உங்கள் மனசு

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானிஜான் கான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html வாழ்க்கை வேகமாக நவீனமயமாகி வருகிறது. ஆனால் மனித மனம் இன்னும் அந்த மாற்றங்களின் வேகத்துக்குப் பழக்கப்படாமல் கடுமையான பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது. மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மனநோய் மருத்துவரை நாட வேண்டும் என்ற கருத்து இன்னும் நமது சமூகத்தில் உள்ளது. அத்துடன் தனது மனரீதியான பிரச்னைகள் தொடர்பாக […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை. விலை ரூ. 425 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-310-9.html மனித உரிமைகள், சமூக மேம்பாடு, தலைமைப்பண்புப் பயிற்சி, மனித உரிமைகள் மேம்பாட்டுப் பயிற்சிகள், கல்வி என்ற போர்வைகளில் வெளிநாடுகளிலிருந்து அந்நிய நிதி உதவிகள் அனுப்பப்பட்டு அவை இந்திய அடையாளத்தை வெறுக்கும் இளைஞர் சமுதாயத்தை உருவாக்க, இந்தியாவைப் பிளவுபடுத்த நடக்கும் முயற்சிகளை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தில், இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறதாம். இந்திய ஒருமைப்பாட்டின் அச்சுறுத்தலுக்கு அடிப்படையாக மூன்று ஆழமான […]

Read more

மூன்றாம் உலகப் போர்

மூன்றாம் உலகப் போர், வைரமுத்து, திருமகள் நிலையம், சென்னை. விலை ரூ. 300 To buy this Tamil  book online – www.nhm.in/shop/100-00-0000-382-0.html புவிவெப்பமயமாதல், விவசாயத்தின் நலிவு நிலை, சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகிய பிரச்னைகளைக் கலந்து புனைவு முலாமில் இந்த மூன்றாம் உலகப் போரை நடத்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. உலகம் முழுக்க இந்த நாவலின் கதாபாத்திரங்கள் படர்ந்திருக்கின்றன. இதன் மூலம் உலக நாவல் என்ற தனது கூற்றை நியாயப்படுத்தியுள்ளார். வைரமுத்துவின் கவித்துவமும், வாழ்ந்து பெற்ற அனுபவங்களும் சுவாரசியமாக வாசகனை இழுத்துக்கொண்டு போகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை […]

Read more

சொற்கள்

சொற்கள், ழாக் ப்ரெவெர், க்ரியா பதிப்பகம், புதிய எண் 2, பழைய எண் 25, முதல்தளம், 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை – 41. விலை ரூ. 110 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-5.html கவிஞர்களின் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் கவிதை மொழியையே மாற்றி அமைக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். பிரெஞ்சு கவிஞரான ழாக் ப்ரெவெர் அப்படிப்பட்ட ஒரு கவிஞர்தான். தமிழில் ழாக் ப்ரெவெரின் கவிதைகள் வெளிவந்தபோது இளம் கவிஞர்களிடையே அது ஒரு பெரிய அலையை […]

Read more

ஆச்சி

ஆச்சி, கவிஞர் கண்ணதாசன், பக். 207, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-587-2.html நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வழக்காறுகள், மரபுகள், மாண்புகள், சமூக யதார்த்தம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த உரைநடைச் சித்திரம்தான் கவியரசு கண்ணதாசனின் ஆச்சி நாவல். இந்நாவலில் பயின்று வருகிற சீதை ஆச்சி, தண்ணீர்மலையான், பெரியகருப்பன், ராமநாதன், தெய்வானை, அன்னபூரணி, மெய்யம்மை ஆகிய ஒவ்வொரு கதாபாத்திரமும் செட்டியார் மரபின் அழுத்தமான வார்ப்புகள். ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை […]

Read more

கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98. இரண்டு தொகுப்புகள் விலை ரூ. 1300 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-270-1.html ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல், உலகப் புகழ் பெற்றது. அந்த அற்புதமான நாவலை கவிஞர் புவியரசு நல்ல தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தத் தமிழ்ப் பணிக்காக அவர் பாராட்டுக்குரியவர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய மூன்றுக்கும் மொழிபெயர்ப்புக்கான தன்மை மாறுபடுகின்றன. மொழிபெயர்ப்பாளரின் பணிச்சுமையும் […]

Read more

பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், ஜெ. குமணன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோவை – 45. விலை ரூ. 156 மகிளாரூப்பியம் நகரை ஆண்ட அமரசக்தி என்ற திறமையான மன்னனுக்கு மூன்று புதல்வர்கள். இம்மூவரும் சர்வ முட்டாள்கள். வருத்தம் அடைந்த மன்னன், தனது ராஜகுருவின் ஆலோசனைப்படி, சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விஷ்ணு சர்மனை அணுகி, தனது பிள்ளைகளைப் புத்திசாலிகளாக மாற்றித் தர கோரினான். விஷ்ணுசர்மன் அதை ஏற்று ஆறே மாதங்களில் சாதித்துக் காட்டுகிறார். அதற்கு அவர் […]

Read more

அவர்தான் கலைவாணர்

அவர்தான் கலைவாணர், சோழ. நாகராஜன், தழல் பதிப்பகம், 25, பாண்டியன் நகர் 3-வது தெரு. கரிசல் குளம், மதுரை – 18. விலை ரூ. 50 கலையில் கஷ்டமானது, சிரிக்க வைப்பது என்பார்கள். அதைவிடக் கஷ்டமானது சிரிப்போடு சிந்திக்கவும் வைப்பது. இரண்டையும் ஒருசேரச் செய்து காட்டிய கலைஞன், என்.எஸ். கிருஷ்ணன். கலைக்காக மட்டுமல்ல அவரது கொடைக்காகவும் இன்று வரை நினைக்கப்படுகிறார். ‘எப்போது ஒருவன் லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவனிடம் இருக்கும் கலைத்திறமை போய்விடும்’ என்று சொன்ன மகத்தான மனிதனின் சுருக்கமான […]

Read more

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு, எஸ். வர்க்கீஸ் ஜெயராஜ், பக். 150, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 14. விலை ரூ. 150 முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறும், அதற்கடுத்து பல ஆண்டுகள் கழித்து வைகை அணை கட்டப்பட்டதன் வரலாறும் மிகச் சுருக்கமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பின் இணைப்பில் உள்ள குறிப்புதவி நூல்கள் மற்றும் அரசு ஆணைகள், பத்திரிகைக் குறிப்புகள் ஆகியன இந்த நூலின் புள்ளிவிவரங்கள் ஓர் ஆவணம் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரியாறு அணையில் பென்னிகுக்கின் […]

Read more

2012 யுக மாற்றத்தின் வாசல்

2012 யுக மாற்றத்தின் வாசல், மா. கணேசன், பக்.164, புதிய மானுடம் பிரசுரம், 222, அசோக் நகர் – II, காந்திநகர் அஞ்சல், வடக்குத்து, குறிஞ்சிப் பாடி தாலுகா. விலை ரூ. 100 ‘டிசம்பர் – 21, 2012 உலகம் அழிந்துவிடும், மாயன்களின் நாள்காட்டி அதோடு முடிந்துவிட்டது,’ இந்தச் செய்தி உலகெங்கும் தற்போது கிண்டலும் கேலியுமாக விவாதிக்கப்பட்டு வருகிறது! ‘யாரும் நம்பத் தயாராக இல்லை, நம்பவும் வேண்டாம் – ஆனால், நம் கண் முன்னே தினம் தினம் நடந்துவரும் நிகழ்வுகளும், நாம் படிக்கும் செய்திகளும், […]

Read more
1 2 3 4 5