தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2

தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2, கே. ஏ. ராமசாமி, சாதுராம் பதிப்பகம், முதல் தொகுதி விலை 300ரூ, இரண்டாம் தொகுதி விலை 230ரூ. ராமபிரானுக்க அனுமனும், பாண்டவர்களுக்கு கண்ணனும் தூது சென்றது வரலாற்றில் சிறப்பானவை. ஒப்புமை கூற இயலாதவை. நவீன அரசியலுக்கும் வழிகாட்டும் வகையில் நுணுக்கங்கள் கொண்டவை. இந்த நாட்டின் பாரம்பரியத்தில் அரசு, ஆளுமை, நிர்வாகம், நிதி என்று எல்லா துறைகளுக்கும் முன்னோடி கருத்துக்கள், இலக்கியத்தில் உள்ளன. தமிழில் தூது, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்றவை, தமிழை உயிரோட்டத்துடன் […]

Read more

பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ. பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து […]

Read more

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 232, விலை 175ரூ. தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக்கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் […]

Read more

நீங்களும் இராமனாகலாம்

நீங்களும் இராமனாகலாம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 136, விலை 65ரூ. மகாத்மா காந்திஜி ஒரு முறை, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் ராம பிரானாக ஆகலாம் என்று கூறியுள்ளார். அதையே தலைப்பாக்கி இந்த நூல் ராமபிரானின் உயரிய குணநலன்களை விவரித்து, வேத நெறிகளின்படி வாழும் ஒவ்வொரு மனிதனும், உயர் நலங்கள் அனைத்தையும் பெறுவான் என எடுத்துரைக்கிறது. ராமனைப் பற்றியும், ராமாயணச் சிறப்பு பற்றியும் கூறுவதோடு, கண்ணனின் தூது, சமாதானத்தின் வெளிப்பாடு என்று ஒரு நெடுங் […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், பக். 560, விலை 350ரூ. ஆடுவதும், ஓடுவதும் அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது. சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் […]

Read more

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.   —-   […]

Read more

காலத்தை வென்ற சித்தர்கள்

காலத்தை வென்ற சித்தர்கள், குருப்பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. அபூர்வமான சக்தி படைத்த சித்தர்கள், காலத்தை வென்று வாழ்ந்தவர்கள். அவர்களுடைய சக்திகள் பற்றியும், சிறப்புகள் பற்றியும் கூறுகிறது இந்நூல்.   —-   பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், 100, லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை, அடையாறு, சென்னை 20, விலை 120ரூ. பால்பண்ணைத் தொழில்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். இந்தத் தொழில்களைத் தொடங்க அரசு மானியம் […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more

தாய்மை

தாய்மை, டாக்டர் ஜெயம் கண்ணன், கர்ப்ப ரக்ஷாம்பிகை மகப்பேறு மையம், யுனைடெட் இந்தியா காலனி, 4, ஆறாவது குறுக்குத்தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 300ரூ. தாய்மை என்ற அற்புதமான அனுபவத்தை அடைந்த கணத்தில்தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள். அதனால்தான் தாய்மை அனுபவத்திற்கு நிகராகச் சொல்வதற்கு இந்த உலகின் வேறு எதுவுமே இல்லை என சொல்லப்படுகிறது. கருமுட்டை தயாராகும் முதல் வாரம் தொடங்கி 40 வாரங்களில் ஒரு சிசு படிப்படியாக அடையும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் குழந்தைக்கு எப்போது இதயம் துடிக்கத் தொடங்குகிறது? எப்போது […]

Read more
1 268 269 270 271 272 336