சிவில் சர்வீஸ் வழிகாட்டி நூல்

சிவில் சர்வீஸ் வழிகாட்டி நூல், Cooridinator Dr. Tarachand. Publication-TaTA MCGraw Hill. Eduvation Private Limited. New Delhi. பக். 1330, விலை 1195ரூ. ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று, நம் நாட்டின் ஆட்சியாளர்களில் ஒருவராக உருவாக வேண்டும் என்பது படித்த நம் இளைஞர்களின் இலட்சிய நோக்காக உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அண்மையில் இதற்கான பாடங்களையும் தேர்வு கேள்வி முறையையும் மாற்றி அமைத்துள்ளது. இதுவரை முதல் தாளில் இருந்த சோதனைப் பகுதி இரண்டாம் தாளில் தரப்படுகிறது. […]

Read more

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், அகமுக சொக்கநாதர் குருஜி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. சித்தர்கள் பலரும் படிப்போர் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மறைமுகமாகவே கூறியுள்ளனர். அவ்வாறாகக் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை தம் ஆய்வுமுறை அறிவுடன் விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர் அகமுக சொக்கநாதர். அகமுகர் என்போர் சித்தர்களே, சித்தர்களின் கருத்துக்களோடு பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தியாவின் சிறந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் நிறுவியவர்கள் தமிழர்களே. இந்திய மொழிகளின் தாய்மொழி […]

Read more

பொது உடமைதான் என்ன

பொது உடமைதான் என்ன?, ராகுல்ஜி, தமிழ்ப் புத்தகாலயம், பு.எண்-34, ப.எண்-35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 98, விலை 35ரூ. நூலாசிரியர் சரித்திர ஆராய்ச்சிக்கும், இணையற்ற தர்க்க அறிவிற்கும், உலகப் புகழ் பெற்றவர். முதலாளித்துவ கொள்கையின் தோற்றத்திற்கும், அதற்கு மாறாக பொதுஉடமைக் கொள்கை ஏன் தோன்றிற்று என்றும் விளக்குகிறார் இந்த நூலில். சிறிய நூல்தான் என்றாலும் கருத்தாழம் மிக்க நூல். நன்றி: தினமலர், 20/11/11   —-   பணம்…பணம்…பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600002, […]

Read more

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணன் படைப்புகள், கோபிகிருஷ்ணன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 1022, விலை 800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-6.html   மறைந்த கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முழுமையாக இந்த தொகுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடவே கோபிகிருஷ்ணனை யூமா. வாசுகி எடுத்த நேர்காணலும். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் இருவிதத் தன்மைகளைக் காணலாம். ஒன்று, மொழியைக் கையாளும் விதம். அவருக்கே உண்டான திருகல் மொழித் தன்மை அதாவது மொழியை திருகித்திருகி பயன்படுத்தும் லாவகம் (உ-ம்) வார்த்தை உறவு போன்ற கதைகள். இரண்டு, உரித்துப்போட்டது போன்ற அப்பட்டமான […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்தினம், பிருந்தா ஜயராமன், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங், 47, NP ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, பக். 248, விலை 90ரூ குழந்தை சிறந்து விளங்காவிட்டால் பெற்றோர் சரியில்லை என்று சொல்லும் உலகம் இது. அதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம் என்றே பெற்றோர் நினைக்கின்றனர். அவர்களுடன் எப்படி பழகுவது, எப்படி உறவை மேம்படுத்துவது, சிறந்தவர்களாக வளர்க்கும் முறைகள், பிரச்னைகளைத் தீர்க்கும் முறைகள், குழந்தைகள் மன உலகம் எப்படி […]

Read more

வரும் போலிருக்கிறது மழை

வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-4.html தன்னைச் சுற்றி இருப்பவை, நடப்பவை என்று எதையும் விட்டுவிடவில்லை முருகேஷ். அத்தனையையும் தன் கவிதைப் பொருளாக்கியுள்ளார். அதுவும் ஹைக்கூ வடிவத்தில். மழைவாசம் தொட்டு, விரிசல் சுவரில் விழும் விதைகள் வளர்வதுகூட அவரது ஹைக்கூ பயணத்தில் அடக்கம். ஆகாயத்தையும் வானத்தையும் அளக்க இவரது கவிதைத் தடம் போதும். அத்தனை விஷயங்கள். படிப்பவர் யாராக […]

Read more

அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்

அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதிநகர், வியாசர்பாடி, சென்னை 39, பக். 385, விலை 170ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-2.html ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புப் படுகொலைகளை பட்டியலிடுவதோடு, அதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, ஈழத்துயர் குறித்து தமிழகத்தில் நடந்தேறிய அரசியல் நாடகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். தமிழ், தமிழர் உரிமைகள், பண்பாடு, கல்வி, சாதிவெறி, இனஅழிப்பு, முல்லைப் பெரியாறு, மீனவர் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு, […]

Read more

ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், மவுலவி எஸ்.ஏ.காஜா நிஜா மூத்தின்யூசுபி, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 80ரூ. கி.பி. 712லிருந்து கி.பி. 1492வரை, 780 ஆண்டகள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பேருதவி புரிந்தது. அத்தோடு மட்டுமல்ல. அந்த இணையற்ற திட்டங்கள், ஐரோப்பாவின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி, அவர்களுக்கும் நன்மை விளைவித்தது. கி.பி. 1442ல் ஸ்பெயினில் முஸ்லிம்களின் […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் […]

Read more

இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்

இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள், மலையமான், அன்பு பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. நாய்க்கு நன்றி சொல்லவும், பூனைக்கு கோபத்தை வெளிப்படுத்தவும், அதன் வால்கள் பயன்படுவதைப்போல, ஆடு, மாடு, அணில், நாய், பூனை, குதிரை, குரங்கு, கங்காரு உள்ளிட்டவை அதன் வால்களை என்னென்ன காரணங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன? எந்தெந்த உயிரினங்கள் தனது உணவுத் தேடலையும் தண்ணீர்த் தாக்கத்தையும் எப்படி பூர்த்தி செய்து கொள்கின்றன? என நூலில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அற்புதம். சூரியப்பறவை தவிட்டுக்குருவி உள்பட 5 பறவை இனங்கள், கடல் குதிரை, கடல் […]

Read more
1 270 271 272 273 274 336