அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்)

அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 40, விலை 30ரூ. கள் வேண்டுமா, வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள், மதுவுக்காக 2013ம் ஆண்டில் செலவழித்த தொகையில், ஐந்து லட்சம் வீடுகள் கட்டியிருக்கலாம். 200 மருத்துவக் கல்லுரிகளை உருவாக்கியிருக்கலாம். 10 ஆயிரம் பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் என்கிறார் நூலாசிரியர் (பக். 5). அதே ஆண்டில் சிகரெட், சுருட்டு, பீடிக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, அந்தப் பணத்தில் வேறு சமூக நலப்பணிகளையும் செய்திருக்கலாம் அல்லவா என்ற கேள்வி நம்முடையது. குடி, சிகரெட்டை விட்டு விடுவோம். […]

Read more

கனம் கோர்ட்டாரே!

கனம் கோர்ட்டாரே!, கே. சந்துரு, காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. செப்டம்பர் 2013 முதல், மார்ச் 2014 வரை, தினமலர் தி இந்து நாளிதழ்களில் வெளியான, 71 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. அண்டப்புரட்டன் அந்தவாதி / அகிலாண்டப் / புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி – சண்டப் / பிரசண்டன் நியாயவாதி – நாளும் / சகஸ்திரப்புளுகன் சாஷிக்காரனெனும் கியாதி (பக். 28) என, வேத நாயகம் பிள்ளையின் பாடலை எடுத்தாண்டுள்ள முதல் கட்டுரையானாலும், நீதிபதிகளுக்கு ஓய்வு தேவை, நீதிமன்றங்களுக்கு […]

Read more

விஷ்ணுபுராணக் கதைகள்

விஷ்ணுபுராணக் கதைகள், குரு பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 90ரூ. பதினெண் புராணங்களில், மிகவும் பழமையானது விஷ்ணுபுராணம் என்பர். இந்த நூலில் 33 அத்தியாயங்கள் உள்ளன. பராசரமுனிவர், மைத்ரேய மகரிஷிக்கு இந்த விஷ்ணு புராணத்தைக் கூறுகிறார். இந்திரனுக்கு துர்வாச முனிவர் சாபமிட்ட வரலாறு (பக். 26), துருவனின் வரலாறு (பக். 33), பிரகலாத சரித்திரம் (பக். 43), விஷ்ணு உபாசனை செய்பவரின் பலன்கள் (பக். 68), கலியின் தோஷங்கள் குறித்த பட்டியல் (பக். 96), கம்சனைக் கண்ணன் வீழ்த்திய விவரம் (பக். […]

Read more

தற்காலத் தமிழில் பின்னுருபுகள்

தற்காலத் தமிழில் பின்னுருபுகள், கோ. பழனிராஜன், இராசகுணா பதிப்பகம், பக். 152, விலை 130ரூ. தமிழ் மொழியில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என, நான்கு வகைப்படும். அவன் பார்த்தான் என்ற சொற்றொடரில் ஐ என்ற வேற்றுமை உருபினைச் சேர்த்து, அவனைப் பார்த்தான் என, எழுதினால் பொருள் வேறுபடுவதை உணரலாம். பொருளை வேறுபடுத்துவதால், அவற்றிற்கு வேற்றுமை என, பெயரமைந்தது. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் வரும் உருபுகள், தமிழில் சொல்லின் பின்னால் வருவதால், பின்னுருபுகள் எனப்பட்டன. வேற்றுமை உருபு, சொல்லுருபு, பின்னுருபு என்பனவற்றை ஆசிரியர் […]

Read more

அந்த நாள் ஞாபகம் கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்

அந்த நாள் ஞாபகம் கலைமாமணி சி.டி. ராஜகாந்தம், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், உடுமலைப்பேட்டை, பக். 55, விலை 100ரூ. சி.டி. ராஜகாந்தம் : திரை வரலாற்றின் ஒரு பகுதி எம்.ஜி.ஆரால் ஆண்டவனே என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகையால் தயாரிக்கப்பட்ட வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட தியாகராஜ பாகவதர் மரணப்படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழைம்பெரும் நகைச்சுவை […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1)

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1), கே.எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாஸ்ரமம், பக். 80,விலை 30ரூ. வேதங்கள் என்றால் அறியப்பட்டது எனத் துவங்கும் இந்நூல், வேதாந்த கருத்துக்கள், மனிதனின் வாழவில் ஒவ்வோர் நிலையிலும் சிறப்பாக வாழ வழிவகுக்கும் உன்னதமான கருத்துக் கருவூலம் என, உரைக்கிறது. பிரதானமாக கருதப்படும் 10 உபநிஷத்துகளில், கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த, கட மற்றும் தைத்திரீய உபநிஷத்துகளின் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. வாஜஸ்ரவசின் மகனாக விளங்கும் நசிகேதன் என்ற பாலகனுக்கு எமதர்ம ராஜன் மூன்று வரங்களை அளிக்கிறார். அந்த […]

Read more

பேராசிரியர் நன்னர்

பேராசிரியர் நன்னர், பேராசிரியர் ப. மருதநாயகம், ஏகம் பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நன்னனைத் தெரிந்துகொள்ள… தமிழ் மொழி இலக்கணம், கல்வியியல், பெரியாரியல், உரைநடையியல் என 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் நன்னன். தூய்மையான தமிழில் பேசுவது மற்றும் எழுதுவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவரும்கூட. அவரது ஆளுமை, புலமை, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை உள்ளடக்கி பேராசிரியர் ப. மருதநாயகம் இந்த நூலை எழுதியுள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணை நூல்களை மட்டுமே எழுதிவந்தவர் நன்னன். தனி […]

Read more

குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா

குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா, கே. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 250ரூ. அறிவுலக சகாப்தத்தில் உலக அரங்கில் உலவும் ஒரு கவி குழந்தைசாமி என்ற தமிழரின், உணர்ச்சிகளின் வடிகாலே, குலோத்துங்கன் என்ற கவிஞர் (பக். 6) என்ற சிவத்தம்பியின் இந்த கருத்தை முன்னிறுத்தி, டி.எஸ்.எலியட், ஜே.சி. ரான்சம் ஆகியோரை பின்பற்றி (பக். 7) மனிதவர்க்கம் மேம்பட, அறிவியல், கலை, பண்பாடு ஆகியவை இணைந்து  இழையோடும் குலோத்துங்கன் படைத்துள்ள, மானுட […]

Read more

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, தொகுப்பு கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. காரியத்தில் கறாராக இருந்த கண்மணி தமிழக சட்டசபையில் நடந்த ஒரு வினோதக் காட்சியைப் பற்றி சொல்கிறார் கே.டி.கே. தங்கமணி (பக். 433). கடந்த, 1973ம் ஆண்டு, தமிழக சட்டசபையில், சபாநாயகர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரம் அது. அவருக்கு ஆதரவான குரல்கள், சட்டசபையில் ஒலிக்காமல் தடுக்க, தி.மு.க.வினர் பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சபாநாயகர் மேசை மீது இருந்த மணியை, […]

Read more

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு புகோகா, தமிழில் பூவுலக நண்பர்கள், எதிர் வெளியீடு பதிப்பகம். தொழில் செய்வது தொழிலை கெடுக்க அல்ல! ஜப்பான் மொழியில், மசானபு புகோகா எழுதி, தமிழில், பூவுலக நண்பர்கள் மொழிபெயர்த்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உணவு தேவையை, வேளாண்மைதான் பூர்த்தி செய்கிறது. மண்ணின் தன்மை, அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்பவே, சாகுபடி இருக்கும். ஒரு கோழி, ஒரு நாளைக்கு எத்தனை முட்டையிடும் என்பது, அந்த கோழியின் தன்மையை பொறுத்தது. ஆனால் […]

Read more
1 4 5 6 7 8 9