வேதபுரத்து நாயகிகள்

வேதபுரத்து நாயகிகள், ச. கணபதி ராமன், வெர்சோ பேஜஸ், புதுச்சேரி, பக். 160, விலை 100ரூ. மாரியம்மன் கோயில்கள் புதுச்சேரியில் தோன்றிய விதம், மாரி மழை என்பதன் விவரம், மாரியம்மனின் வரலாறு, அம்ன் கோயில்கள் இருக்கும் இடங்கள், அதனையொட்டிய தல வரலாறுகள், வழிபாட்டு முறைகள், இந்நூலில் எளிமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. கிராம மக்களின் வழிபாடு கடவுள்கள் சிறுதெய்வங்களே என்பதைச் சொல்லி, ஏழை மாரியம்மன் கோயில் முதல் பச்சை வாழி அம்மன், அங்காள பரமேஸ்வரி, துரோபதையம்மன், செங்கழுநீர் அம்மன், காமாட்சி, தளிங்சி காளியம்மன், படவெட்டி மாரியம்மன், ரோணுகா […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, டாக்டர் லக்ஷ்மி விஸ்வநாதன், சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனக்கவலையே. இது அதிகரிக்க அதிகரிக்க அது மன அழுத்த நோயாக உருமாறுகிறது. இந்த மன அழுத்தம் உருவாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது, தாழ்வு மனப்பான்மையே. இதை வெற்றி கொள்ள எதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பது மனநல மருத்துவர்களின் கருத்தாகும். நற்சிந்தனை மற்றும் நல்ல செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தன்னம்பிக்கையைப் பெற […]

Read more

பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்

பிரபலமானவர்களிள் வெற்றி ரகசியங்கள், ஜி. மீனாட்சி, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 152, விலை 100ரூ. பிரபலங்கள் யார்? அந்த நிலையை அடைய அவர்கள் கடந்து வந்த பாதைதான் என்ன? பிரபலமானால் மட்டும் போதுமா? என்பது தொடர்பாக பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 25 பேரை நேரடியாகச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு. முதலாவது கட்டுரை பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பற்றியது, தான் இன்று பிரபலமானாலும், சாதி சங்கங்கள், கட்சிகளிலோ சேராதே, படிப்பு, திறமையில் உன்னை விட உயர்வான இடத்தில் இருக்கிறவர்களைப் பார். பண […]

Read more

தாய்ப்பால் இங்கே கசக்கிறது

தாய்ப்பால் இங்கே கசக்கிறது, சுரபி விஜயா செல்வராஜ், விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-357-0.html அமரரான அமராவதி நதி தாய்ப்பால் இங்கே கசக்கிறது என்ற இந்த தொகுப்பில் 19 சிறுகதைகளை பதிவு செய்திருக்கிறார் சுரபி விஜயா செல்வராஜ். உள்ளே என வரிசையாக சொல்லப்படும் இவற்றில் புத்தகத்தின் தலைப்பில் உள்ள தாய்ப்பால் இங்கே கசக்கிறது என்ற டைட்டிலை தேடாதீர்கள். இருக்காது. உள்ளீடாக இந்தக் கதைகளில் பெரும்பாலும் அம்மாக்களின் துயரங்கள், பாச பிணைப்பு, இழந்து போன வாழ்க்கை […]

Read more

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. அரிய தகவல்களின் தொகுப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பிராமணர், பிராமணரல்லாத மாணவரிடையே கடைப்பிடிக்கப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வு 1924 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பிற புரவலர்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த குருகுலத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர வரதராஜுலு நாயுடு, பெரியோர் முதலியவர்கள் போராடினர். பத்திரிகைகள், பொதுமேடைகள், காந்தியிடம் புகார் என்று பல்வேறு கட்டங்களில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. பெரியார் […]

Read more

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 216, விலை 195ரூ. நூல் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னனி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர்தான் பயணம் செய்த நாடுகளில் படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான 100 கதைகளை தொகுத்திருக்கிறார். கவலைக்கும் பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை. எடிசனின் சில நிமிட பொறுமை, […]

Read more

கம்பன் தமிழும், கணினித் தமிழும்

கம்பன் தமிழும், கணினித் தமிழும், முத்துநிலவன், தஞ்சை அகரம் பதிப்பகம். திருக்குறளில் தமிழ், தமிழ்நாடு வார்த்தைகள் இல்லாதது ஏன்? தஞ்சை அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, முத்துநிலவனின் கம்பன் தமிழும், கணினித் தமிழும் என்ற இலக்கிய விமர்சன நூலை அண்மையில் படித்தேன். பழங்கால இலக்கிய கணிப்பும், நவீன இலக்கிய கண்ணோட்டமும் உள்ள இந்நூல், அண்மைக் காலத்தில் வெளியான இலக்கிய விமர்சன நூல்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் ஒரு கட்டுரையில் பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாட்டுக்கு இரண்டாம் பரிசும், ஆ. […]

Read more

என் உயிரே என் உறவே

என் உயிரே என் உறவே, (நாவல் பாகம் 1, 2) பிரவீணா, அருண் பதிப்பகம், பக். 492, 412, விலை தலா 200ரூ. சினிமா ரசிகர்களுக்கு உகந்த நாவல், ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா. கதாநாயகி கீர்த்தனா, பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய்விடுகிறாள். எனவே கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு பாலா பண உதவி செய்கிறான் […]

Read more

நிச்சய வெற்றி

நிச்சய வெற்றி, பிரகாஷ் ஐயர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-863-5.html ஆற்றல் இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆற்றலே அவனை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அது என்ன என்பதை அறிந்து, தன்னை உயர்த்திக் கொள்ளும் யுத்திகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சவாலான தருணங்களை எதிர்கொண்டு முன்னேறி, தலைமைப் பதவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இந்நூலாசிரியர். அந்த அனுபவங்கள் தந்த உந்துதலே இந்நூல் என்கிறார் நூலாசிரியர். திறமைக்கே முதலிடம் என்ற […]

Read more
1 6 7 8