ஓவியனின் கதை

ஓவியனின் கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், தஞ்சை, விலை 170ரூ. ஓவியக் கல்லூரியில் பயின்று தேர்வு பெற்ற ப. தங்கம், படக்கதைகள் வரைவதில் முத்திரை பதித்தவர். அவர் எழுத்தாளராகவும் இருப்பதால், படக்கதைகளுக்கான கதையை, அவரே சிறந்த முறையில் வடிவமைக்கக்கூடியவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே ஓவியங்களையும் வரைந்துவந்தார். எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர். எனவே, அவர் வாழ்க்கை வரலாற்றில் நவரசங்களும் நிறைந்துள்ளன. சிறந்த நாவலைப் படித்த திருப்தியைத் தருகிறது, இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- நம் நாடு கண்ட நல்லோர் […]

Read more

பஞ்சத்தந்திரக் கதை

பஞ்சத்தந்திரக் கதை, தமிழில் பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 496, விலை  200ரூ. ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருத மொழியில் இருந்தாலும், இதன் மேன்மையால் உலக மொழிகள் பலவற்றிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளது. இவை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பழங்கால நீதிக் கதைகள் என்றாலும், எக்காலத்திற்கும் எல்லா தரப்பினருக்கும் பயன் தரும் கருத்துகளைக் கொண்டவை. மகத நாட்டு மன்னன் சுதர்ஷனுக்கு வெகு காலத்திற்குப் பின் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தும்கூட, […]

Read more

கவிப்பேரரசு

கவிப்பேரரசு, தொகுப்பாசிரியர் கவிஞர் சி. சித்ரா, காவ்யா, சென்னை, விலை 150ரூ. கவிப் பேரரசு வைரமுத்துவின் மணி விழாவையொட்டி, 60 கவிஞர்கள் தீட்டிய கவிதைகள் கொண்ட நூல். கவிஞர்கள் ஒவ்வொரு கோணத்தில் கவிஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் கவிஞர் சி.சித்ரா, தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கவிதைகள் கவிஞரைப் பாராட்டுவதுடன் மட்டுமல்லாது, தமிழன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் அன்னைக்கு சிறந்த பொன்னாபரணம் இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- தலைவர் தளபதி பிள்ளைத்தமிழ், வள்ளுவர் பதிப்பகம், சென்னை, விலை […]

Read more

பெரியார் களஞ்சியம்

பெரியார் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை, விலை 210ரூ. தந்தை பெரியார் எழுதிய, பேசிய கருத்துகள் ஏற்கனவே ஏராளமான புத்தகங்களாக பிரசுரமாகி உள்ளன. அந்த வரிசையில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன. 36வது தொகுப்பாக கடவுள் – புராணங்கள் (பாகம் 4) என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. 1959ம் ஆண்டு முதல் 59ம் ஆண்டு ஜனவரி வரை பெரியார் பேசிய கடவுள் மற்றும் புராணங்கள் பற்றிய கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. கடவுள், […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், சீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 282, விலை 165ரூ. இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வர். குக்கிராமங்களிலும் கூட இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் என மண்ணைக் கொல்லும் நஞ்சுகளை எதிர்த்துப் போராடியவர். மண்ணுக்கேற்ற பயிர் ரகங்களைப் பயிர் செய்வது குறித்தும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்தும் இந்நூலில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேம்பு […]

Read more

மேடம் பவாரி

மேடம் பவாரி (பிரெஞ்சு நாவல்), குஸ்தாவ் ப்ளாபர், தமிழில் கோ. பரமேஸ்வரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.114, விலை 90ரூ. பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியத்திற்கு பற்பல கொடைகள் அளித்துள்ளது. அதன் முதல் வரிசையில், மேடம் பவாரி இடம்பெறும். கதாநாயகி எம்மா, கள்ளக் காதலிலும், ஆடம்பர வாழ்க்கையிலும் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால், தன் மனைவி நெறி தவறியவள் என்று தெரிந்து கொண்ட பிறகும், எம்மாவின் கணவர், அவளை மனதார நேசிக்கிறார். அவள் இறந்த பிறகும், அவள் […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், பக். 272, விலை 170ரூ. புவியின் 460கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார். இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண்பாறைகளாக உருவம் பெற்றன என, எளிய உரைநடையில் அறிவியலை தருகிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையிலும், தேவைப்படும் இடங்கள் எல்லாம், அதற்குரிய படங்களை தந்துள்ளது பாராட்டத்தக்கது. குரங்குகளில் […]

Read more

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வெ. தமிழழகன், விவேக் எண்டர்பிரைசஸ், பக். 176, விலை 125ரூ. படித்து பணியில் உள்ள பெண்களுக்குக்கூட சட்டக் கண்ணோட்டம் இல்லாத இந்த நாளில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய நூல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கான வாழ்வுரிமைச் சட்டங்கள், பணிப் பாதுகாப்புச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், பாலியல் வன்முறைச் சட்டங்கள், தலித் மகளிருக்கான சட்டங்கள் என, ஏராளமாக வந்துள்ளன. இந்த நூலில் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் உள்ளிட்ட, 19 தலைப்புகளில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப வன்முறைச் சட்டம் […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம் (அறுசமய விளக்க உரை), எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 120, விலை 80ரூ. ஆதிசங்கரரின் ஆறு சமயங்களை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விரிவாக, பாக்களாக பாடியுள்ளார். அந்த பாக்கள் சிலவற்றின் விளக்க உரையாக இந்த நூல் வெளிவந்துள்ளது. சவுரம் உள்ளிட்ட ஆறு சமயங்களுடன், குருவை சேர்த்து, சமயாதீதம் காண்கிறார் சுவாமிகள். நாகப்பாம்பின் குட்டிகள் முதலில் சூரியனிடமிருந்தே விஷம் பெறுகின்றன என்றும் (பக். 21), உருத்திரன் தேவர்கள் பட்ட துயரம் சகியாமல் கண்ணீர் விட்டதாகவும், அந்நீர் மண்ணில் விழுந்து, மரமாகி, காயாக, […]

Read more

தலைமறைவு காலம்

தலைமறைவு காலம், யவனிகா ஸ்ரீராம், நற்றிணை பதிப்பகம். விடுதலைக்கு பின் மிஞ்சியது என்ன? யவனிகா ஸ்ரீராம் எழுதிய தலைமறைவு காலம் என்ற கவிதை நூலை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய கவிதைகள் இவை. நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் பற்றி புரியாத பலவற்றை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, இந்த கவிதை நூலாசிரியர் தலைமையில், இளம் கவிஞர்கள் செயல்படுகின்றனர். மக்கள் குவியும் பொது நிகழ்வுகள், புத்தக கண்காட்சிகளில் இவர்களின் கவியரங்க மேடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுதலைக்கு […]

Read more
1 6 7 8 9