குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?, ஜி.ஆர். இரவீந்திரநாத், சமூக மகத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், சென்னை, விலை 20ரூ. குஜராத் நலமா? குழந்தைகளின் நலம்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அளவுகோல். பிறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துபோகிற குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு நாட்டின் மருத்துவ அக்கறையை மருத்துவ அறிஞர்கள் எடைபோடுகின்றனர். ஏதோ விதி முடிந்து போச்சு. செத்துபோச்சு என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும்? அதென்னப்பா வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் விதி முடிய மாட்டேங்குது? என்று குறுக்குகேள்வி கேட்கும் […]

Read more

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, திருத்திய முதல் பதிப்பு மே 2014, தமிழாக்கம் எஸ். வி. ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 550ரூ. மனித விடுதலைக்கான வழி சொல்லும் அறிக்கை மனித விடுதலைக்குத் தேவை வெறும் அரசியல் மாற்றமல்ல. ஒட்டு மொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848ம் ஆண்டிலேயே உலகுக்கு அறிவித்த அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்த அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கம் தமிழில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈ.வே.ரா.வின் […]

Read more

முதல் விடுதலைப் போர்

முதல் விடுதலைப் போர், முனைவர் கே.ராஜய்யன், கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், ஜே. கோர்லே, தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன், நா. தர்மராஜன், பதிப்பாசிரியர் சின்னமருது தீனதயாளபாண்டியன், காவியன் பவுண்டேஷன், மதுரை, விலை 500ரூ. ஐரோப்பிய மேலாதிக்கம் துடைத்தொழிக்கப்படப் போவதால், நாம் கண்ணிரற்ற நிலைத்த மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறோம் என்று 1801ம் ஆண்டு மருதுபாண்டியர்கள் பிரகடனம் செய்தார்கள். அதே ஆண்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். ஆனால் 147 ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள். மருது பாண்டியருக்கு முன்பும் பின்பும் மரணித்த தியாகிகள் தொகை அதிகம். […]

Read more

குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ. திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.   —- வரலாற்றில் விழுப்புரம் […]

Read more

நஞ்சுண்டகாடு

நஞ்சுண்டகாடு, குணா கவியழகன், அகல் வெளியீடு, சென்னை, விலை 135ரூ. உள்ளேயிருந்து ஒரு குரல் இலங்கையில் நடந்த போரில் இணைந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் அதற்காகக் கொடுத்த விலையின் மதிப்பு என்னவென்பதை விரிவாகச் சொல்லி அது சரிதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்ற நாவல். பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்ட இந்நாவல் விடுதலைப்புலிகளின் அனுமதி மறுப்பு, அதன்பின்பு ஆசிரியரின் முள்வேலி முகாம் வாழ்க்கை ஆகியவற்றால் தடைப்பட்டுத் தற்போதுதான் அச்சேறியிருக்கிறது. காட்டு முகாமில் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களைப் பற்றிய விவரிப்பே இந்நாவல். கடுமையான […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. பூபதி, ஆ. அறிவழகன், பா. சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 560, விலை500ரூ. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ், அகாதெமி, குடியேற்றம் தமிழ்ச்சங்கம் மற்றும் செம்மூதாய் பதிப்பகம் இணைந்து, சென்னையில் நடத்திய பன்னாட்டுக் கருத்ரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைய காலம் தொட்டு நம் தமிழ் சமூகத்தினர் பலவிதமான மரபுகளைக் கடைப்பிடித்து வந்துள்னர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. நம் தமிழ் மரபு எவ்வாறு இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே […]

Read more

பால்ய வீதி

பால்ய வீதி, தெ.சு.கவுதமன், கவி ஆதவன் புத்தகக்கருவூலம், சென்னை, பக். 80, விலை 80ரூ. அன்றாட வாழ்வின் அனுபவத்திலிருந்து வாழ்வின் அர்த்தத்தை தன் கவிதைகள் வழி தேடுகிறார் கவுதமன். அப்படிப்பட்ட கவிதைகளின் தொகுப்பே பால்யவீதி. இச்சமூகத்தின் மேல் காட்டும் கோபம் ஆத்திரம் ஆதங்கம் சோகம் எல்லாமே, இச்சமூக மாற்றத்திற்கான ஒரு பாங்காக்கிக்காட்ட முயல்கிறார். ஏதோ பொழுதுபோக்குக்காக கவிதை எழுதாமல், அடக்கமுடியாமல் போன அந்த முதல் மனிதன் அடங்கியிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடும் பல மூத்திரச் சந்துகள் என்று சமூகத்திற்கான மாற்றம் வேண்டிய எண்ணப்பதிவுகளாக நம் மனதிற்குள் […]

Read more

துருக்கியில் முஸ்லிம் ஆட்சி

துருக்கியில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹிம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 288, விலை 160ரூ. இஸ்லாமிய சரித்திரத்தில் துருக்கியர்கள் சிறந்த பங்குபெற்று பணியாற்றி வந்துள்ளனர். இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக கடந்த 100 ஆண்டுகளாக துருக்கியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர் என்கிறார் நூலாசிரியர். 1258இல் இருந்து வரலாறு தொடங்குகிறது. பிறகு உர்கான், முதலாம் முராத், முதலாம் பாயஜீத் என நெடிய வரலாறாகப் பயணித்து, 1922 செப்டம்பரில் துருக்கியின் பெரும் பகுதியைக் கைப்பற்றி இருந்த கிரேக்கர்களை, நேசநாடுகளின் உதவியுடன் வெற்றிவாகை சூடியதோடு, துருக்கியில் யதேச்சதிகார முடியரசை […]

Read more

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ. இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை […]

Read more

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில்

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு, க. கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 492, விலை 370ரூ. உலகப் பொது மறையான திருக்குறள் குறித்து இதுவரை பல்வகை நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆயினும் யாப்பிலக்கண நோக்கில் திருக்குறளை இதுவரை எவரும் ஆய்வு செய்திலர். அப்பெரும் பணியை இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பரிமேலழகர், தேநேயப் பாவாணர், மு. வரதராசனார், வித்துவான், ச. தண்டபாணி, தேசிகர், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் கருத்து விளக்கங்களை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளையும் எழுத்து, […]

Read more
1 145 146 147 148 149 336