மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 30ரூ. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து பிரேஞ்சு நாட்டின் சக்ரவர்த்தியாக உயர்ந்தவர் மாவீரன் நெப்போலியன். பல போர்களில் வெற்றி பெற்ற நெப்போலியன், ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மேலும், நெப்போலியனின் காதல் குறித்தும், அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் சீர்ததிருத்தங்கள் குறித்து விவரிக்கிறார் ஆசிரியர் சித்தார்த்தன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.   —-   வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, […]

Read more

விதுர நீதி

விதுர நீதி, குறிஞ்சி, 15-21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-471-2.html மகாபாரதத்தில், திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் தம்பி விதூரர். அவர் ஒரு வேலைக்காரிக்கு பிறந்தவர். ஆதலால், அறிவிலும், ஆற்றலிலும், நீதியிலும் சிறந்த அவரை தாழ்ந்த நிலையிலேயே கவுரவர்கள் வைத்திருந்தனர். பணிப்பெண் ஒருத்தியைத் தான் திருமணம் செய்து வைத்தனர். கவுரவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் அவர்களை திருத்த முயன்றார் விதுரர். அதனால் துரியோதனன் […]

Read more

அதிகம் பயணிக்காத பாதை

அதிகம் பயணிக்காத பாதை, பிரதீப் சக்ரவர்த்தி, பழனியப்பாபிரதர்ஸ், 5, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-1.html தமிழ்நாட்டில் பெரிய கோவில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதுபோல சிறிய கோவில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதிகம் பிரபலம் ஆகாத ஆனால் சிறப்புகள் உள்ள கோவில்கள் பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது. நன்றி; தினத்தந்தி, 4/4/2012.   —- 63 எளிய யோகாசனங்கள், வரதராஜன், பிரியா நிலையம், 53 கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை […]

Read more

மெய்யும் பொய்யும்

மெய்யும் பொய்யும், மேலாளர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் 612504, விலை 25ரூ. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் 21வது அதிபர் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், கயிலை மாமுனிவர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய அருளுரைகள், கருத்துரைகள், அறிவுரைகள் கொண்ட நூல். ஆன்மிகம், ஆலயவழிபாடு, தமிழ், வடமொழி, திருக்குறள், வெளிநாடுகளில் தமிழர்கள்… இவவ்று பல்வேறு பொருள் பற்றி, பயனுள்ள கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. ஆன்மிகம் பற்றியும், இலக்கியம் பற்றியும் பலருடைய மனதில் இருக்கக்கூடிய ஐயங்களுக்கு இந்த நூலில் விடை இருக்காது. எல்லோரையும் ஈர்க்கக்கூடிய நடையில் நூல் எழுதப்பட்டுள்ளது. வாசிக்கும்போதும் […]

Read more

அம்மாக்கள் வாழ்ந்த தெரு

அம்மாக்கள் வாழந்த தெரு, ஆசு, இருவாட்சி, சென்னை 11, பக். 120, விலை 70ரூ. கிராமத்தின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்களின் வேதனைகள், துயரங்கள் பல கதைகளில் வெளிப்படுகின்றன. மழையில்லாமல் எங்கெங்கும் தீய்ந்து போன நிலங்கள். கிராமத்து மனிதர்களுக்கு உணவுக்கும் வழியின்றிப் போகிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்குகள், தானே முளைத்து வளர்ந்திருக்கும் பண்ணை கீரைகள், சோற்றுக்கற்றாழை எனக் கிடைப்பதையெல்லாம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்டு, உயிர் வாழ வேண்டிய நிலையை, ஒரு சிறுகதை துயரத்துடன் […]

Read more

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல், முத்துநாடு பப்ளிகேஷன், 48/31, புதூர், அக்ரகாரம், தேவகோட்டை 630302, விலை – முதல் தொகுதி ரூ.600, இரண்டாம் தொகுதி ரூ 750. வானொலியில் தினமும் ஒரு தகவலைச் சொல்லி, மக்களை சிந்திக்கச் செய்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தகவலுடன் சேர்த்து அவர் சொன்ன குட்டிக்கதைகள் அழகானவை. அற்புதமானவை. அவர் சொன்ன நூற்றுக்கணக்கான குட்டிக்கதைகள், இரண்டு பெரும் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை படிப்பு, அறிவு, பந்தபாசம், மனித இயல்புகள் இவ்வாறு பொருள் வாரியாகத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. எல்லா நூல் நிலையங்களிலும் இடம் […]

Read more

அவஸ்தை

அவஸ்தை, யூ.ஆர். அனந்தமூர்த்தி, தமிழில்-நஞ்சுண்டன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-193-0.html பிரபல கன்னட எழுத்தாளரான யூ.ஆர்.அனந்த மூர்த்தி எழுதி 1978ல் வெளிவந்த அவஸ்தேவின் மொழிபெயர்ப்பு. அனந்தமூர்த்தியின் பெரும்பாலான எழுத்துக்களைப் போலவே மரபுக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் இந்தக் கதையும் சித்தாந்த அடிப்படையில் ஒரு சமூகப் பிரிவின் வீழ்ச்சியும் புதிய குழுக்கள் அதிகாரம் ஏற்பது பற்றியும் நாவல் பேசுகிறது. கிராமத்தில் மாடு மேய்த்து வந்த ஒரு சிறுவன் சமகம் […]

Read more

சமணம் வளர்த்த தமிழ்

சமணம் வளர்த்த தமிழ், பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் (மூன்று பாகம்) தமிழ் நிலையம், சென்னை 17,பக். 1233, விலை மூன்று தொகுதிகள் 700ரூ. வேதகாலத்திற்கும் முற்பட்டதான சமண சமயத்தின் மேன்மைகளைப் பற்றி, ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்பதும், தொல்காப்பியம் ஏசுநாதர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்திருக்கிறது. சமண […]

Read more

ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு

ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு, மு.முத்துவேலு, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 176, விலை 90ரூ. சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆட்சிமன்றம், நிர்வாகம், நீதித்துறைகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வரும்விதம் குறித்துப் பேசும் நூல். சோழர் காலத்தில் கூற்றம், கோட்டம், நாடு, வளநாடு மண்டலம் என்று நிர்வாக அடிப்படையில் நிலப்பகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது கழஞ்சு, பாட்டம், கூலிர முத்தாவணம், மேரை, காணம் என்ற தமிழ்ப் பெயர்களில் விற்பனை வரி வசூலிக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். சங்க காலம் ஆட்சித் தமிழின் பொற்காலம் […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more
1 2 3 4 11