொன்ன நண்பர்கள் யாரும் வரவில்லையே என்கிற வருத்தம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பின் வலியையே தாங்கி வந்திருக்கும் அவன், தன் வாழ்வை அந்த இரவில் திரும்பிப்பார்க்கிறான். அவன் வாழ்வதாகச் சொல்லப்படும் தென் தமிழகத்தின் நாற்பதாண்டு அரசியல் சமூக நிகழ்வுகளாக இந்த நாவல் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, ட்ராட்ஸ்கி மருது, தொகுப்பு அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ. வாயால் சொல்லப்படுகிற வார்த்தைகளின் மூலம் பலநேரம் நமக்குப் பொய்யே கிட்டுகிறது. ஆனால் கோடுகள் ஒருபோதும் பொய்யே சொல்வதில்லை என்கிற ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சொற்களுடன் தொடங்குகிறது அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது என்கிற நூல். நூலை கவிஞர் வெண்ணிலா தொகுத்துள்ளார். மருதுவின் தாயார் ருக்மணி, மனைவி ரத்தினம், தம்பி போஸ் ஆகியோர் மருதுவைப் பற்றிச் சொல்லும் […]

Read more

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை […]

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, ஆர்.டி.எ(க்)ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 125ரூ. புதுமுக நடிகைகள், சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது? எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது? உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி குளு கொடுத்திருக்கிறார்கள். சினிமாவின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகம்.   —- தன்னம்பிக்கை ஒரு […]

Read more

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை, அந்திமழை, ஜி4, குரு வைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 75ரூ. தமிழ்நாட்டில் 1967 பொதுத்தேர்தலில், காங்கிரஸை தி.மு.கழகம் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான். தி.மு.கவும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுபற்றிய விவரங்களை தெளிவாகவும், நடுநிலையுடனும் இந்நூலில் எழுதியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ராவ். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்ட […]

Read more

வாழ்க்கைக் கோயில்கள்

வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ. கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் […]

Read more

நாடாளுமன்றத்தில் வைகோ

நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]

Read more

சி. மோகன் கட்டுரைகள்

சி. மோகன் கட்டுரைகள், நற்றிணை பதிப்பகம், ப.எண்123ஏ, பு.எண் 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 380ரூ. தமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் சி.மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது. ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி.மோகனின் லாவகம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப்பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் […]

Read more

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், ராகுல சாங்கிருத்யாயன், தமிழில் ர. சௌரிராஜன், அலைகள் வெளியீட்டகம், 25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 85ரூ. ஒரு பெண்ணை நன்றாக வைத்துக்கொள்வது என்றால் நம் ஊரில் சொல்லக்கூடிய அதிகபட்ச வார்த்தை ராணி மாதிரி வச்சுக்கிறேன் என்பதுதான். ராணிகளை எப்படி வைத்திருந்தார்கள் என்று தெரிந்துகொண்டால் ஏன் அப்படி சொன்னார்கள் என்பது புரியும். புகழ்பெற்ற வரலாற்றுத் தத்துவ மேதையும் ஊர்சுற்றியுமான ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய இந்த நூல் ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் வாழ்ந்த ராணிகளின் கதையைப் பேசுகிறது. அந்த […]

Read more
1 2 3 4 5 10