இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், கணித மன்றம், சென்னை, விலை 120ரூ. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவியல் சிந்தனைகள் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிரகங்களின் பெயர்களை, அவற்றின் அளவுக்கு ஏற்றவாறு பண்டைய இந்தியர்கள் அமைத்திருந்தனர். பிற்காலத்தில் கண்டறியப்பட்ட பல விஞ்ஞான தத்துவங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருகிறார்கள். இந்த உண்மைகளை பழம்பெரும் நூல்களில் இருந்து அறிய முடிகிறது என்கிறார் கணிதப் பேராசிரியர் இரா. சிவராமன். புதிய கருத்துக்களைக் கூறும் சிறந்த ஆராய்ச்சி நூல். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.   —- […]

Read more

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர்

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, விலை 300ரூ. இந்த நூலில் சொல்லப்பட்டு இருப்பது ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஆனால் அந்த வரலாற்றையே மர்ம நாவல்போல ஆக்கித்தந்து இருக்கிறார் ஆசிரியர். நாஜி என்ற பெயர், அதற்கான ஸ்வத்திக் சின்னம் ஆகியவை வந்தது எப்படி, அந்தக் கட்சி உருவான விதம் என்ன, இன்றைய அரசியல் பிரசார உத்திகளுக்கு ஹிட்லர் வழிகாட்டிய முறை, அவரது ஆளுமை, வக்கிர குணங்கள் என்று அனைத்தும் படித்து வியக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஜெர்மனியின் […]

Read more

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும், சி.வி. மலையன், மேகலா பதிப்பகம், பக். 280, விலை 150ரூ. இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, தினமலர் முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சுவினை எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் […]

Read more

முதற்கனல்

முதற்கனல், ஜெயமோகன், நற்றிணைப் பதிப்பகம், சென்னை, விலை 290ரூ. இதிகாசங்களையும் புராணங்களையும் தமிழ்நாட்டில் இந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் நிறையவே விமர்சனம் செய்தாயிற்று. இந்த 21வது நூற்றாண்டில் இந்தியாவின் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணம் தமிழில் புதிய மொழிபெயர்ப்பு பெற்றிருக்கிறது. வியாச மகாபாரதம், இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இரு பெரும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. பிரபஞ்சன் சில மாதங்களாக இதைத் தொடராகச் சிறப்பாக எழுதி வருகிறார். ஜெயமோகன் தன் இணையதளத்தில் தினம் ஓர் அத்தியாயமாக எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் நூலாக வெளிவந்து […]

Read more

முதல் கோணல்

முதல் கோணல், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 60ரூ. பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல். அரசியல், சமூகம் சார்ந்த கருத்துக்கள் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. சமகால நிகழ்வுகள் குறித்த அபிப்ராயங்கள் மூலம் வாசகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் எளிமையான மொழியில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் நூல் இது. நன்றி: குங்குமம், 23/6/2017.   —- கட்டற்ற மென் பொருள் ஜிம்ப் 2.8, ஜெ. வீரநாதன், கோவை, விலை 190ரூ. போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் ஜிம்ப் 2.8. மென்பொருளை பயன்படுத்தும் விதம்குறித்து தெளிவாக விளக்கும் […]

Read more

ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர், நா.மம்மது, சாகித்திய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. கருணாமிர்த சாகரம் தந்த கருணையாளர் தமிழ் இசை துறையில் மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலி மாவட்டம். சாம்பவர் வடகரை ஊரில் பிறந்து, படித்து, திண்டுக்கலில் பணிபுரிந்து, தஞ்சையில் இறுதி வரை வசித்து, அங்கேயே மறைந்தவர். இசை மட்டுமின்றி, சித்த மருத்துவம், தமிழாசிரியர் பணி, விவசாயம், பாடகர், வீணை, வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஓவியர், புகைப்படக் கலைஞர், பதிப்பாசிரியர், ஜோதிட பண்டிதர், கதாகாலட்சேப விற்பன்னர், இசை புரவலர் […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை), எட்டுதொகுதிகள், பதிப்பாசிரியர்கள்-முனைவர் ந.வெங்கடேசன், முனைவர் தெ.மேகநாதன், முனைவர் இரா. சதாசிவம், வெளியீடு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக். 2038. தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டு ஒம் நமோ நாராயணாய் எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட நூல். நானூற்று நான்கு கட்டுரைகளுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூல், வைணவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். வைணவ இலக்கியங்களான நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பாகவதம், ராமாயணம் முதலான இலக்கியங்களில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளையும், உணர்த்துப்பட்டுள்ள கருத்துகளையும் வெளிப்படுத்தும் […]

Read more

தி.க.சி.வின் நாட்குறிப்புகள்

தி.க.சி.வின் நாட்குறிப்புகள், சந்தியா பதிப்பகம், சென்னை. கம்யூ. இலக்கிய வட்டத்தின் பெயர் கலைஞர் கழகம் சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் தி.க.சி.யின் நாட்குறிப்புகள். அவர் 1948ம் ஆண்டு எழுதிய நாட்குறிப்பை தேடிப்பிடித்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம். ஒருவரின் டைரி அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இருக்கும். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த தருவாயில் தி.க.சி. எழுதிய டைரி அவரை பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ இல்லை. நண்பர்களை பற்றியும், அவர் படித்த நூல்களைப் பற்றியும் மட்டுமே உள்ளது. ஓராண்டு மட்டுமே இந்த நாட்குறிப்பை […]

Read more

தென்குமரியின் சரித்திரம்

தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல […]

Read more

உங்களின் முன் மாதிரி யார்?

உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை. ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் […]

Read more
1 144 145 146 147 148 336