வெண்முரசு

வெண்முரசு, ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம். ‘மகாபாரதத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் வெண்முரசு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு என்ற நாவலின் முதல் பகுதியை, சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டுள்ளது. மகாபாரதத்தை புதிய பார்வையில், இந்நாவல் பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, நாள்தோறும் அவரது இணைய பக்கத்தில் வெண்முரசு வெளியிடப்படும் என, அறிவித்து ஜெயமோகன் எழுதி வருகிறார். வீட்டில் நம் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் சென்னா கதைகள் மூலமும், ராஜாஜியின் வியாசர் விருந்து, பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட பல நூல்கள் மலமும், […]

Read more

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. தீவிரவாதம் மிதவாதம் 1950களிலிருந்து பல்வேறு இதழ்கில் எழுதிய படைப்புகளோடு புதிதாய் எழுதிய கட்டுரைகளையும் திரட்டி வெளிவருகிறது மு. ஸ்ரீனிவாசஸனின் கலை இலக்கிய வரலாறு மஞ்சரி. இதில் வரலாறு, கலை சார்ந்த அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளுமாக பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திராத, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் பற்றிய அருந்தொகுப்பாக உள்ளது இத்தொகுப்பு நூல். மொழிபெயர்ப்பாளர் பெ.நா. அப்புசுவாமியின் […]

Read more

வ.உ.சி. நூல் திரட்டு

வ.உ.சி. நூல் திரட்டு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கவிதைகள், தொகுப்பாசிரியர் வீ. அரசு, புலமைப் பித்தன் பதிப்பகம். பொருளும் மனமும் குன்றிடினும் யான் குன்றேன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய கவிதைகள், அவருடைய உரை ஆகியவற்றை, சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் வீ. அரசு தொகுத்துள்ள வ.உ.சி. நூல் திரட்டு என்ற நூலை படித்தேன். புலமைப் பித்தன் பதிப்பகம், அந்த நூலை வெளியிட்டுள்ளது. பிறப்பு, வளர்ப்பு, வக்கீல் தொழில், சுதந்திர போராட்டம், கப்பல் கம்பெனி நடத்தியது என, வ.உ.சி. எழுதி, […]

Read more

இதழுலகில் திரு.வி.க.

இதழுலகில் திரு.வி.க., மா.ரா. இளங்கோவன், அமுதா, பக். 182, விலை 120ரூ. தொழிலாளர்களே! கள்ளத் தலைவர்களே நம்பாதேயுங்கள்! காவி உடுத்தாத துறவி, துறவு பூணாத பிறவி, பட்டினத்தாரா? தாயுமானாரா? வள்ளலாரா? தமக்காக வாழாமல், பிறருக்காகவே தொண்டு செய்ய வாழ்ந்த புதுமைத் துறவி திரு.வி.க., புவி அறியா புதிய வரலாறு (பக். 14) என்ற அறிமுகத்துடன், தமிழ்த் தென்றல், தமிழ் முனிவர், சாது முதலியார்என, திரு.வி.க. அறிமுகம் செய்யப்படும் இந்த நூல், அவரது எழுத்து ஓவியங்களை நமக்கு விருந்து ஆக்குகின்றன. பேச்சிலும், எழுத்திலும், தமிழினம் தரம் […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள்,தொகுப்பாசிரியர்-என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், பக். 367, விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-9.html தமிழ் சிறுகதையுலகில் தனிப்பாய்ச்சலை நிகழ்த்தியவர் ஜெயகாந்தன். அவரது கதைகள் வெளியான காலத்தில், ஒரு பக்கம் பலத்த சர்ச்சைகள் உருவாகின, மறுபக்கம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வியந்து பாராட்டினர். பழமைவாதத்தின் மீது விழுந்த சவுக்கடி என்றே அந்த கதைகளை கூறவேண்டும். இந்தியில், பிரேம்சந்த் சிறுகதைகள் எழுதிய போது, இதே எதிர்வினைகளைத்தான் சந்தித்தார். முற்போக்கு எண்ணம் கொண்ட சிறுகதைகள் விவாதிக்கப்படுவதும், கடுமையான எதிர்வினைகளை […]

Read more

இலங்கை இந்திய மானிடவியல்

இலங்கை இந்திய மானிடவியல், சமயம் சமூகம் பற்றிய ஆய்வுகள், பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 222, விலை 175ரூ. சமூக பழக்க வழக்கம், சமய வழிபாடு போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். இதில் 14 கட்டுரைகள் உள்ளன. சமயம் தொடர்பாக, எட்டுக் கட்டுரைகளும், சமூகம் தொடர்பாக ஆறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கயில் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள், வழிபாடுகள் பற்றி சண்முகலிங்கனின் கட்டுரைகள் ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளன. கட்டுரைகள் ஒன்றுக்கு ஒன்று […]

Read more

வள்ளுவம் கூறும் வாழ்வியல்

வள்ளுவம் கூறும் வாழ்வியல், விதை வெளியீடு, ஈரோடு, விலை 275ரூ. வள்ளுவம் கூறும் வாழ்வியல் சிந்தனைகளான அறம், அன்பு, அருள், தவம், பொருள் ஈட்டும் முறைகள், இன்சொல், ஈதல், கல்வி, அறிவு, ஊக்கம், முயற்சி, மன உறுதி, ஒழுக்கம், பண்பு, நட்பு, எண்ணங்களில் உயர்வு, நிலையற்ற வாழ்வின் தன்மை போன்றவற்றையும், அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 100 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அதனோடு அறநூல்கள், இலக்கிய நூல்கள், சமய நூல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், பழமொழிகளையும் இணைத்து எல்லா தரப்பினரும் கற்றறியும் வண்ணம் தொகுத்தளித்துள்ளார் பொறியாளர் தே.ஹெலினா. இது […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வலியே மகிழ்ச்சி தமிழ்ப் பத்திரிகையுலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. பத்திரிகையாளனின் கருவிகளான எழுத்து நடை, சொற்சிக்கனம், மொழிவளம், சிந்தனைத் திறன், புதுமை தேடும் மனப்பாங்கு, வாசகர்களைச் சென்று சேரத் தேவையான எளிமை ஆகிய அனைத்தும், ஒவ்வொரு பத்தாண்டும் மாற்றமடைந்திருக்கின்றன. பத்திரிகையாளரான பெ. கருணாகரன் எண்பதுகள், தொண்ணூறுகள், புதிய நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் ஆகியவற்றில் வேறு வேறு தமிழ் இதழிகளில் பணியாற்றியவர். இவற்றில் […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ். ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். தமிழக வரலாற்றில் ஒரு நூற்றாண்டு கலை, அரசியலைப் புரிந்து கொள்வதற்கு, அவரது வாழ்வியல் அனுபவங்களுடன் சொல்லப்படும் இந்நூல் உதவக்கூடும். அவரது இளம்பிராயம், அவர் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற மதுரை பாய்ஸ் கம்பெனி,  அவரது அரசியல் பயணம் என்று எல்லாவற்றையும் படிப்பவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பெரியார், அண்ணா, என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, கருணாநிதி போன்றோருடனான […]

Read more

மறுபடியும்

மறுபடியும், கனகராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-194-6.html இன்னும் சிநேகம் இருக்கிறது தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த மறுபடியும். விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், […]

Read more
1 3 4 5 6 7 8