மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127/63, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 397, விலை 200ரூ. இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் கல்வி கற்றத் தமிழ் மொழியின் சிறப்பை, உலகம் அறியச் செய்த பெருமைக்குரியவர் தவத்திரு தனிநாயக அடிகள், அவரின் நூற்றாண்டு விழா நினைவாக வெளிவந்திருக்கிறது இந்நூல். இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகளில் பயணக் கட்டுரையான ஒன்றே உலகம் தவிர, மற்ற நான்கும் தமிழ் இலக்கியம், பண்பாடு பற்றியவை. அடிகள் தாம் மேற்கொண்ட உலகப் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லியுள்ள தகவல்கள், […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ. அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை […]

Read more

குப்பை உலகம்

குப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ. சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருப்பூர் சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் நூலின் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சாயப்பட்டறைகளாலும், மின் குப்பைகளாலும் நெகிழி குப்பைகளாலும், நியூட்ரினோ ஆய்வுகளினாலும் இந்த உலகம் எவ்வளவு குப்பைக்காடாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது என்பதை அதன் தீவிரம் குறையாமல் எச்சரிக்கும் கட்டுரைகள் அதிகம். மனிதனின் நாகரீக வளர்ச்சி இயற்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக வாதாடுகிறது இந்நூல். -இரா. மணிகண்டன். […]

Read more

ஆசியாவின் பேரொளி

ஆசியாவின் பேரொளி, எம்.ஏ. பழனியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 55ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, அரசியல் பிரவேசம், சுதந்திர தாகம், பேச்சாற்றல், தைரியம் ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டங்கள், சிறைவாழ்வு, நிர்வாகத்திறன், இறுதி நாட்கள், மறைவு ஆகிய விவரங்கள் ஆகியவை படிக்க சுவாரசியமாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.   —-   சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், […]

Read more

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள்

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள், திருமதி. ஜாய்ஸ்ரேகா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ. விபத்து, தீக்காயம், மூச்சுத்திணறல் போன்ற சம்பவங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதல் உதவி செய்வத அவசியம். இது குறித்த செயல்பாடுகள் பற்றி இந்த நூலில் விளக்கப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.   —-   வரலாறாய் வாழ்ந்தவர்கள், வெற்றித்தமிழன், நீர் வெளியீடு, 10, 6லது தெரு, கே.கே. நகர், சென்னை 78, விலை 175ரூ. […]

Read more

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர்

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர், ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 16, விலை 300ரூ. உயிருக்கு நேராக தாய் மொழியைப் பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்ட வரலாற்றில் உணர்ச்சியும் கொந்தளிப்புமாக மொழியைக் காக்க நடந்த போராட்டம் எழுச்சியானது. தங்களுடைய உயிரைக் கொடுத்து மொழிகாக்க முயன்றவர்களின் உணர்வுகளால் தமிழகம் முழுக்க அலையடித்து எழுந்த போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஏராளமான உயிர்ப்பலிகள், ஆட்சி மாற்றங்கள் என்று துவங்கிய மொழிப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. […]

Read more

மனிதனாகும் பொருளே

மனிதனாகும் பொருளே, கே.வி. புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ. ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ்நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார். -ஜனகன்.   —-   ஸ்ரீ […]

Read more
1 3 4 5 6 7 8