நிழல் இளவரசி

நிழல் இளவரசி, மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 512, விலை 250ரூ. இந்து சுந்தரேசன், ஆங்கிலததில் எழுதிய ஷேடோ பிரின்சஸ் என்ற வரலாற்று நாவலை, அவரது தாயார் மதுரம் சுந்தரரேசன் மூலக்கதையை படிப்பது போன்றே, கற்பனை வளத்துடன் கூடிய, முகலாய சரித்திரக் காதல் கதையை, மிகவும் சாதுர்யமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார். பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகிய அறுவரும், முகலாய சாம்ராஜ்யத்தின் வரலாற்று நாயகர்கள் என்றால், நூர்ஜஹான், மெகருனிசா, மும்தாஜ், ஷாஜஹான்-மும்தாஜின் மகள் […]

Read more

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும், மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 144, விலை 80ரூ. தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்என வழங்குவதை போலவே வேதாத்திரி மகரிஷியின் பாடல்கள் உரைகள் எல்லாம், வேதாத்திரியம் என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. இருவருமே குரு அருள் தேவை என்று கூறினர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற தாரக மந்திரத்தை தந்தவர் மகரிஷி. உடலோம்பல் இறை […]

Read more

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ. கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, டாக்டர் கோவி மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 356, விலை 275ரூ. சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால் புலைச்சியாயினும், பிறவி இசை மேதை. மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடும் உறுதி. சமஸ்தானங்கள், ஜமீன்தாரர்கள், கலெக்டர்கள், வெள்ளைக்கார துரைகள் முதலியோர் ரசிப்பதற்காக அவர்களுக்காக பாடமாட்டேன் என்ற வைராக்கியம், நம்மை பிரமிக்க வைக்கும். கலைகளை வளர்த்த தஞ்சை சரபோஜி மன்னரே, அவளைக் காதலிக்கிறார். பின் தன் மகன் சிவாஜியும் அவளை […]

Read more

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தை பலரும் பல வழிகளில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தை எளிய தமிழில் ஒரு நாவல்போல சுவைபட கொடுத்து இருப்பது புதுமை என்பதோடு, ராமாயணத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் கருவியாக இந்த நூல் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. உத்ர காண்டம் […]

Read more

கொலை கொலையாம் காரணமாம்

கொலை கொலையாம் காரணமாம், கோமல் அன்பரசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 140ரூ. தமிழகத்தை உலுக்கிய வழக்குகள் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய வழக்குகளைப் பற்றி கோமல் அன்பரசன் எழுதிய புத்தகம் கொலை கொலையாம் காரணமாம். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு, டாக்டர் பிரகாஷ் வழக்கு, விஷ ஊசி வழக்கு, வைஜெயந்திமலா கார்டியன் வழக்கு உள்பட 25 வழக்குகள் பற்றிய விவரங்கள் இதில் […]

Read more

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள்

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 90ரூ. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஜி.ராமநாதன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா முதலிய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், சிறந்த பாடல்கள் எழுதிய கவிஞர்களில் கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒருவர். அவருடைய பல பாடல்கள் இன்னும் காலத்தை வென்று வாழ்கின்றன. அவற்றில் சில, சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை), அமுதைப் பொழிதும் நிலவே(தங்க மலை ரகசியம்), சித்திரம் […]

Read more

இந்திய ஒருமைப்பாடு

இந்திய ஒருமைப்பாடு, குறித்தலை பாலா, பாலா கடம்பனேஸ்வரர் பதிப்பகம், 58, ஆர்.எம்.ஆர்.இல்லம், வைகை நல்லூர், குளித்தலை 639104, விலை 50ரூ. அன்பு, சகிப்புத்தன்மை, உதவும் குணம், சாதி சமய வேறுபாடற்ற நிலை என ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கும் கருத்துக்களுடன் நேர்மை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தன் கையே தனக்குதவி போன்ற கருத்துக்களை 10 சிறுகதைகள் மூலம் நயம்பட தந்துள்ளார் ஆசிரியர்.   —-   குழலின் மொழி, நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், 2/4, டாக்டர் ரங்கா ரோடு, மைலாப்பூர், சென்னை 4, […]

Read more

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள், டாக்டர் கு. கணேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 85ரூ. வயிறு பற்றிய விவரங்களை, குறிப்பாக செரிமான மண்டல உறுப்புகள் பற்றிய விவரங்களை எளிமையாகக் கூறும் நூல். உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறித்த விவரங்கள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் ஆகிய அனைத்தையும் விளக்கமாக கூறுகிறது இந்நூல். வயிறு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இன்றைய நடைமுறையில் இருக்கும் அத்தனை நவீன மருத்துவ முன்னேற்றங்களை விளக்கமாகக் கூறுவது பயமுறுத்துவதற்காக […]

Read more

நீரோட்டம் பார்ப்பது எப்படி

நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, […]

Read more
1 3 4 5 6 7 10