திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில்

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு, க. கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 492, விலை 370ரூ. உலகப் பொது மறையான திருக்குறள் குறித்து இதுவரை பல்வகை நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆயினும் யாப்பிலக்கண நோக்கில் திருக்குறளை இதுவரை எவரும் ஆய்வு செய்திலர். அப்பெரும் பணியை இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பரிமேலழகர், தேநேயப் பாவாணர், மு. வரதராசனார், வித்துவான், ச. தண்டபாணி, தேசிகர், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் கருத்து விளக்கங்களை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளையும் எழுத்து, […]

Read more

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள்

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 336, விலை 375ரூ. நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது. நாயக்கர் காலக் கலைகளில் காணப்படும் முக்கிய தன்மைகளைக் கண்டறிந்து […]

Read more

செவ்விலக்கிய மதிப்புகள்

செவ்விலக்கிய மதிப்புகள், செ. ரவிசங்கர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 112, விலை 50ரூ. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர் அவர்களுள் ச.வே.சு.வும் ஒருவர். தொல்காப்பியம் முழுமைக்கும் ச.வே.சு. எளிய விளக்கவுரை எழுதியுள்ளார். தம் உரை நூலில் பல்வேறு இடங்களில் அவர் எடுத்துக் காட்டுகளை தமிழ் சார்ந்து பயன்படுத்தியுள்ள திறத்தை ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய உரை எடுத்துக்காட்டுத் திறன் என்ற இந்நூலின் முதல் கட்டுரை விளக்குகிறது. அகப்பாடலில் இருக்கும் சங்ககாலச் சூழலியல் கட்டுரையில் வாழிடச் சூழலியல், சுற்றுப்புறச் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் போன்றவையும், தமிழர்களின் […]

Read more

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும்

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும், புரட்சியும் எதிர்புரட்சியும், இளவேனில், கார்க்கி பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சாதி ஏற்றத்தாழ்வு, மதவெறி, பெண் விடுதலை, தீவிரவாதம், ராணுவம், காவல்துறை, பாதல்சர்க்காரின் மூன்றாம் வகை நாடகம், பாப் இசை, நவீன ஓவியம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி மார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். கட்டுரைகளுக்கேயுரிய இறுக்கம் சிறிதுமின்றி, நூலாசிரியரின் உணர்வு வெள்ளம் வாசகர்களை இழுத்துச் செல்லும்வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் ஆசிரியர் முன் வைக்கும் கருத்துகள் மிகவும் […]

Read more

நடராஜ தரிசனம்

நடராஜ தரிசனம், டாக்டர் சி.எஸ். முருகேசன், பக். 400, விலை 275ரூ. ஆதியும் அந்தமும் முதல், எங்கும் சிதம்பரம் வரை, மொத்தம் 25 தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. அசையாத ஐந்தெழுத்து மந்திரத்தின் அசையும் வடிவம்தான் அவர் நடனம் என்ற ஆய்வுக் குறிப்பும், இறைவன் ஆடிய ஆதி நடனம் எது என்ற கேள்விக்கு, சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையானவை. இறைவன் ஆடிய ஆதிக்கூத்து, மூவகை தாண்டவத்திலிருந்து நூற்றெட்டு தாண்டவ வகை வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி, படங்களோடு பல செய்திகளை நூலாசிரியர் […]

Read more

தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க்கலையகம், மயிலாடுதுறை, விலை 350ரூ. தமிழிசையின் தொன்மையையும், தனித்தன்மையையும் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டும் ஓர் அரிய ஆய்வு நூல். தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் காணப்படும் இசைக்குறிப்புகள் குறித்த விரிவான ஆய்வு நூலாக விளங்குகிறது. இசை, பாவகை, பண்புகள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக் கலைஞர்கள், கூத்துக்கள் ஆகிய எட்டுத் தலைப்புகளின் கீழ் தொகுத்தும், வகுத்தும் தந்திருக்கும் செய்திகள், ஆய்வு முடிவுகள் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகின்றன. இலக்கண ஆய்வுகள் குறைந்து வரும் […]

Read more

கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் […]

Read more

கோடையில் ஒரு மழை

கோடையில் ஒரு மழை, ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 152, விலை 120ரூ. மருந்து கொடுக்காமல் பல்லை பிடுங்கி பழிதீர்க்கும் பல் மருத்துவர் கொரியன், சீனம், பிரித்தானியா, இலத்தீன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ள தொகுதி. இதில் மலை மேல் வந்தது கரடி என்ற கதைதான். தொகுதியில் உள்ள கதைகளிலேயே சிறந்த கதை. ஆலிவ் மன்றோ (கனடா) எழுதிய கதை. ஞாபக மறதி நோயில், தன் கணவனையே மறந்துவிடும், வயது மனைவியின் நலத்திற்காக, எதையும் செய்ய […]

Read more

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும்

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், எஸ். ஏகாம்பரநாதன், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சென்னை, பக். 456, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-8.html குழந்தை பருவத்திலிருந்தே ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவருடன் பேசிப் பழகி அவரது அன்பைப் பெற்றவரான இந்நூலாசிரியர், 1978லிருந்து 1983 வரை சுமார் 5 வருடங்கள் மஹா பெரியவருடன் சுமார் 5000 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றவர். காஞ்சிபுரத்திலிருந்து பூனாவிற்கு அருகிலுள்ள சதாராவுக்கு கால்நடையாகவே இந்தக் கடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்பன் காப்பியத்தை, இதுவரையில் யாரும் தொட்டு பார்க்காத அளவில் பல ஆழமான கருத்து பெட்டகங்களை வெளியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் நூலாசிரியர் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். இவர் சட்டத்தை கரைத்து குடித்தவர் என்பதால், கம்பனில் சட்டமும், நீதியும், நீதிபரிபாலனமும் எந்த அளவில் இருந்திருக்கிறது? என்பதை முழுமையாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். நீதி, மனுநீதி போன்ற சட்டம் தொடர்பான கருத்துக்களையெல்லாம் ஆழமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். […]

Read more
1 146 147 148 149 150 336