வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர், பிறமொழிக்கதைகள், தமிழில் வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. பிரேம்சந்த், தாகூர், பகவதி, சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். லாகூர் எவ்வளவு தொலைவு என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி. நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. […]

Read more

திருமுறைகளில் கலைகள் சமுதாயம் கோயில்கள்

திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள், பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, பக். 220, விலை 100ரூ. திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் மூலமாக, சைவத் திருமுறை மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி, அதன் மூலம் பல ஞான நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சமுதாயம், அருளியல், கலைகள், கோயில்கள் தொடர்பாக பன்னிரு திருமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தக்க ஆதாரங்களுடன் அறிஞர் பெருமக்கள் பதினெட்டுப் பேர் விரித்துரைத்துள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் காலத்தில் […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-2.html தமிழ் மொழிக்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது பங்கினை ஆற்றியுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களில் ஒருவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகூர் குலாம் காதிறு நாவலர். நாகூரில் 1983இல் பிறந்த நாகூர் குலாம் காதிறு, தமிழ் மொழியை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்திடமும், அரபி மொழியை முகைதீன் பக்கீர் சாகிபிடமும் கற்றுக் கொண்டவர். காப்பியங்கள், கலம்பகங்கள், அந்தாதிகள், மொழிபெயர்ப்புகள் […]

Read more

நூலின்றி அமையாது உலகு

நூலின்றி அமையாது உலகு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 244, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-233-3.html வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களை வாசிக்க செய்யும் இரா. மோகன் எழுத்தில், வானதி பதிப்பகம் வெளியிட்டு உள்ள நூலின்றி அமையாது உலகு என்ற புத்தக வாசிப்பு தொடர்பான புத்தகத்தை, சமீபத்தில் படித்தேன். பேசுவதை போன்ற எளிய  நடையுடன் பயணிக்கும் அந்த நூல், புத்தகங்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், புத்தகம் பற்றிய அறிஞர்களின் கருத்து, புத்தகம் பற்றிய பழமொழிகள் என, பல தடங்களில் […]

Read more

தி மைக்ரண்ட் சில்க் வேவர்ஸ் ஆப் தமிழ்நாடு ஏ ஸ்டி

தி மைக்ரண்ட் சில்க் வேவர்ஸ் ஆப் தமிழ்நாடு ஏ ஸ்டி, பேராசிரியர் சி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சக்தி கல்சுரல் அண்டு எஜுகேஷனல் டிரஸ்ட், மதுரை, பக். 448, விலை 500ரூ. பட்டு நூல்காரர்களை வடக்கிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததேன்? சவுராஷ்டிரா என்ற பொதுவானச் சொல், இந்த ஆங்கில நூலைப் பொருத்தவரையில், Sav rastra என்ற சொல்லை, வட இந்தியாவில் வாழ்பவர்களையும், Sou rastra என்பது தென்னகத்தில் வாழ்பவர்களையும் (பட்டு நூல்காரர் குறிப்பதாகும் என்ற குறிப்போடு துவங்கிறது. ஹரப்பா நாகரிக காலத்திலிருந்தே, உலக வர்த்தக அரங்கில், சவுராஷ்டிரர்கள் சிறந்ததொரு […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசவுந்தரி, இந்திய மருத்துவ மையம், பக். 1217, விலை 1000ரூ. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல ஏன் பிறந்தோம் பெண்ணாய் என சலிப்புத் தட்டும் இந்தக் காலத்தில், பெண்ணாய் பிறக்க, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என பாரதியார் எதை உணர்ந்து சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் டாக்டர் ஞானசவுந்தரியின் புத்தகத்தைப் படித்தபின் பாரதியாரின் கூற்று உண்மை என, நினைக்கத் தோன்றுகிறது. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல என வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட, அது எவ்வளவ கடினம் என்பதை, தன் கடிதங்களின் […]

Read more

துரோகம் துரத்தும்

துரோகம் துரத்தும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகிலன், கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-296-1.html பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், டாப் த்ரில்லர் நாவல்களில் ஒன்றான AN ACE UP MY SLEEVE என்ற ஆங்கில நாவலை தமிழில் அகிலன் கபிலன் மொழிபெயர்த்துள்ளனர். எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால் எளிதில் நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம். […]

Read more

நிகழ்காலம்

நிகழ்காலம், தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், விலை90ரூ. இடம் பெயரும் மீன் கூட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தை சுனாமி சூறையாடியபோது இராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான கடல் பகுதிகளில் மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், அப்பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் என்கிறார் பொன். தனசேகரன். ஒரு சதுர கி.மீ. அளவுக்கு நல்ல பவளப் பாறைகள் இருந்தால் போதும். மீன் பிடித் தொழில் உள்ளிட்ட பல துறைகளின் மூலம் ஆண்டுக்கு ஒன்று முதல் ஆறு லட்சம் டாலர் வரை வருமானம் […]

Read more

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்,

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-358-8.html அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. பணம் […]

Read more

வர்ச்சுவல் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ்

வர்ச்சுவஸ் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ், சேவலாயா அமைப்பு. சேவாலயாவின் அகல் விளக்கு வர்ச்சுவஸ் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ் என்ற தலைப்பில் அழகான ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சேலாலயா அமைப்பு. இன்றை குழந்தைகளுக்கும் அவசியமாகத் தேவைப்படுவத ஆன்றோர்களின் வாழ்க்கை முறைகளையும் சாதனைகளையும் பற்றி அறிந்து கொள்வதுதான். அந்த வகையில், இந்தச் சிறு நூலில் மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தியின் சுருக்கமான வரலாற்றுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கிற பலருக்கும் இந்தச் சிறு கட்டுரைகளால் பயனுண்டு. இன்றைக்குத் துப்புரவு […]

Read more
1 4 5 6 7 8