எதற்கு ஈழம்?

எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ. ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், […]

Read more

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் […]

Read more

உடன்கட்டை

உடன்கட்டை (ஒரு வரலாற்று ஆய்வு), செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 112, விலை 50ரூ. உடன்கட்டை ஒழிப்பு என்றதும், நமக்கு ராஜாராம் மோகன்ராய் நினைவுக்கு வருகிறார். டிசம்பர் 4, 1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுவது, சட்ட விரோதமான தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றினார். இச்சட்டத்திற்குப் பின்தான் இந்தியாவில் உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்தது. இந்நூலில் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததையும், அதற்கான காரணங்களையும் அதை ஒழிக்கச் சட்டங்கள் வந்தது […]

Read more

சான்றோர் கவி

சான்றோர் கவி, முனைவர் அ. பாண்டுரங்கன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 192, விலை 120ரூ. ஆராய்ச்சி எண்ணமுடையோர்க்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் ஏழினைக் கொண்டது இந்நூல். ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளையும், ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரை பாராட்டலாம். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ள முறை சிறப்பானது. எட்டுத்தொகை நூல்களை படிக்க விழைபவர்களுக்கு, முதல் நான்கு கட்டுரைகள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் […]

Read more

இலக்கியச் சித்தர்

இலக்கியச் சித்தர், முனைவர் கா. செல்லப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 50ரூ. நான் ஓர் ஆசிரியன், நம்பிக்கையோடு மனித குலத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையே, என் வாழ்வின் அடிப்படை என்று வாழ்ந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் ஒட்டுமொத்த இலக்கியப் பணிகளை மிகச் சுருக்கமாக, அதே வேளையில் மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமைவாய்ந்த முனைவர் செல்லப்பன். உடல் உண்டு, ஆகவே வாழ்வதற்கு விஞ்ஞானம் தேவை. உள்ளமுண்டு. ஆகவே சமுதாயக் […]

Read more

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை, வி. சந்திரன், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழிநுட்ப வளாகம், சென்னை 113, பக். 170, விலை 75ரூ. நூலின் தலைப்பில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம் இது. தமிழ் மொழியுடன், பிறமொழியிலும் சிறப்பான பாண்டித்தியம் உள்ளவர்களால் மட்டுமே, மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட முடியும். மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் இருக்கிறது. மேலும், மொழிமாற்றம், செய்யப் பெற்றதும், இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடியதுதான். நிர்வாகம், சட்டம், தொழில்நுணுக்கம் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகையில், புதிய சொல்லாக்கம் தவிர்க்க […]

Read more

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி […]

Read more

புதுக்கவிதை மொழி

புதுக்கவிதை மொழி, முனைவர் மா. கோவிந்தராசு, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 225, விலை 125ரூ. கவிதை வடிவமோ, கவிதைத் தன்மையோ மொழிக் கட்டமைப்போ இல்லாமல் கவிதை எழுதக்கூடாது என்கிறார் ஆசிரியர் மொழியின் மரபினையும், அமைப்பினையும் அறிந்து கவிதை படைக்க வேண்டும் என்கிறார். எழுத்து, சொல், தொடர் அமைப்பு, புதுக்கவிதையில் எவ்வாறு வரவேண்டும், எவ்வாறு வரக்கூடாது என்றெல்லாம் விளக்குகிறார். (உதாரணம்) கவிதைக்கு மொழித் தூய்மை இன்றியமையாததாகும். வழக்கில் உள்ள செந்தமிழ்ச் சொற்களே கவிதையில் இடம் பெற […]

Read more

அமிர்தம்

அமிர்தம் (சிறுகதை இரண்டாம் தொகுதி), எஸ். ஷங்கர நாராயணன், சு. வேணுகோபால், நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 176, விலை 85ரூ. தீனிப்பிரியர்களை சாப்பாட்டு ராமன்கள் என சாடுகிறோம். ஆனால் ரசித்துச் சாப்பிடுவதிலும், ருசித்துச் சாப்பிடுவதிலும் ஆர்வம் கொள்ளாதவர்கள் யார்? அது தவிர இந்த நாட்டில் ஒரு பட்டினிப் பட்டாளம் இருக்கிறது. அடுத்த வேளைச் சோறு எங்கே கிடைக்கும்? என தெரியாத நிலை. பசி பற்றியும், ருசி பற்றியும் உணவு பற்றியும் […]

Read more

கலாம் காலம்

கலாம் காலம், ஆதனூர் சோழன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை 14, பக். 128, விலை 80ரூ. நல்ல புத்தகங்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல மனிதர்கள் துணையோடு எவ்வளவு அறிவைப் பெற முடியுமோ அவ்வளவு அறிவை சேகரியுங்கள், கடுமையாக உழையுங்கள், விடா முயற்சியுடன் பிரச்னைகளை தோற்கடித்து வெற்றி பெறுங்கள் என்றெல்லாம் நம் நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் அப்துல் கலாம், இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். அப்துல் கலாமின் எழுச்சி மிக்க வரலாற்றைச் சொல்லும் உணர்ச்சிக்காவியம். -எஸ்.குரு.   —-   […]

Read more
1 288 289 290 291 292 336