இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு, முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், தமிழில் ஆர்.பி.எம்.கனி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 208, விலை 100ரூ. இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக்கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கப் பிறந்த நூலாசிரியர், பல […]

Read more

கடவுளின் கைபேசி எண்

கடவுளின் கைபேசி எண், இ.சு. முரளிதரன், ஜீவநதி பப்ளிகேஷன்ஸ், பக். 76, விலை 200ரூ. ஈழத்துக் கவிஞர் இ.சு. முரளிதரனின் இச்சிறுகதைத் தொகுப்பு, ஈழத்து சிறுகதையின் போக்கு உலகச் சிறுகதைப் போக்குடன் இயைந்துபோகிறது என்பதற்கு உதாரணம். தொண்ணூறுகளுக்குப் பிறகான பின் நவீனத்துவப் பாணியிலான சிறுகதை வளர்ச்சிக்கு ஈழத்து அரசியல் சூழலும் பேரினவாத ஒடுக்குமுறையின் கொடூரமான நிலைமையுமே காரணம் என்பதற்கான சான்றாக கடவுளிக் கைபேசி எண் தொகுப்பு அமைந்துள்ளது. பாடக்குறிப்பு, பாராட்டுச் சான்றிதழ், கைபேசி உரையாடல், AB+ குருதியும் நீலநரியும் ஆழ்ந்த அர்த்தம் தருபவை. ஈழத்தின் […]

Read more

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன், தகழி சிவசங்கரபிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-053-5.html சமூகத்தோடு வளர்வதே தனிமனித வளர்ச்சி கேரளத்தின் பிரபல எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமியால், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, தோட்டியின் மகன் நாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இந்நாவலை வெளியிட்டுள்ளனர். மலம் அள்ளும் வேலையைச் செய்யும் தோட்டி, மலம் அள்ளுவதால் சமூகத்தில் ஏற்படும் அவமானம், கடுமையான வேலை செய்தும், குறைந்த கூலியே […]

Read more

ஊமைச் சங்கு

ஊமைச் சங்கு, கி. தனவேல் இ.ஆ.ப., குமரன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-296-4.html பால்ய கனவுகள் கி. தனவேல், இ.ஆ.ப., தனது ஊமைச்சங்கு கவிதைத் தொகுப்பில் சமூக அக்கறையோடு, இன்னும் ஈரம் காயாத பால்ய கால நினைவுகளையும், தான் பார்க்கும், காட்சித் தோற்றங்கள் பலவற்றையும் ரசனையோடு சின்ன சின்ன வார்த்தைகளில் கவிதைகளுக்குள் அடக்க முயற்சித்திருக்கிறார். குரோட்டன்ஸ் பூப்பதில்லையே எனச் சொல்பவர்கள் அது இலைகளாய் பூத்திருப்பதைப் பார்க்கத் தவறியவர்கள். என்பது ஒரு சின்ன உதாரணம். மனிதர்கள் […]

Read more

மேற்கத்திய ஓவியங்கள்

மேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 850ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-9.html ஓவிய ரசனை மேற்கத்திய ஓவியங்களைக் குறித்து சிலாகிக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் தமிழுக்குப் புதியது. 30,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் உருவான ஓவியங்களைக் குறித்த நூல் இது. இந்தப் புத்தகம் எடுத்தாளும் களம் மிகப்பெரியது. வெறும் அழகுணர்ச்சி சார்நத் கலைவடிவமாக ஓவியங்களை அணுகவில்லை அவர். […]

Read more

ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-294-0.html ஆசைகளின் பட்டியல் மணமாகி குடும்பம் நடத்தும் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த தீக்ஷா எனும் பெண் தான் எப்படி நடத்தப்படுகிறோம், தன்னுடைய ரகசியமான ஆசைகள் என்ன என்பதனை உணர்கிறார். அவற்றை அவர் அடைந்தாரா இல்லையா என்பது சுவாரசியமான நடையில் நாவலாகி உள்ளது. இது ப்ரீத்தி ஷெனாய் ஆங்கிலத்தில் எழுதிய The Secret Wish list என்ற […]

Read more

பாரதத்தின் பண்பாடு

பாரதத்தின் பண்பாடு, சுவாமி முருகானந்தா, காந்தலட்சுமி சந்திரமவுலி, வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999 டிச. 5ம் தேதி) தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலோவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை. நீங்கள் உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, […]

Read more

போருக்குத் தயார்

போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]

Read more

அபிராமி சமயம் நன்றே

அபிராமி சமயம் நன்றே, ராமநாதன் பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 736, விலை 486ரூ. ஒரு பரம்பொருளுக்கு பல வடிவங்கள், பெயர்கள் ஏன்? இந்நூல் சாக்த சமய நெறியில் நின்று, தாய்த் தெய்வமாகிய அம்பிகையை, சடங்குகள், வேள்விகள் இல்லாமல், எளிய முறையில் சாமானிய மக்களும் வழிபடுவதற்கு ஏற்ற வண்ணம், இனிய தமிழில் அபிராமி அந்தாதியை, அபிராமி பட்டர் தோற்றுவித்தார் எனவும், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பந்தரும், நம்மாழ்வாரும் எவ்வாறு ஓர் உந்துதலால் அருட்பாக்களைப் பாடினரோ, அதேபோல் பட்டரும் அம்பிகையால் ஆட்கொள்ளப்பட்டு பாடினார் எனவும் ஒப்புமைப்படுத்துகிறது. […]

Read more

வாணிதாசன் கவிதைத் திரட்டு

வாணிதாசன் கவிதைத் திரட்டு, மகரந்தன், சாகித்ய அகாடமி, பக். 304, விலை 185ரூ. தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? பாரதிக்கு ஒரு பாரதிதாசன். பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில் சூரியனாய் சுடர் விட்டுப் பிரகாசிப்பவர்  சுரதா. பவுர்ணமி நிலவாய் பவனி வருபவர் வாணிதாசன். விண் மீனை, வாணிதாசன் வர்ணிப்பதைப் பாருங்கள் தைத் திங்கள் குளம் பூத்த பூவோ? தமிழ் வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ? நாளைய தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று, […]

Read more
1 147 148 149 150 151 336