சூரிய உதடுகள்

சூரிய உதடுகள், சுசி. நடராஜன், சாரதி பதிப்பகம், 107/6, ரிச்சித் தெரு, சித்தாதிரிப் பேட்டை, சென்னை2, பக். 96, விலை 45ரூ. கவிதையின் ஆழம் கவிஞன் எடுத்தாளும் வார்த்தைகளில்தான் உள்ளது. மனிதம், இயற்கை, சமூகம், காதல், போட்டி, பொறாமை, சுதந்திரம் எதுவாக இருந்தாலும் சுசி. நடராஜனின் வார்த்தைகளில் ஓர் உயிர்ப்பு பெற்றுவிடுகிறது. இரட்டை மாடு வாழ்க்கை வண்டி பூட்டிய பிறகு பாரம் சுமக்க பயப்படும் மிரட்சி வாழ்க்கைப் பயணத்தில் எழும் மிரட்சியை ஆசிரியர் தொட்டுச் செல்லும் பாங்கில் ஒரு பெருமூச்சு எழுகிறது. வாழ்க்கையின் எச்சரிக்கை […]

Read more

நிமித்தம்

நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை வெளியீடு, 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 375ரூ. விடிந்தால் திருமணம் செய்துகொள்ளப்போகிற தேவராஜுக்கு இரவில் உறக்கம் வரவில்லை. நாற்பத்தியேழு வயதில் திருமணம் செய்துகொள்கிற அவனுக்கு திருமணத்துக்கு முதல்நாளே வந்துவிடுவதாகச் சொன்ன நண்பர்கள் யாரும் வரவில்லையே என்கிற வருத்தம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பின் வலியையே தாங்கி வந்திருக்கும் அவன், தன் வாழ்வை அந்த இரவில் திரும்பிப்பார்க்கிறான். அவன் வாழ்வதாகச் சொல்லப்படும் தென் தமிழகத்தின் நாற்பதாண்டு அரசியல் சமூக நிகழ்வுகளாக இந்த நாவல் […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை (இரண்டு புத்தகங்கள்), வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391ஏ, இராம் தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை தலா 500ரூ. இந்நூலாசிரியர் காவல்துறை உயர் அதிகாரியாக சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகவும் உள்ளார். தனது நீண்ட கால அனுபவத்தைக் கொண்டு காவல்துறைக்கு மிகவும் பயன் தரத்தக்க Police investigation Powers. Tactics and Techniques என்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு புத்தகங்கள், தற்போது காவல் புலன் விசாரணை என்ற […]

Read more

அவரது நினைவுகள்

அவரது நினைவுகள், தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில் யூமா. வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 125, விலை 100ரூ. தகழி 1985ல் ஞானபீட விருது பெற்றவர். செம்மீன், ரண்டிடங்கழி, தோட்டியின் மகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளவர் தகழி. பெரும்பாலான நாவல்கள் மனித வாழ்வின் தீவிரத் துன்பங்களிலிருந்து உருப்பெற்றவை. அந்த வரிசையில் ஓர் இருட்டுலக நிலவெளியை முற்றாகப் பெயர்த்து நம் மன மையத்தில் வைத்து வெளிச்சம் கொடுக்க வைத்த பெரு […]

Read more

மண் கசந்தால் மானுடமே அழியும்

மண் கசந்தால் மானுடமே அழியும், பி. தயாளன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 86, விலை 60ரூ. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நாம் மாசுபட வைத்துவிட்டோம். அதனால் மழை தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. உணவு தரும் பயிர்கள் இல்லாமல் போகின்றன. ஆலைகளின் கழிவு நீரால், நீர் நிலைகள் மாசடைந்து மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் மாசடைய வைக்கிறது. வளமான, அழகான, இனிமையான, சத்தான மண்ணைக் கெடுத்து, வருங்கால இனத்தையே கெடுத்து வருகிறான் மனிதன். நமது […]

Read more

போதை ராஜ்யம்

போதை ராஜ்யம், ரா.கி.ரங்கராஜன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ரா.கி. ரங்கராஜன் நக்கீரன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடர்கதையின் புத்தக வடிவம். கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பல் பற்றிய இந்தக் கதையில் விறுவிறுப்பு, திகில், திருப்பங்கள் எல்லாம் உண்டு.   —-   இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், நலவாழ்வு எல்லோருக்கும் அடையாளம், திருச்சி 621310, விலை 40ரூ. சர்வதேச அளவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற மேயோ […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 76, பாரதீஸ்வரர் காலனி, 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 350ரூ. எந்தவொரு தேவைக்கும் அரசை அணுகும்போது, அதற்குரிய விண்ணப்பத்துடன் அணுக வேண்டும். அந்த விண்ணப்பப்படிவங்கள் முறையாக இல்லையென்றாலோ, சரியாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அவை நிராகரிக்கப்பட்டுவிடும். இவ்விஷயத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்களே திணறும் நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை எளிதாக்கும் வகையில், அரசுத் துறைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய விண்ணப்பங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் இந்நூலாசிரியர். பொதுவாக, […]

Read more

அவளது பாதை

அவளது பாதை, சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. பெண்களின் அவலநிலையை கூறும் நூல். தெலுங்கு இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அப்பூரி சாயாதேவி தெலுங்கில் எழுதிய இந்த நூலை ஆசிரியர் கொ.மா.கோதண்டம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 28 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்பதை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். இக்கதைகளை படிக்கும்போது பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? என்று வியக்க வைக்கிறது. இதில் […]

Read more

அவ்வையார் அருளிய நல்வழி

அவ்வையார் அருளிய நல்வழி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 150ரூ. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அவ்வையார் கூறி சென்ற வழியில் தெளிவு காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடையளிக்கும் நூல் இது. பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் 41 தலைப்புகளில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் செயல்களை எளிமையான நடையில் தந்துள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள தத்துவ கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனித மாண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அவ்வையார் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கும் […]

Read more

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார்

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார், டி.வி. சுப்ரமணியன், செந்தூரன் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 150ரூ. உலகில் தோன்றிய முக்கியமான சமூகப் புரட்சியாளர்களுள் ஒருவர், தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆரம்பகால வாழ்க்கை, சமுதாய சிந்தனைகள், மதம், இதிகாசம் பற்றிய அவரது கருத்துகள், சுவாரசியமான சம்பவங்கள், மேடைப் பேச்சு, பொன்மொழிகள் என்று எளிய நடையில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஈ.வெ.ரா. என்ற மனிதரைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும், அவர் எப்படி சமுதாயத்தைப் புரட்டிப் போடுபவராக மாறினார் […]

Read more
1 199 200 201 202 203 336