வெள்ளந்தி மனிதர்கள்

வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ. சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.   —-   ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ. ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.   —-   இந்திய விஞ்ஞானிகள், […]

Read more

நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?

நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?, டாக்டர் ஏ.ஈ. செல்லையா கல்வி அறக்கட்டளை, ஏபி147, மூன்றவாது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 75ரூ. திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகுவது அதிகமாகிவிட்டது. இதற்கு தீர்வு காண்பது எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார் சி. வசந்தகுமாரி செல்லையா அவர் வழக்கறிஞராக இருப்பதால் தான் சந்தித்த பல வழக்குகளை மேற்கோள் காட்டி, பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார். வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல்வேறு வழிமுறைகளையும் கூறுகிறார்.   […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 1, சைவ-சமய-தமிழகம், முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வ சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 895, விலை – 10 தொகுதிகளும் சேர்த்து 15000ரூ. சைவ சமயம், தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக்களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை […]

Read more

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி, ச. பொன்ராஜ், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆவடி, சென்னை 600054, பக். 34+230. நம் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிகள் பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. அர்ஜுன் போர் ஊர்தி பற்றியும், அதன் வடிவமைப்பு முறைகள் பற்றியும், சாதாரணமானவர்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நூலாசிரியர் விளக்கியுள்ளார். தரம் மிக்க தாளில், வண்ணப்படங்கள் சிறப்புடன் அச்சிடப் பெற்றுள்ளன. மாணாக்கர்கள் பாதுகாப்பு துறைப் பணிகளில் ஈடுபட, இந்நூல் […]

Read more

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ. திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை […]

Read more

இந்தியாவில் ஓரினப்பால்

இந்தியாவில் ஓரினப்பால், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், பக். 128, விலை 100ரூ. ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானதுதான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு. ஓரினச் சேர்க்கையை பல மதங்களும் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன. இந்தியாவில் 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன்படி, ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக் குரிய குற்றமாக இருந்தது. ஆனால் […]

Read more

இலக்கியத் திறனாய்வும்

இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ. படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்புதான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ்பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக்கண் கொண்டு இலக்கியத்தை பார்த்து அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைதான் திறனாய்வுகலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக […]

Read more

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 440, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ். பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ். பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்கத் திரும்பிவிட்டார். அவருடைய […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more
1 267 268 269 270 271 336